பிரீமியம் ஸ்டோரி

* ஹூவேய் 970 AI ஆக்டாகோர் பிராசஸர்

* ஹோனர் ஃபுல்வியூ 18:9 டிஸ்ப்ளே 5.99" 1080 x 2160 பிக்ஸல்

* அதிகவேக சார்ஜிங் வசதியுடன்கூடிய 3750 mAh பேட்டரி

* டூயல் ரியர் கேமரா  ( 16 RGB + 20 மோனோக்ரோம் மெகாபிக்ஸல்)

* 13 மெகாபிக்ஸல் ஃபிரன்ட் கேமரா

* ஆண்டிராய்டு ஓரியோ 8.0 இயங்குதளம்

* ஹைப்ரிட் ஸ்லாட் ( இரண்டு சிம் அல்லது 1 சிம் + மெமரி கார்டு)

* விலை ரூ 35,999 (6 ஜிபி RAM, 128 ஜிபி இன்டெர்னல் மெமரி)  

கேட்ஜெட்ஸ்

ஆன்லைன் மார்க்கெட்டில் புதுப்புது மொபைல் பிராண்டுகள் கால் பதித்துவருகின்றன. ஹோனர் மொபைல்கள் ஏற்கெனவே ஆன்லைனில் இருந்தாலும், கடந்த இரு மாதங்களும் அவர்களுக்கு ஸ்பெஷல். 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அவர்கள் வெளியிட்ட பட்ஜெட் மொபைலான ஹோனர் 7X விற்பனையில் சக்கைப்போடு போட, ஜனவரியில் உலகின் முதல் AI மொபைலை வடிவமைத்திருக்கிறார்கள்.

விலை ரூ 35,999 எனச் சொல்லப்பட்டாலும், அமேசான் தளத்தில் இந்த மொபைல் ரூ 29,999 ரூபாய்க்குக் கிடைக்கிறது

ப்ளஸ்

அட்டகாசமான திறன்

சிறப்பான கேமரா

சிறப்பான கேமிங் வசதி

மைனஸ்

AI தொழில்நுட்பம் மிகவும் ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது.

ரியர் கேமரா துருத்திக்கொண்டு வெளியே இருக்கிறது.

வாட்டர் ப்ரூஃப் இல்லை.

கேட்ஜெட்ஸ்

ஒன் ப்ளஸ் 5T

ஒன் பிளஸ் அளவுக்கு வாடிக்கையாளர்கள் ஹோனருக்கு இல்லை என்றாலும், ஒன் பிளஸ் 5T மொபைலுடன் நேரடியாகவே மொதுகிறது ஹோனர் வியூ 10. விலையும் குறைவு இன்டர்னல் மெமரி அதிகம் என ஹோனர் ஒரு பக்கம் கோல் அடித்தால், பில்ட் - இன் கால் ரெக்கார்டர், AMOLED டிஸ்ப்ளே என ஒன் ப்ளஸ்ஸும் சரிசமமாகப் போட்டி போடுகிறது.

கேட்ஜெட்ஸ்

Mi MIX 2

டிஸ்ப்ளே (5.99” 2160 x 1080 FHD+ 18:9) அடிப்ப டையில் அப்படியே ஹோனர் வியூ 10 போல் இருந்தாலும், செல்ஃபி கேமரா கீழே இருப்பது, டூயல் ரியர் கேமரா இல்லாதது, கேமரா திறன் போன்றவற்றில் சோதிக்கிறது Mi MIX 2. விலை (35,999)

கேட்ஜெட்ஸ்

ரெட்மி 5A.

அதி வேக சார்ஜிங் வசதியைப் பிற மொபைல் நிறுவனங்கள் கையில் வைத்திருந்தால், அதிகவேகமாக விற்கும் மொபைல்களில் கில்லியாக இருக்கிறது ஷியோமி நிறுவனம். வெளியான முதல் மாதத்திலேயே 10 லட்சம் மொபைல்களை விற்று மற்றுமொருமுறை சாதனை படைத்திருக்கிறது ஷியோமி. ரெட்மி 3,3S ப்ரைம், 4A வரிசையில் இந்த முறை மார்க்கெட்டில் ஹிட் அடித்திருப்பது ரெட்மி 5A.

*  12.7cm 5” HD டிஸ்ப்ளே

*  13 மெகாபிக்ஸல் ரியர் கேமரா

*  3000mAh பேட்டரி, quad-core Snapdragon 425 பிராசஸர்

*  டூயல் சிம் வசதி

*  விலை 4,999 (2 ஜிபி ரேம் + 16 ஜிபி இன்டெர்னல் மெமரி)

* விலை 5,999 (3 ஜிபி ரேம் + 32 ஜிபி இன்டெர்னல் மெமரி)

பிளஸ்

குறைந்த விலை

சிறப்பான பேட்டரி

மைனஸ்

4A 5A பெரிய வித்தியாசம் இல்லை

மற்ற சாய்ஸ் - ரெட்மி Y1 லைட்

கிட்டத்தட்ட ரெட்மி 5A ஸ்பெக்ஸை அப்படியே பிரதி எடுத்திருந்தாலும். 5.5” ஸ்கிரீன் டிஸ்ப்ளே தருகிறது ரெட்மி Y1 லைட்.. ஆனால், 2 ஜிபி ரேம் + 16 ஜிபி இன்டெர்னல் மெமரி மாடலுக்கே நீங்கள் 6,999 ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு