நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

பிரசன்டேஷன் ஆப்ஸ்

பிரசன்டேஷன் ஆப்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
பிரசன்டேஷன் ஆப்ஸ்

கேட்ஜெட்ஸ்

ந்தவொரு விஷயத்தையும் பேச்சினால் சொல்லிப் புரியவைப்பதைக் காட்டிலும், காட்சிப்படுத்திப் புரிய வைப்பது சிறப்பு. சொல்லப்படும் விஷயத்தை மிக எளிதாகப் புரிந்துகொள்ள இது உதவியாக இருக்கும்.

இப்போதெல்லாம் மிகச் சிறிய விஷயங்களுக்குக்கூட பிரசன்டேஷன் தயார் செய்தே எடுத்துச் சொல்லப்படுகின்றன. அலுவலக பிரசன்டேஷன் களுக்காக மைக்ரோசாஃப்ட் பவர்பாயின்ட்டைப் பயன்படுத்தியிருப்போம். இதுபோல, மொபைலிலேயே பிரசன்டேஷன்களை மிகச் சுலபமாகத் தயார் செய்ய முடியும். இப்படி மொபைலிலேயே பிரசன்டேஷன்களைத் தயார் செய்ய உதவும் இரண்டு ஆப்ஸ் பற்றிப் பார்ப்போம்.  

பிரசன்டேஷன் ஆப்ஸ்

கூகுள் ஸ்லைட்ஸ் (Google Slides)

கூ
குள் நிறுவனத்தின் பிரசன்டேஷன் ஆப் இது. மற்ற எல்லா கூகுள் சேவை களிலும் இருப்பது போலவே, இந்த ஆப்பையும் கணினி மற்றும் மொபைல் என இரண்டிலும் பயன்படுத்த முடியும்.

சிக்கலின்றி, மிக எளிதாக பிரசன்டேஷன்களை இதில் வடிவமைக்க முடிகிறது. எனவே, சின்னச் சின்ன இன்ஸ்டன்ட் பிரசன்டேஷன்களுக்கு இதனைப் பயன்படுத்தலாம். ஏற்கெனவே இருக்கும் பிரசன்டேஷன் வடிவங்களை உபயோகிப்பதற்கான டெம்ப்ளேட் வசதியும் இருக்கிறது.

பிரசன்டேஷன் ஆப்ஸ்மைக்ரோசாஃப்ட் பவர்பாயின்ட்டின் நகல் போலவே இருப்பதால், அதில் பயன்படுத்திய ஷார்ட்கட் கீ அனைத்தும் இதிலும் வேலை செய்யும்.

இணையம் இல்லாமலே இந்த ஆப்பைப் பயன்படுத்தலாம். இணைய இணைப்பு கிடைத்ததும், நம் பிரசன்டேஷன் கூகுள் கணக்கில் பதிவாகிவிடும். கூகுளின் பல சேவைகளை நாம் அன்றாடம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். நாம் பதியும்  தகவல்கள் கிளவுடில் சேமிக்கப்படுவதால், எங்கிருந்து வேண்டுமானாலும் இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

டவுன்லோடு செய்ய: http://bit.ly/  2km5YK4

ஸ்லைடு ஷேர் (LinkedIn SlideShare) 

பிரசன்டேஷன் ஆப்ஸ்லி
ங்க்ட்இன் நிறுவனத்தின் பிரசன்டேஷன் ஆப் இது.  மைக்ரோசாஃப்ட் பவர்பாயின்ட் மற்றும் கூகுள் ஸ்லைடு  போல, பிரசன்டேஷன்களை உருவாக்குவதற்கான சேவையல்ல இது. மாறாக, பிரசன்டேஷன்களைப் பகிர்ந்துகொள்ள உதவுவது. எந்தத் தலைப்பில் தேடினாலும், நூற்றுக்கணக்கில் பிரசன்டேஷன்கள் இதில் வந்துகொட்டும்.

குறிப்பாக, மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள சேவை இது. அறிவியல், தொழில்நுட்பம், வணிகம், பொருளாதாரம், சுற்றுச்சூழல் எனப் பல்வேறு வகையான தலைப்புகளின் கீழ் தகவல்களை பிரசன்டேஷன்களாகப் பெறமுடியும். வேண்டுமெனில் இவற்றை டவுன்லோடும் செய்துகொள்ளலாம். ஒவ்வொரு தலைப்பின் கீழும், தினந்தோறும் நிறைய பிரசன்டேஷன்கள் இதில் புதிதாகச் சேர்ந்துகொண்டே இருக்கும்.

பல்வேறு தகவல்கள் ஒரே இடத்தில் கிடைப்பது இதன் சிறப்பு என்றாலும், லிங்க்ட்இன் கணக்கு இருந்தால் மட்டுமே இதனைப் பயன்படுத்தமுடியும் என்பது மைனஸ்.

டவுன்லோடு செய்ய:
http://bit.ly/2gKOxmQ

-ஞா.சுதாகர்