
போட்டோ ஸ்கேனிங் ஆப்ஸ்
ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை மொபைல் மூலமாக ஸ்கேன் செய்து, அவற்றை மின்னணு வடிவில் மாற்றுவதற்கு உதவுவதற்காக பல ஸ்கேனிங் ஆப்கள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கின்றன. அதில் பயனுள்ள மூன்று ஸ்கேனிங் ஆப்ஸ் பற்றி பார்ப்போம்.

போட்டோஸ்கேன் (PhotoScan)
புகைப்படங்களை ஸ்கேன் செய்ய உதவும் கூகுளின் ஆப் இது. மிக எளிமையான ஸ்கேனிங் ஆப்பாக இருக்கிறது போட்டோஸ்கேன்.
மற்ற ஸ்கேனிங் ஆப்ஸ் போல, இதில் ஆவணங் களையோ, மற்ற ரசீது களையோ துல்லியமாக ஸ்கேன் செய்யமுடி யாது.

ஆனால், புகைப் படங்களைத் துல்லியமாக ஸ்கேன் செய்யமுடியும். தெளிவற்ற முனைகள், தேவையற்ற வெளிச்சம் போன்ற அனைத்தையும் சரிசெய்து பக்கா டிஜிட்டல் போட்டோவாக மாற்றித் தருவதுதான் இதன் ஸ்பெஷல். இதைப் பயன்படுத்துவதற்கு மொபைலில் தரமான ரியர் கேமராக்கள் இருக்க வேண்டியது அவசியம்.
டவுன்லோடு செய்ய: http://bit.ly/2fUbtyx
அடோப் ஸ்கேன் (Adobe Scan)

புகைப்படங்கள், ஆவணங்கள், ரசீதுகள் என எதையும் ஸ்கேன் செய்து, பி.டி.எஃப் கோப்பாக மாற்ற உதவும் ஆப்தான், இந்த அடோப் ஸ்கேன். ஸ்கேன் செய்யவேண்டிய ஆவணங்களை, மொபைலின் முன்னால் வைத்தாலே போதும். தானாகவே ஸ்கேன் செய்து விடும். ஓ.சி.ஆர் (OCR) தொழில்நுட்பமும் இருப்ப தால், ஆவணங்களில் இருக்கும் எழுத்துகளையும் துல்லியமாக ஸ்கேன் செய்து விடுகிறது. பின்னர் இவற்றை பி.டி.எஃப்பாக மாற்றிப் பதிவு செய்துகொள்ளலாம்.கோப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் வசதியும் உண்டு. ஆவணங்களை பி.டி.எஃப் வடிவில் மட்டுமே பதிவு செய்யமுடியுமே தவிர, இமேஜாகவோ அல்லது வேறு வடிவங்களிலோ சேமிக்கமுடியாது. இது மட்டும் இந்த ஆப்பின் மைனஸ்.
டவுன்லோடு செய்ய: http://bit.ly/2zNocw0
ஃபில் அண்ட் சைன் (Fill & Sign)

ஆன்லைன் விண்ணப் பங்களில் தவறாமல் இடம் பெறும் ஒரு விஷயம், இ-சைன் எனப்படும் மின்னணு கையொப்பம். இதற்காக நம் கையொப் பத்தை ஸ்கேன் செய்து, அவற்றின் அளவைக் குறைத்துப் பயன்படுத்திக் கொண்டிருப்போம். ஆனால், இந்த ஆப்பைப் பயன்படுத்தினால், மொபைலிலேயே மின்னணு கையொப்பத்தை உருவாக்கவும், அவற்றை விண்ணப்பங்களில் பதிவேற்றவும் முடியும். முதலில் இந்த ஆப் மூலம் கையொப்பத்தை உருவாக்கி, அதனைச் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான். பின்பு இந்த ஆப் மூலமாக படங்கள்,விண்ணப் பங்கள் போன்றவற்றின் மீது உங்கள் கையொப்பங் களைச் சேர்க்க முடியும்.
டவுன்லோடு செய்ய: http://bit.ly/1WJCKFU
- ஞா.சுதாகர்