நடப்பு
Published:Updated:

டைம் மேனேஜ்மென்ட் ஆப்ஸ்!

டைம் மேனேஜ்மென்ட் ஆப்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
டைம் மேனேஜ்மென்ட் ஆப்ஸ்!

கேட்ஜெட்ஸ்

நேரம் விலை மதிப்பில்லாதது என்பது அனைவருக்கும் தெரியும். வாழ்வில் முன்னேறுவதற்கு நிதி நிர்வாகம் போலவே, நேர நிர்வாகமும் மிகவும் அவசியம். நம் நேரத்தைச் சரியாக நிர்வகிக்கவும், இலக்குகளை விரைந்து எட்டவும் உதவும் இரு ஆப்ஸ் இங்கே...     

டைம் மேனேஜ்மென்ட் ஆப்ஸ்!

டைம் ட்யூன் TimeTune

தி
னசரி வேலைகளைத் திட்டமிட்டுச் செய்ய உதவும், டிஜிட்டல் டைரிதான் இந்த டைம் ட்யூன். நம்முடைய தினசரிப் பணிகள், அன்றாட நிகழ்ச்சிகள் போன்றவற்றை இவற்றில் குறித்து வைத்துக்கொள்ளலாம். கிட்டத்தட்ட டைரியில் எழுதிவைப்பது போலத்தான் இதுவும். இப்படி நம் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து உள்ளீடு செய்வதன் மூலமாக, காலையில் செய்தித்தாள் படிப்பதில் தொடங்கி, திருமண நிகழ்ச்சிகள் வரைக்கும் அனைத்தையும் மிஸ் செய்யாமல், ஃபாலோ செய்யமுடியும். 

டைம் மேனேஜ்மென்ட் ஆப்ஸ்!இப்படி நாம் பதிவு செய்யும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொகுத்து, ஒரே டைம்லைனில் காட்டிவிடுகிறது டைம் ட்யூன். இந்த ஆப் வண்ணமயமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்தாலும்கூட, ஒவ்வொன்றையும் தெளிவாகப் பார்க்க முடிகிறது. இன்னும் சில சிறப்பம்சங்களுடன் புரோ வெர்ஷன் இருந்தாலும், இலவச வெர்ஷனிலேயே போதுமான அளவுக்கு வசதிகள் இருக்கின்றன. 

நிகழ்ச்சிகளை நினைவூட்டுவதற்கான ரிமைண்டர் ஆப்ஷன்களும் இருக்கின்றன. மிக எளிதாகவும்  விரிவாகவும் நிகழ்ச்சிகளைக் குறித்து வைத்துக்கொள்ள முடியும். கூகுள் காலண்டர், மொபைல் போன்களிலிலேயே இருக்கும் ரிமைண்டர் ஆப் போன்றவையும் இதேபோல நேர நிர்வாகத்துக்குப் பயன்படுவதுதான். ஆனால், அவற்றைவிடவும் கூடுதல் சிறப்பம்சங்கள் இருப்பதுதான் இந்த ஆப்களின் சிறப்பு.

டவுன்லோடு செய்ய: http://bit.ly/2d3jYW0

டைம் மேனேஜ்மென்ட் ஆப்ஸ்!

ஹேபிட் ஹப் HabitHub

தி
னமும் காலையில் ஜிம் செல்வது, வாரம் ஒரு புத்தகம் படிப்பது என அனைவருக்குமே தினமும் ஏதேனும் ஒரு நல்ல பழக்கத்தைப் பின்பற்ற ஆசை இருக்கும். அவற்றைச் சில நாள்கள் பின்பற்றத் தொடங்கினாலும், பின்னர் சில நாள்களிலேயே அவற்றைக் கைவிட்டுவிடுவோம். தவறான நேர நிர்வாகம், போதிய திட்டமிடல் இல்லாமை என இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இந்தச் சிக்கலுக்கு ஒரு சின்ன தீர்வுதான் இந்த ஹேபிட் ஹப். 

டைம் மேனேஜ்மென்ட் ஆப்ஸ்!நம்முடைய தினசரிப் பழக்கங்களை முதலில் இதில் பதிவு செய்ய வேண்டும். உதாரணமாக, தினமும் உடற்பயிற்சி செய்வேன் என உறுதி எடுத்திருந்தால், ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்தபின்னர், இதில் டிக் அடிக்க வேண்டும். செய்யவில்லை என்றால், அதனையும் குறிக்க வேண்டும். இப்படித் தினசரி செய்யும் விஷயங்கள் அனைத்தும் ஒரு சங்கிலிபோல, நாள்காட்டியில் குறிக்கப்படும். இந்தச் சங்கிலி உடையாமல் பாதுகாக்க வேண்டியதுதான் நம் பணி.

மேலும், என்றாவது நம் இலக்குகளிலிருந்து நாம் தவறும்பட்சத்தில் அவற்றை நமக்கு இந்த ஆப் நினைவுபடுத்தும். மாதத்தில், 21 நாள்கள் உடற்பயிற்சி செய்துவிட்டு, திடீரென இருநாள்கள் செய்யவில்லை என்றால்கூட, இதனைப் பார்க்கும் போது இன்னும் தொடர்ந்து செய்யவேண்டும் என்ற எண்ணம் வரும். நம்முடைய இலக்குகளை நோக்கிய செக் லிஸ்ட்டாக மட்டுமில்லாமல், ஊக்கமாகவும் இருப்பதுதான் இதன் ப்ளஸ்.

டவுன்லோடு செய்ய: http://bit.ly/1ePUfyv

- ஞா.சுதாகர்