Published:Updated:

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஜெனரேட்டர் அவசியம்தானா? Sponsored Content

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஜெனரேட்டர் அவசியம்தானா? Sponsored Content
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஜெனரேட்டர் அவசியம்தானா? Sponsored Content

அந்தத் தெருவில் மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்புக் கட்டுமானம் அது. ராஜேஷ் - உஷா தம்பதியின் குழந்தை ஸ்வேதா படுசுட்டி. விடுமுறை நாள்களில் ஸ்வேதா அடுக்குமாடிக் குடியிருப்பில் லிஃப்டைப் பயன்படுத்தி மேலும் கீழும் சென்று விளையாடுவதுண்டு. அன்றும் ஸ்வேதா  லிஃப்டைப் பயன்படுத்தி 7ஆம் மாடிக்குச் சென்றுகொண்டிருக்கும்போது கரண்ட் கட்டானது, 5 ஆவது மற்றும் 6வது மாடிக்கு நடுவில் லிஃப்ட் சிக்கிக்கொண்டது. உஷா எப்போதும் போல் வீட்டில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார், குழந்தை லிஃப்டில் மாட்டிக்கொண்டது அவருக்குத் தெரியவில்லை. லிஃப்டில் இருட்டு... நிசப்தம்... உள்ளே குழந்தை... சில நொடிகள் அந்தரத்தில் நின்ற லிஃப்ட், மீண்டும் வேலை செய்ய ஆரம்பித்தது, ஜெனரேட்டர் பேக் அப் இருந்ததால் இது சாத்தியமானது. ஸ்வேதா வீட்டுக்கு வந்து டி.வி.யில் சோட்டா பீம் பார்க்க ஆரம்பித்தாள். ஒரு நிமிடம்... ஒருவேளை அந்தக் கட்டிடத்தில் ஜெனரேட்டர் பேக் அப் இல்லை என்றால் ஸ்வேதாவுக்கு என்ன ஆயிருக்கும்? பேக் அப் இல்லாமல், மின்சாரமும் வராமலே போயிருந்தால்? மெக்கானிக்குகளால் லிஃப்டைத் திறக்கமுடியாமல் போயிருந்தால்? இங்குதான் ஜெனரேட்டருக்கு ஒரு நன்றி சொல்லவேண்டியுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஜெனரேட்டர் அவசியம்தானா? Sponsored Content

சில தகவல்கள் - ஏன் ஜெனரேட்டர் தேவை என்பதைத் தெரிந்துகொள்வோம்!

கட்டிடத்தில் இருப்பவர்களுக்கு சிரமம் ஏற்படாமல் வைத்துக்கொள்வதே ஜெனரேட்டரின் முக்கிய வேலை. குடியிருப்புகளில் பொதுவாக மின்சாரம் இல்லாமல் போவது பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்றாலும், இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாதபோது, வெளிச்சமின்மை அசவுகரியத்தை ஏற்படுத்துகிறது, சூடான நாள்களில் மின்விசிறி மற்றும் ஏ.சி. இல்லாமல் தூங்குபவர்களை கொடுத்துவைத்தவர்கள் என்றே கூறலாம்.

அதிக பணியாளர்களைக் கொண்ட அலுவலகங்களில் நிச்சயம் ஜெனரேட்டர் ஒரு கட்டாயம், மின்சாரம் இல்லாமல் அன்றைய நாளின் வேலை கெட்டுப்போகும். இதனால் கம்பெனிக்கு நஷ்டம்தான். மேலும், மும்முரமாக வேலை  நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது திடீரென ஏற்படும் மின்சாரத் தடை, பணியாளர்களின் ஆர்வத்தையும் கவனத்தையும் குறைத்துவிடுகிறது.

தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை தானியங்கி கருவிகளின் இடையறாத இயக்கம்தான் தயாரிப்புகள் தகுந்த நேரத்தில் கிடைப்பதை உறுதிசெய்யும் வழி. அன்றாட பயன்பாட்டுக்குத் தேவைப்படும் FMCG தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் மின்சாரம் தடைபடும்போது, பயன்படு பொருள்கள் நாசமடைந்து  கோடிக்கணக்கில் நஷ்டம் உண்டாக வாய்ப்பிருக்கிறது.

