Published:Updated:

சிங்கப்பூரில் ஃபேஸ்புக்கின் முதல் ஆசிய டேட்டா மையம்... இங்கு என்ன நடக்கும்?

விகடன் விமர்சனக்குழு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சிங்கப்பூரில் ஃபேஸ்புக்கின் முதல் ஆசிய டேட்டா மையம்... இங்கு என்ன நடக்கும்?
சிங்கப்பூரில் ஃபேஸ்புக்கின் முதல் ஆசிய டேட்டா மையம்... இங்கு என்ன நடக்கும்?

காலையில் அரைகுறை தூக்கத்தில் எழுவது முதல் இரவு தூக்கத்தில் மயங்கும் வரை நம் ஒவ்வொரு நாளும் டேட்டாவிலேயே கழிகிறது. நாம் பயன்படுத்தும் இந்த டேட்டா அனைத்தும் டேட்டா மையங்களில் சேமிக்கப்படும்.

காலை ஒரு போட்டோ, நண்பர்களுடன் ஒரு செல்பி, அநியாயத்தைக் கண்டு பொங்கிய போராளியாக ஒரு கட்டுரை, மீம்களுடன் சிரிப்பு கொண்டாட்டம், `சாட்டையடி பதிவு டோழி' என்று பெண் `ஃபேக் ஐடியுடன்' கடலை, இறுதியாக தமிழன் என்ற கடமைக்கு, வருவதையெல்லாம் ஷேர் செய்வது எனக் காலையில் அரைகுறை தூக்கத்தில் எழுவது முதல் இரவு தூக்கத்தில் மயங்கும் வரை நம் ஒவ்வொரு நாளும் டேட்டாவிலேயே கழிகிறது. நாம் பயன்படுத்தும் இந்த டேட்டா அனைத்தும் டேட்டா மையங்களில் சேமிக்கப்படும். இந்த டேட்டா மையம் எந்த ஓர் இணையதளமும் தடையின்றி இயங்க முக்கியமான பங்காற்றுகின்றன.

2004 ல் ஃபேஸ்புக்கை உருவாக்கிய போது தனக்கும் தான் சுற்றியுள்ளவர்களின் பயன்பாட்டுக்கும் மட்டுமே பயன்படுத்தியதால் சின்ன அறையினையே டேட்டா சர்வருக்குப் பயன்படுத்தினார் அப்போதைய ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் மாணவன் மார்க் சக்கர்பெர்க். பின் ஃபேஸ்புக்கின் பாரிய வளர்ச்சி அதன் பயனாளர்களையும் அவர்களால் உருவாக்கப்படும் டேட்டாவையும் அதிகரித்துச் சென்றது. ஆரம்ப  காலங்களில் பிற டேட்டா நெட்வொர்க்குகளுடன் இணைந்து செயலாற்றிய ஃபேஸ்புக் பின் தங்களுக்கெனத் தனியாக டேட்டா மையங்களை உருவாக்க ஆரம்பிக்கிறது.

2010 ம் ஆண்டு ஃபேஸ்புக்கின் முதல் டேட்டா சென்டர் அமெரிக்காவின் ஒரேகன் மாகாணத்தில் பிரிணிவிலே என்ற இடத்தில் உருவாக்கப்பட்டது. ஃபேஸ்புக்கின் டேட்டாவின் தேவைகள் அதிகம் என்பதால் அதிகளவில் சேகரிப்பதற்கு ஏற்றார் போலவே மையங்கள் அமைக்கப்பட்டன.ஆரம்பத்தில் 1,70,000 சதுர அடியில் ஆரம்பிக்கப்பட்ட பிரிணிவிலே டேட்டா மையம் பின் 1,60,000 சதுர அடி இணைக்கப்பட்டு 3,20,00 சதுர அடியில் இயங்குகிறது.

இதைத் தொடர்ந்து வடக்கு கரோலினா, லூலியா, நியூ மெக்சிகோ, சுவீடன், அயர்லாந்து உட்பட்ட அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் தங்கள் டேட்டா மையங்களை நிறுவியுள்ளது ஃபேஸ்புக். இதன் தொடர்ச்சியாக ஆசியாவின் முதல் டேட்டா மையத்தை இப்போது நிறுவ உள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.

படம்: ஃபேஸ்புக்

அமெரிக்காவில் தொடங்கப்பட்டது என்றாலும் அதிக பயனாளர்களுடன் ஆசியாவை முதன்மையாகக் கொண்டே இந்நிறுவனம் இயங்கிவருகிறது. அதிக மக்கள் வளம் உள்ள இந்தியா, சீனா போன்ற நாடுகளில் நிறுவாமல் தெற்காசியப் பிராந்தியமான சிங்கப்பூரை ஃபேஸ்புக் தேர்ந்தெடுத்துள்ளது. நகரக் கட்டமைப்பு, பணியாளர்கள், முக்கியமாக இணைய மையங்களுக்கான சூழலுக்காக சிங்கப்பூரைத் தேர்ந்தெடுத்துள்ளதாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் அவ்வப்பொழுது சில நிமிடம் முடங்குவதைக் காணலாம். டேட்டா மையங்கள் வெப்பத்தை அதிகம் வெளியிடக்கூடியவை. அது அதிகமாவதாலேயே சில சமயங்களில் நெட்வொர்க் முடங்குகிறது. பின் ஓரிரு நிமிடங்களில் சரி செய்யப்படுகிறது. ஆனால், அந்த ஒரு சில நிமிடங்களிலேயே உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனாலேயே சிங்கப்பூர் போன்ற மித வெப்பநிலை தேசம் (அதிகபட்சம் 33° C) கூகுள் முதல் ஃபேஸ்புக் வரை இணைய நிறுவனங்கள் கடைவிரிக்கக் காரணமாக உள்ளது. புறச் சூழல் அதிகளவில் வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் போது தேவையற்ற சிக்கல்கள் தீர்க்கப்படுகிறது. நாம் செயற்கைக் காரணிகளையும் செலவுகளையும் தவிர்க்கலாம்.1,70,000 சதுர மீட்டர் பரப்பளவில் 11 மாடியில் உருவாக உள்ள இந்த மையம் பலருக்கு வேலைவாய்ப்பு தரக்கூடிய ஒன்றாக இருக்கும். மொத்தம் 1 பில்லியனுக்கு மேல் செலவு செய்து 2022 ம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபேஸ்புக் போன்ற உலகளாவிய நிறுவனம் முதலீடு செய்வதில் சிங்கப்பூர் அரசு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

மேற்கூறியது போல் பாஸ்வேர்டு செய்து `லாக் இன்' முதல்  போட்டோ, வீடியோ, கட்டுரை, நேரலை என `லாக் அவுட்' வரை ஃபேஸ்புக்குக்கு நாம் அளித்த ஒவ்வொரு விவரமும் டேட்டாவாக அதன் டேட்டா மையங்களில் சேமிக்கப்படுகிறது. நாம் செய்யும் ஒவ்வொரு ஷேர்களும் நம் நண்பர்களுக்கு மட்டும் செல்வதில்லை. இந்த மையங்களுக்கும் செல்கிறது. ஆதலால்,

தமிழனாய் இருந்தால் இதை `ஷேர்' செய்யவும்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு