Published:Updated:

நாம் வேண்டாம், இனி நம் மொபைலே போன் பேசும்... அசத்தல் கூகுள் பிக்ஸல்! #MadeByGoogle

நாம் வேண்டாம், இனி நம் மொபைலே போன் பேசும்... அசத்தல் கூகுள் பிக்ஸல்! #MadeByGoogle

பிக்ஸலில் விளம்பர அழைப்புகளை நீங்கள் அட்டென்ட் செய்வதற்கு பதிலாக, கூகுள் அசிஸ்டன்ட்டையே அட்டென்ட் செய்யவிடலாம்.

Published:Updated:

நாம் வேண்டாம், இனி நம் மொபைலே போன் பேசும்... அசத்தல் கூகுள் பிக்ஸல்! #MadeByGoogle

பிக்ஸலில் விளம்பர அழைப்புகளை நீங்கள் அட்டென்ட் செய்வதற்கு பதிலாக, கூகுள் அசிஸ்டன்ட்டையே அட்டென்ட் செய்யவிடலாம்.

நாம் வேண்டாம், இனி நம் மொபைலே போன் பேசும்... அசத்தல் கூகுள் பிக்ஸல்! #MadeByGoogle

கூகுளின் வருடாந்திர 'made by google' விழா நேற்றுமுன்தினம் நியூயார்க்கில் நடைபெற்றது. இதில் கூகுள் தயாரித்துள்ள மூன்று புதிய கேட்ஜெட்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கூகுள் ப்ளஸ் கணக்குகளின் தகவல்கள் லீக் ஆனதென்றும், அதை சில மாதங்களுக்கு வெளியே தெரிவிக்காமல் மறைத்ததாகவும் சமீபத்தில்தான் ஒப்புக்கொண்டிருந்தது கூகுள். இந்தப் பிரச்னை ஓடிக்கொண்டிருக்கும்போதுதான் இந்த வருடத்தின் 'made by google' நடந்தேறியது. இந்த முறை விழாவும் எப்போதையும் விடக் கொஞ்சம் பொலிவிழந்தே காணப்பட்டது. இதற்கு அறிமுகப்படுத்தப்படவிருந்த சாதனங்கள் பற்றிய பல தகவல்கள் ஏற்கெனவே லீக் ஆகியிருந்ததும் ஒரு காரணம் என்கின்றனர். மேலும், சுந்தர் பிச்சையும் இதில் பங்குபெறவில்லை.

ஹோம் ஹப் 

முதல் சாதனமாக கூகுள் ஹோம் ஹப் அறிமுகப்படுத்தப்பட்டது. கூகுள் அசிஸ்டன்ட்டிற்கு ஒரு டிஸ்ப்ளே கொடுத்தது போல இருக்கும் இந்த சாதனத்தை வீட்டில் தேவைப்படும் இடத்தில் வைத்துக்கொள்ளலாம். இதில் நீங்கள் உங்களுக்குத் தேவையான தகவல்களையும், செய்ய வேண்டிய வேலைகளையும் கூகுள் அசிஸ்டன்ட்டுடன் பேசியே பெறமுடியும். இதில் வீட்டில் இருக்கும் மற்ற சாதனங்களைக் கண்ட்ரோல் செய்யலாம், யூடியூப் வீடியோக்கள் பார்க்கலாம், பாடல்கள் கேட்கலாம். 7 இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்ட இதில் கேமரா கிடையாது. தைரியமாகப் படுக்கையறை, சமையலறை என எங்கும் மக்கள் பயன்படுத்தும்படி இது இருக்கவேண்டும் என்பதற்கே இப்படிச் செய்யப்பட்டதாம். (ஆனால் கூகுள் ப்ளஸ் தகவல்கள் லீக் ஆகியதற்கெல்லாம் கேமரா தேவைபடவில்லையே பாஸ்!) மேலும் ஸ்பீக்கர் மற்றும் ப்ளூடூத் 5.0 சப்போர்ட்டும் இதில் இருக்கிறது. இதில் இருக்கும் ஸ்மார்ட் டிஸ்ப்ளே சுற்றி இருக்கும் சூழலுக்கு ஏற்ப வெளிச்சத்தையும், நிறங்களையும் மாற்றிக்கொள்ளவல்லது. மேலும், இது சும்மா இருக்கும் நேரத்தில் உங்கள் கூகுள் கணக்கில் சிங்க் ஆகி இருக்கும் சிறந்த போட்டோக்களை எடுத்து டிஸ்ப்ளே செய்யும் திறன்கொண்டது. இந்த ஹோம் ஹப் பச்சை, இளஞ்சிவப்பு, சாம்பல் மற்றும் வெள்ளை நேரங்களில் விற்பனைக்கு வரும். ஏற்கெனவே இருக்கும் கூகுள் ஹோம் ஸ்மார்ட் ஸ்பீக்கரின் அப்டேட்டாகத்தான் இது இருக்கிறது.

