ஹெல்த்
Published:Updated:

ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்!

ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்!

ஹெல்த்

ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்!

24 மணி நேர டயட்டீஷியன்

ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்!நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் பற்றியும் ஹெல்த் டிப்ஸ் பற்றியும் வரும் புத்தகங்கள் ஏராளம். ஆனால், அவற்றுக்குச் செலவு செய்ய வேண்டுமா என்கிற சந்தேகம் பலருக்கு உண்டு. அதற்குத் தீர்வாக வந்திருக்கிறது இந்த ஆப். நம் உடலுக்குத் தேவையான சரியான உணவை, சரியான நேரத்தில், சரியான அளவில் எடுக்க இந்த ஆப் உதவும். அடிக்கடி வரும் அப்டேட்கள் இந்த ஆப்-ஐ எப்போதும் சரியான பதிலைத் தர உதவுகின்றன. போதும் போதும் எனும் அளவுக்கு இருக்கும் டிப்ஸ்களைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள உடனே இந்த ஆப்-ஐ டவுன்லோடு செய்துகொள்ளுங்கள் பல்லாயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்த ஆப்புக்கு ப்ளே ஸ்டோரில் 4.2 ரேட்டிங் கிடைத்திருக்கிறது.

டவுன்லோடு லின்க்: http://bit.ly/2gp48Io

ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்!

ஃபேமிலி டாக்டர்

ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்!


ஒருவருக்கே பல மருத்துவர்களின் ப்ரிஸ்கிரிப்ஷன் இருக்கும் காலமிது. ஒரு குடும்பம் எனக் கணக்கிட்டால் ஒரே நாளில் ஐந்துக்கு மேற்பட்ட மருத்துவர்களின் பரிந்துரைப்படி மருந்துகள் எடுக்க வேண்டியிருக்கும். அவற்றையெல்லாம் மிகச்சரியாகப் பிரித்து, சரியான நேரத்தில் மருந்துகளைக் கொடுக்க உதவுகிறது இந்த ஆப். தவிர, மருந்துக்கடையின் எண், மருத்துவரின் எண், எமர்ஜென்ஸி எண்கள் போன்ற கான்டாக்ட் தகவல்களையும் இதில் சேமித்து வைக்கலாம். மருத்துவரிடம் அடுத்த அப்பாயின்ட்மென்ட் எப்போது என்பதைக் கணித்து அலாரம் அடிக்கும். மருந்து மற்றும் நோய் தொடர்பான படங்களையும் சேமிக்கலாம். வங்கிகளின் ஆப் என்ன மாதிரியான பாதுகாப்பு விஷயங்களைப் பின்பற்றுகின்றனவோ, அதேபோல நமது தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதாகச் சொல்கிறது இந்த ஆப்.

20 லட்சத்துக்கும் மேலானோர் பயன்படுத்தும் இந்த ஆப், ப்ளே ஸ்டோரில் ஐந்துக்கு 4.4 ஸ்டார் ரேட்டிங் வாங்கியிருக்கிறது.

டவுன்லோடு லின்க்: http://bit.ly/2itpHvZ

-கார்க்கிபவா