மிக மிக முக்கியமாக ஜெனரேட்டர் பேக் அப் தேவைப்படும் இடம் மருத்துவமனைதான். உயிர் காக்கும் கருவிகளுக்குத் தேவைப்படும் மின்சாரம் சில நிமிடங்கள் துண்டிக்கப்பட்டாலும் இக்கட்டான கட்டத்துக்கு நோயாளிகளைக் கொண்டு சென்றுவிடும். 
அதுமட்டுமல்லாமல், பொதுமக்கள் அதிகமாக குழுமும் இடங்களில் அவசர அறிவிப்பு செய்வதற்கும், அபாய சங்கு ஒலிக்கவும், மக்கள் கூட்டமாக வெளியேறும் பாதைக்கு தேவையான வெளிச்சம் வழங்கவும், அவசரகாலத் தேவைகளுக்கு மின்சாரம் அவசியம், தப்பித்தவறி மின்சாரம் அந்நேரத்தில் இல்லாமல் இருந்தால், நம் தலையைக் காப்பதே இந்த ஜெனரேட்டர்கள்தாம்! இதுமட்டுமல்லாது, தானியங்கி தீ பாதுகாப்பு உபகரணங்களை கட்டிடங்களில் பொருத்துவதற்கு முக்கிய காரணமே அவசர நேரங்களில் பயன்படவேண்டிதான் என்பதால், மின்சாரம் இருந்தாலும் கூடுதல் பேக் அப்-புக்கு ஜெனரேட்டர் கட்டாயமாகிறது. 

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஜெனரேட்டர் அவசியம்தானா? Sponsored Content

ஜெனரேட்டர் தேர்வு செய்வது எப்படி?

அடுக்குமாடி குடியிருப்புகள், தொலைத்தொடர்பு அலுவலகங்கள், பாதுகாப்புத் துறை, ரெயில்வே என எண்ணற்ற இடங்களுக்கு தங்குதடையற்ற மின்சாரம் வழங்குவதில் ஜெனரேட்டர்கள் உதவுகின்றன... இந்தியாவில் இப்போது பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் ஜெனரேட்டர்களை எல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அதிக நம்பிக்கையான ஜெனரேட்டர் பிராண்ட் என ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்குகிறது புகழ்பெற்ற மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் வழங்கும் 'Powerol' ஜென்செட்ஸ். தர மேலாண்மையின் நோபல் பரிசாகக் கருதப்படும் ஜப்பானிய 'டெமிங்' விருதையும் Powerol வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் சிறப்பான ரெக்கவரி டைம் தங்குதடையற்ற பேக் அப் பவரை வழங்குவதோடு, வால்டேஜ் ஏற்ற இறக்கங்களைக் கட்டுக்குள் வைப்பதால் மின்சார சாதனங்கள் பழுதடையாமல் காக்கிறது.

அடுத்ததாக அதிர்வு, சத்தம் மற்றும் புகை வெளியேற்றம் குறைவாக இருப்பது ஒரு நல்ல ஜெனரேட்டரின் அம்சமாகும். மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிசோதனையில்  இந்த மூன்று டெஸ்டிலும் பாஸ் ஆகிறது Powerol. எனவே, கட்டிடங்களின் மேற்கூரைகளிலும் இந்த ஜெனரேட்டரைப் பொருத்தலாம்.

5-625 kVA ரேஞ்சில் கிடைக்கும் டீசல் ஜென்செட்டான மஹிந்திரா Powerol, 15 - 400 ஹார்ஸ் பவர் இஞ்சின்களில் வருகிறது. இதற்காகும் பராமரிப்பு செலவும் குறைவு, மேலும் இரண்டு வருட வாரண்டியுடன் கிடைப்பதே இதன் மிகப்பெரிய அனுகூலம். மஹிந்திரா Powerol ஜெனரேட்டர்களைத் தயாரித்து தமிழகம் மற்றும் புதுச்சேரிமுழுவதும் விநியோகம் செய்துவருகிறது, மஹிந்திரா &  மஹிந்திரா குழுமத்தின் Original Equipment Manufacturer (OEM)-ஆன Pioneer India Pvt. Ltd. நிறுவனம்.ஜெனரேட்டர் சம்பந்தப்பட்ட சேவைகளையும் இந்நிறுவனம் வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் தகவல்களுக்கு www.pioneergenerator.in; www.mahindrapowerol.com | info@pioneerindia.co.in | 96000 03253, 98840 69101.