பிக்ஸல் ஸ்லேட்  

அடுத்ததாக பிக்ஸல் ஸ்லேட் என்னும் சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆப்பிளின் ஐபாடுகளுக்கு போட்டியாக களமிறங்கியிருக்கும் இதை வெறும் டேப்லெட்டாக மட்டும் இல்லாமல் லேப்டாப் போலவும் உபயோகிக்க முடியும். குரோம் OS-ல் இயங்கும் இது, கூகுள் அசிஸ்டன்ட் சப்போர்ட்டுடன் இயங்கும். எல்லாவற்றுடன் படம் பார்க்கும் அனுபவமும் நன்றாக இருக்க 12.3 இன்ச் டச் ஸ்கிரீன் LTPS LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 293 ppi (Pixel Per Inch) கொண்ட ஷார்ப்பான டிஸ்ப்ளே இது. இரண்டு பக்கங்களும் 8 MP கேமெராக்கள் கொண்டுள்ள இந்த ஸ்லேட்டில் Portrait போட்டோக்களும் எடுக்கலாம். இதன் பவர் பட்டனிலேயே ஃபிங்கர்பிரின்ட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. பேட்டரி 10-12 மணிநேரம் தாக்குப்பிடிக்குமாம். வைரஸ் ப்ரொடெக்ஷன் இலவசமாக இதனுடனே இன்பில்ட்டாக வரும். இதனுடன் உங்களின் முக்கிய தகவல்களை பாதுகாக்கச் சிறப்பு டைட்டானியம் சிப் ஒன்று இதனுடன் பொருத்தப்பட்டுள்ளது. கீ-போர்டு இல்லாமல் எப்படி இது லேப்டாப் போல இயங்க முடியும் என நீங்கள் கேட்கலாம். அதற்குத்தான் தனி பிக்ஸல் ஸ்லேட் கீ-போர்டும், பிக்ஸல் ஸ்லேட் பென் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் ஹெட்செட் ஜாக் இல்லை; USB-C போர்ட் மட்டுமே உண்டு.

பிக்ஸல் 3 மற்றும் பிக்ஸல் 3 XL  போன்கள்

இரண்டு மொபைல்களும் OLED டிஸ்ப்ளேவுடன் வருகின்றன. பிக்ஸல் 3 5.5 இன்ச் ஸ்கிரீனுடனும், பிக்ஸல் 3 XL 6.3 இன்ச் ஸ்கிரீனுடனும் வருகின்றன. இரண்டுமே குவால்காமின் அதிநவீன ஸ்னாப்டிராகன் 845 புராசஸரில் இயங்குகின்றன. பிக்ஸல் 3, 2915 mAh பேட்டரியும், பிக்ஸல் 3 XL 3430 mAh பேட்டரியும் கொண்டுள்ளன. ஆண்ட்ராய்டு பை 9.0 ஓ.எஸ்-ஸில் இவையிரண்டும் இயங்கும். ஹெட்செட் ஜாக் இல்லாததால் இம்முறை USB-C ஹெட்செட்டுகளை கூடவே தருகிறது கூகுள்.

கேமராதான் இந்த இரு மொபைல்களின் மிகப்பெரிய கவர்ந்திழுக்கும் சக்தி என நம்புகிறது கூகுள். செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் எந்த மொபைல் போனிலும் இல்லாத சிறந்த போட்டோவை இதில் எடுக்க முடியும் என்கிறது கூகுள். Top Shot என்னும் வசதியின் மூலம் எடுப்பதில் சிறந்த போட்டோ எது என்பதைத் தேர்ந்தெடுத்து கொடுக்கும். PhotoBooth வசதியின் மூலம் சிரிக்கும்போதும், ஏதாவது வேடிக்கையான போஸ் கொடுக்கும் போதும் தானாகவே போட்டோ எடுத்துவிடும் இந்த போன்கள். Group Selfie வசதியின் உதவியுடன் நிறைய நபர்களை செல்ஃபிக்குள் கொண்டுவரச் zoom out செய்ய முடியும். இதை மொபைலின் முன்பக்கமிருக்கும் இரட்டை 8 MP கேமராக்கள் மூலம் செய்கிறது பிக்ஸல் 3 மற்றும் 3 XL. Night Sight வசதி மூலம் ஃபிளாஷ் இல்லாமலேயே இரவில் போட்டோக்கள் எடுக்கலாம்.

இது தவிர்த்து 'Screen Call' என்னும் வசதியையும் தருகிறது இது. இதன் மூலம் வேண்டாத கால்களை உங்களுக்காகக் கூகுள் அசிஸ்டன்ட் அட்டென்ட் செய்யும். பின் அவர்கள் கூறுவதை அப்படியே வார்த்தைகளாக டிஸ்ப்ளே செய்யும். இதன் மூலம் தேவையில்லாத ஸ்பேம் கால்களைத் தவிர்க்க முடியும். விளம்பர அழைப்புகளை நீங்கள் அட்டென்ட் செய்வதற்கு பதிலாக, கூகுள் அசிஸ்டன்ட்டையே அட்டென்ட் செய்யவிடலாம்.

பிக்ஸல் ஸ்டாண்ட் 

பிக்ஸல் 3 மற்றும் 3 XL போன்களின் வயர்லெஸ் சார்ஜிங்காக அறிமுகப்படுத்தப்பட்டது இந்த பிக்ஸல் ஸ்டாண்ட். மொபைலுடன் வராத இதைத் தனியாகத்தான் வாங்கவேண்டும். இதில் கனெக்ட் செய்யும்போது கூகுள் அசிஸ்டன்ட் உதவியுடன் போன்கள் ஹோம் ஹப் போல் இயங்கும். 

தற்போதைக்கு இந்தியாவிற்கு மொபைல்கள் மட்டுமே விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது. மற்ற சாதனங்களை பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. பிக்ஸல் 3 மொபைல் 71,000 ரூபாய்க்கும் பிக்ஸல் 3 XL 83,000 ரூபாய்க்கும் பிக்ஸல் ஸ்டாண்ட் 6,900 ரூபாய்க்கும் இந்தியாவில் விற்பனைக்கு வரும்.