
ஆண்ட்ராய்டு அகிலம்இ.நிவேதா
`அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ எனும் பழமொழிக்கு மாற்றாக `முகத்தின் அழகு ஆப்ஸில் (Apps) தெரியும்’ எனும் புதுமொழியை உருவாக்கிவிட்டன, பல போட்டோ எடிட்டர் ஆப்ஸ்கள். அத்தகைய அழகு ஆப்ஸ்களுடன், அவசியமான சில ஆரோக்கிய ஆப்ஸ்களும் இதோ...

You cam perfect
64 நாடுகளில் முதல் பத்து இடங்களில் உள்ள இந்த ஆப் இது. சருமத்தை மாசு மருவின்றி சரிசெய்வது, சருமச் சுருக்கங்களை நீக்கி மென்மையாக மாற்றுவது, சோர்வான கண்களைப் பிரகாசமாக மாற்றுவது என உருவப் படங்களைச் சட்டென அழகுபடுத்த உதவும் வகையில் பல டூல்ஸ் இதில் உள்ளன. பின்னணி, போட்டோ ஃபிரேம், ஸ்டிக்கர் என, பல அசத்தல் வசதிகளைக்கொண்ட இந்த ஆப் மூலம் மெருகேற்றப் பட்ட புகைப்படங்களுக்கு லைக்ஸ் நிச்சயம்.

My fitness pal
எடையைக் குறைப்பதோடு, ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களுக்கு மாற விரும்புகிறவர்களுக்கு இந்த ஆப் உதவும். 60 லட்சத்துக்கும் அதிகமான உலகளாவிய உணவுப் பொருள்களின் விவரம், உணவகங்களின் மெனுக்கள், ஆரோக்கிய உணவு தேர்வுகள், கலோரி கணக்கீடு, கொழுப்பு, புரதம், சர்க்கரை, வைட்டமின்கள் என ஊட்டச் சத்து விவரங்கள் உள்பட பல வசதிகளை இந்த ஆப்பில் பெற்று, உடலின் ஆரோக்கி யத்தைச் சீராக வைத்துக் கொள்ளலாம்.
https://goo.gl/boE4a

Beauty plus
உலகளவில் பத்து கோடி மக்கள் இந்த ஆப்பை உபயோகிக் கிறார்கள். சரும நிறத்தை மாற்ற, கரும் புள்ளிகளை மறைக்க, பருமனான உடலை ஒல்லியாக்க என பல மேஜிக்கல் ஆப்ஷன்கள் இதில் உள்ளன. புகைப் படங்களை ஜஸ்ட் ஒரு க்ளிக்கில் அழகாக்கிடும் தன்மைதான் இதன் சிறப்பு.
https://goo.gl/XrEt08

Women’s health diary
பெண்களுக்கென்றே பிரத் யேகமாக உருவாக்கப்பட்டதுதான் இந்த ஆப். உயரம், எடையை வைத்து சரியான BMI-ஐ கணக்கிடுவதுடன், நாம் தினசரி உண்ணும் உணவின் கலோரிகளைக் கணக்கிடுவது, மாத விடாய் நாள்களை நினைவூட்டுவது, உட்கொள்ளும் மருந்தின் பெயர் மற்றும் அதை எத்தனை முறை உட்கொள்ள வேண்டும் என்பது போன்ற தகவல்களைச் சரியான நேரத்தில் தருவது, நோய்த்தடுப்பு முறைகள் உள்ளிட்ட சிறப்பம்சங்களை இந்த ஆப் கொண்டுள்ளது. நம் உடல் நலத்தைக் கண்காணித்து மேம்படுத்த உதவும் தகவல்களையும் இந்த ஆப் வழங்குகிறது.
https://goo.gl/OQcLG5

Couch to 5K®
ஒருநாளில் 30 நிமிடங்கள், வாரத்தில் மூன்று நாள்கள் என மொத்தம் ஒன்பது வாரங்கள் முயன்றால், இந்த ஆப் மூலம் உங்கள் எடையைக் கணிசமாகக் குறைத்து விடலாம். Active.Com இணையதளத்தைச் சார்ந்த பயிற்சியாளர்களால் வடிவமைக்கப் பட்ட இந்தப் பயிற்சித் திட்டத்தில், நம்மை ஊக்குவிக்க மெய்நிகர் பயிற்சியாளர்களும் இருக்கிறார்கள். வழிகாட்ட ஆடியோ வசதியுள்ள மியூசிக் ப்ளேயரும் இருக்கிறது. நாம் நடக்கும் தூரம் மற்றும் வேகத்தை ஜி.பி.எஸ் இல்லாமலே இந்த ஆப் அள விடுகிறது. புதிதாக உடற்பயிற்சி தொடங்க நினைக்கும் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய அவசிய ஆப் இது.
https://goo.gl/J7sREM
