நடப்பு
Published:Updated:

மியூஸிக் ஸ்ட்ரீமிங் ஆப்ஸ்

மியூஸிக் ஸ்ட்ரீமிங் ஆப்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
மியூஸிக் ஸ்ட்ரீமிங் ஆப்ஸ்

கேட்ஜெட்ஸ்

மொபைலில் பாடல் கேட்க வேண்டுமென்றால், சில ஆண்டுகளுக்குமுன் எஃப்.எம் ரேடியோவும், மெமரி கார்டில் பதிந்துவைத்திருக்கும் பாடல்களும் தான் ஒரே வழி. எனவே, பிடித்த பாடல்கள் அனைத்தையும் மெமரி கார்டில் சேமித்து வைத்துக் கொள்வோம். ஆனால், இப்போது நிலைமையே வேறு. கோலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை எந்தப் பாடலையும், சில நிமிடங்களில் தேடிக் கேட்டுவிட முடியும். எல்லாமே கிளவ்டிலிருந்து  கிடைக்கின்றன என்பதால், பாடல்களை டவுன் லோடு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. அப்படி இசைப் பிரியர்களுக்குக் கைகொடுக்கும் சில மியூஸிக் ஸ்ட்ரீமிங் ஆப்ஸ் இங்கே...  

மியூஸிக் ஸ்ட்ரீமிங் ஆப்ஸ்

விங்க் மியூஸிக்  (Wynk Music)

ஏர்
டெல் நிறுவனத்தின் மியூஸிக் ஆப்தான் இந்த விங்க். 20 லட்சத்துக்கும் அதிகமான பாடல்கள், தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழிகள், பாடல்களை வகைவகையாகத் தொகுத்திருக்கும் விதம்    எனக் கலக்குகிறது இந்த ஆப்.   

மியூஸிக் ஸ்ட்ரீமிங் ஆப்ஸ்

இதன் மூலம் அதிகபட்சம் நான்கு மொழிகள் வரை தேர்வு செய்துகொள்ளலாம்; மொபைலில் இருக்கும் ஃபைல்களை ப்ளே செய்ய எம்.பி.3 ப்ளேயராகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். தனித்தனி பாடல்கள் தவிர ரேடியோ வசதியும் இதில் உண்டு. நிறைய பாடல்கள், தரமான ஆடியோ, பாடல்களை ஹலோ டியூனாக செட் செய்யும் வசதி போன்றவை இதன் சிறப்பம்சங்கள். 

டவுன்லோடு செய்ய:
http://bit.ly/1tWqrWs

மியூஸிக் ஸ்ட்ரீமிங் ஆப்ஸ்

சாவ்ன் மியூஸிக் (Saavn Music)

மிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட, பல்வேறு மொழிப் பாடல்களை இதில் இலவசமாக கேட்கலாம். ஒவ்வொரு மொழியிலும் டாப் ஆல்பங்கள், அன்றைய வாரத்தின் ட்ரெண்டிங் பாடல்கள், பிரத்யேக மியூஸிக் சானல்கள் என எப்படி வேண்டுமானாலும் பாடல்களைத் தேர்வு செய்து கேட்கமுடியும். இவை தவிர, நம் மொபைலில் இருக்கும் ஆடியோ ஃபைல்களையும் இந்த ஆப் மூலம் ப்ளே செய்ய முடியும்.

நேர்த்தியான வடிவமைப்பும், வேகமான செயல் பாடுகளும்தான் இதன் ப்ளஸ். தமிழிலும் பழைய பாடல்கள் தொடங்கி சமீபத்தில் வெளியான புதுப்படங்கள் வரை நிறைய பாடல்கள் இருக் கின்றன. விவேகம், மெர்சல் ஆகிய தமிழ்ப் படங்களின் பாடல்கள் முதலில் இதில்தான் வெளியானது. இலவச ஆப் வெர்ஷனில், பாடல்களை டவுன்லோடு செய்ய முடியாது. ஆன்லைனில் மட்டுமே கேட்க முடியும்.

டவுன்லோடு செய்ய: http://bit.ly/1uqB0QK

மியூஸிக் ஸ்ட்ரீமிங் ஆப்ஸ்

கானா மியூஸிக் (Gaana Music)

மு
ப்பது மில்லியனுக்கும் அதிகமான பாடல்களைக் கொண்ட ஆப், கானா. பல மொழிகளில் உள்ள பாடல்களைக் கேட்க மட்டுமல்ல, இந்த ஆப்பை ஒன்பது மொழிகளில் பயன்படுத்தவும் முடியும்.

பாடல்கள் மட்டுமின்றி, ரேடியோ வசதியிலும் அசத்துகிறது கானா. ரேடியோ மிர்ச்சி ஸ்டேஷன்களை இந்த ஆப்பில் கேட்க முடியும். இதுதவிர, ஸ்பெஷலான சில ரேடியோ சானல்களும் கேட்கக் கிடைக்கின்றன. பாடல்களை டவுன்லோடு செய்யவும், விளம்பரங்களின்றி ஆப்பைப் பயன்படுத்தவும் மட்டும் பணம் கட்ட வேண்டும். மற்றபடி இலவச ஆப்தான் இது.

டவுன்லோடு செய்ய:
http://bit.ly/1l1FiHF

- ஞா.சுதாகர்