Published:Updated:

அந்நியோன்யத்தை அதிகரிக்கும் ஆப்ஸ்...

அந்நியோன்யத்தை அதிகரிக்கும் ஆப்ஸ்...
News
அந்நியோன்யத்தை அதிகரிக்கும் ஆப்ஸ்...

இர.ஏஞ்சலின் ரெனிட்டா

காதல் திருமணமோ, பெற்றோர் பார்த்து வைத்த திருமணமோ... இன்றைய தம்பதிகளிடம் இருக்கும் பொதுவான பிரச்னை புரிதலின்மை. இதற்காகத்தான் அந்தக் கால திருமணங்கள் ஒரு வார காலக் கொண்டாட்டமாக நடக்கும். அதில் மணமகனுக்கும் மணமகளுக்குமான விளையாட்டுகளுக்குப் பஞ்சமிருக்காது. இன்று அரைநாள் கூத்தாகிப் போன திருமணங்களில் அதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பவரா நீங்கள்? எனில், இந்த மொபைல் ஆப்கள் எல்லாம் உங்களுக்குத்தான்!

அந்நியோன்யத்தை அதிகரிக்கும் ஆப்ஸ்...

து ஒரு கேள்வி பதில் போன்ற விளையாட்டு. இந்த விளையாட்டை விளையாட தம்பதிகள் அருகருகே இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே இதன் சிறப்பம்சம். சொல்லப் போனால் தூரத்தில் இருக்கும் தம்பதிகளுக்கான விளையாட்டு இது.

அந்நியோன்யத்தை அதிகரிக்கும் ஆப்ஸ்...

முதலில் நீங்கள் இருவரும் உங்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றை பதிவுசெய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளைக்கும் 5 கேள்விகள் கேட்கப்படும். மூன்று கேள்விகள் இருவருக்கும் பொதுவானதாக இருக்கும். 2 கேள்விகள் இருவருக்கும் தனித் தனியானது.

கேள்விகள் குறித்த உங்கள் விடையை மின்னஞ்சல் மூலமோ, குறுஞ்செய்தி மூலமோ, ஸ்கைப் மூலமாகவோ அனுப்பலாம். விடையைப் பார்த்ததுமே உங்களுக்கே உங்கள் இருவரின் அந்நியோன்யம் தெரிந்துவிடும். உங்களின் உணர்வுகளை வார்த்தைகள் அல்லது GIF மூலம் வெளிப்படுத்தும் வசதியும் உண்டு.

http://bit.ly/2DtnYwo

விளையாட்டின் பெயரிலிருந்ததே இது எப்படிப்பட்ட விளையாட்டு என்று தெரிந்திருக்கும்... அதே தான்! உங்களுக்கு முன் இரண்டு வாய்ப்புகள் இருக்கும். ஒன்று truth (அதாவது உண்மையைச் சொல்வது). மற்றொன்று dare (கொடுக்கும் தண்டனையைச் செய்வது).

அந்நியோன்யத்தை அதிகரிக்கும் ஆப்ஸ்...

இதைத் தம்பதிகள் மட்டும் தான் விளையாட வேண்டும் என்பது இல்லை. மொத்தம் 20 பேர் வரை விளையாடலாம். கல்யாண வீட்டில் கொஞ்சம் கலகலப்பாக இருக்க இந்த ஆப் பயனுள்ள ஒன்றாக இருக்கும். கொஞ்சம் பார்த்து விளையாட வேண்டிய விளையாட்டு இது. தண்டனைகள் அப்படி!

http://bit.ly/2CUIbdu

அந்நியோன்யத்தை அதிகரிக்கும் ஆப்ஸ்...

ந்த ‘ஆப்’க்கும் நம்ம ‘வாட்ஸ்அப்’க்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால், இதை இருவர் மட்டுமே உபயோகிக்க முடியும். தம்பதிகள் தொலைவில் இருந்தாலும், அருகில் இருந்தாலும் இதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. இதைக் கொண்டு நீங்கள் இருவரும் உங்களின் விருப்பமான ஆடியோ, வீடியோ, புகைப்படம் என எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள முடியும். போன் செய்து பேசவும் முடியும். உங்களின் திருமண நாள், பிறந்த நாள் உள்பட மிக முக்கிய தருணங்களைப் பதிவு செய்யும் வசதியும் உண்டு. நீங்கள் செய்ய விரும்பும், போக விரும்பும் இடங்களையும், நேரங்களையும் மறந்து போகாவண்ணம் குறித்து வைத்துக்கொள்ளவும் முடியும். கடைசியாக ஒரு முக்கியமான விஷயம். இந்த ஆப் நீங்கள் இருக்கும் இடத்தையும் காட்டிக் கொடுத்துவிடும்!

http://bit.ly/2zdBXTW

ப்பிள் ஆப் போன்ற இன்னொன்று என்று இதைச் சொல்லலாம். இந்த ‘ஆப்’பைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 4 லட்சம் தாண்டுகிறது. அந்த அளவுக்குப் பாதுகாப்பானதாம். தம்பதிகள் இருவரும் தங்களின் உரையாடல்களோடு நின்று விடாதவண்ணம் அன்லிமிடெட் போன் கால் வசதியும் உண்டு. அவர்களை எப்போதும் மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் GIF Selfieயும், ஸ்டிக்கர்களும், எமோடிக்கான்களும் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிறப்பம்சங்கள்.

அந்நியோன்யத்தை அதிகரிக்கும் ஆப்ஸ்...

நீங்கள் உங்கள் போனை மாற்றினால்கூட இந்த ஆப்பில் சேகரித்துவைத்த உங்களின் புகைப்படங்களும், வீடியோ, ஆடியோக்களும் அப்படியே இருக்கும். நீங்கள் குறித்து வைத்த உங்களின் சிறப்பான நாள் வருவதற்கு இன்னும் எத்தனை நாள்கள் இருக்கின்றன என்பதையும் இது கணக்கு போட்டுக் காட்டிவிடும். எதையும் மறந்துவிட்டுத் திட்டுவாங்குவதை இந்த ஆப் நிச்சயம் குறைத்துவிடும், பாஸ்!

http://bit.ly/1WbElkG

அந்நியோன்யத்தை அதிகரிக்கும் ஆப்ஸ்...

ந்த ஆப் காலண்டர் போன்றது. ஆனால், இந்த காலண்டர் ஒரு வருடம் மட்டும் காட்டாது. தம்பதிகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் இதில் குறித்துவைத்துக் கொள்ள முடியும் (எதையும் பிளான் பண்ணி பண்ணணுமில்லே!). மேலும் இதுவே நீங்கள் போக விரும்பும் இடங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், வாங்க வேண்டிய பொருள்களையும் உங்களுக்குச் சொல்லும். அதில் எதைத் தேர்வு செய்வது என்பது உங்களின் விருப்பம். இதிலிருந்து நீங்கள் உங்களின் துணைக்குக் காதல் கடிதம் அனுப்ப முடியும். லாக் ஸ்க்ரீனில் உங்கள் துணையின் படத்தை வைத்துக்கொண்டால், லாக் ஸ்க்ரீனில் இருந்தே அவரை அழைக்கவோ, மெஸெஜ் அனுப்பவோ முடியும்.

http://bit.ly/2kX0eIE