பால் போலே பதினாறில்...

ஓவிட் எழுதிய ‘மெட்டாமோர்போசஸ்’ காப்பியத்தில் `கலாட்டியாவின் கதை’ வருகிறது.

பிக்மாலியன் புகழ்பெற்ற சிற்பி. பெண்களைக் கண்டாலே வெறுப்பு. எந்தப் பெண்ணும் அழகானவளாக பிக்மாலியன் கண்களுக்குத் தெரிவதில்லை. அதனால் கன்னிப்பையனாகவே காலம் கழிக்கிறான். காத்திருந்து காத்திருந்து, முழுமையான ஒரு பெண்ணைத் தந்தத்தில் சிலையாக வடிக்கிறான். அந்தச் சிலைக்கு `கலாட்டியா’ எனப் பெயர் சூட்டுகிறான். கலாட்டியா என்றால் `பால்வெண்மையான பெண்.’

அந்தச் சிலையைக் காதலிக்க ஆரம்பிக்கிறான். சிலைக்கு முத்தமிட்டு முத்தமிட்டுக் கட்டியணைத்துக் காதல் புரிவான். நிஜமான பெண் போலவே இருந்தாலும் கலாட்டியாவுக்கு உயிரில்லையே! அந்தக் கவலையிலேயே நாள்கள் ஓட, பிக்மாலியன் வாட... அந்த சமயத்தில் காதல் கடவுளான ஏப்ரோடைடியைக் கொண்டாடும் திருவிழா ஊரில் கொண்டாடப்படுகிறது.

காதல் வேண்டுதல்களை ஏப்ரோடைடியிடம் வைத்தால் அது நிச்சயம் பலிக்கும் என்பது ஐதீகம், கோயிலுக்குச் சென்று ஏப்ரோடைடியிடம் “எனக்கு ஒரு காதலி வேண்டும். அந்தப் பெண் உயிருள்ள கலாட்டியாவைப்போல இருக்க வேண்டும்’’ எனச் சூசகமாக வேண்டிக்கொள்கிறான்.

வீட்டுக்கு வந்த பிக்மாலியன் கலாட்டியாவிடம் நடந்ததை எல்லாம் சொல்கிறான். காதல் கடவுளுக்குத் தன் குரல் கேட்டதோ இல்லையோ என வருந்துகிறான். எப்போதும்போல தூங்கச்செல்லும்முன் கலாட்டியாவைக் கட்டியணைத்து முத்தமிடுகிறான். அவளுடைய இதழ்கள் பாலாடைக்கட்டி போல மிருதுவாக இருக்கின்றன. கன்னத்தில் முத்தமிடுகிறான். அது பால்கோவா போல மென்மையாய் இருக்கிறது. கல்லுமாதிரி இருக்கிற இதழ்கள் என்ன இப்படி மாறிவிட்டது என விளக்கைப் போட்டுப் பார்க்கிறான், முத்தமிட முத்தமிட, தந்தத்தால் ஆன உடல் மனித உடலாக மாறத்தொடங்குகிறது. கலாட்டியா உயிர்பெறுகிறாள். பிக்மாலியனால் நம்பவே முடியவில்லை. இருவரையும் ஏப்ரோடைடி வானிலிருந்து ஆசிர்வதிக்கிறாள். கலாட்டியாவையே திருமணம் செய்துகொண்டு பிள்ளைகுட்டி பெற்றுக்கொண்டு சீரும் சிறப்புமாக வாழ்ந்தான் பிக்மாலியன் என்பதாக அந்தக் கதை முடிகிறது.

இந்த தெய்வீகக் காதல்கதையைக் கேட்டால் சிலிர்ப்பாக இருக்கிறதில்லையா... அனேகமாக உலகின் முதல் செக்ஸ் பொம்மை கலாட்டியாவாகத்தான் இருக்கவேண்டும். கி.பி எட்டாம் நூற்றாண்டு கற்பனைக்கதை இது. மனிதமனம் எத்தனை நூறு ஆண்டுகளாகக் காதல் பொம்மைகளின் மீது தீரா மோகம்கொண்டு அலைந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இந்தக் கதை நமக்கு உதவுகிறது.

தனக்கு மட்டுமேயான, தன்னுடைய பாலியல் விருப்பத்திற்கு ஆடுகிற, அடிமைபோலச் செயல்படுகிற பெண்ணுடலை உருவாக்குகிற முயற்சியில்தான் ஆண்மனம் பல காலமாகவே இருக்கிறது. தொன்றுதொட்டுத் தொடரும் ஆண்மனதின் குறியீடே ‘கலாட்டியா!’

ஒரு போராட்டம்

(பெண்) செக்ஸ் ரோபோக்களுக்கு எதிராகப் பெரிய யுத்தத்தையே நடத்திக்கொண்டிருக்கிறார் கேத்லீன் ரிச்சர்ட்ஸன். அவருடைய #campaignagainstsexrobots போராட்டம், செக்ஸ் AI ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் மிகப்பிரபலம்.

கடந்த சில ஆண்டுகளாக லண்டனின் அறிவியல் மாநாடுகளை நடத்திவருபவர் டேவிட் லெவி (Refer - முந்தைய அத்தியாயம்). லெவி தன்னுடைய நூலான Love and Sex with robots என்கிற தலைப்பிலேயே இந்தச் சர்வதேச மாநாட்டை நடத்துகிறார். இதில் உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவுத்துறை அறிஞர்கள் எல்லாம் கலந்துகொண்டு, நடந்தது, இனி நடக்கப்போவது, இதுவரை செய்தது, செய்யக்கூடாதது எல்லாவற்றையும் பேசுவார்கள், ஆய்வறிக்கை சமர்ப்பிப்பார்கள்.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு விஞ்ஞானியும் தவறாமல் செய்கிற காரியம் ஒன்று உண்டு. எல்லோருமே இரண்டுவரியாவது கேத்லீனைக் கண்டித்துப் பேசுவார்கள். ஆவேசமாக அவருடைய கருத்துகளை மறுப்பார்கள். ஏன் அப்படி? பெண்ணியவாதியும் மானுடவியல் அறிஞருமான கேத்லீனின் கருத்துகள் அவ்வளவு வலிமையானவை.

லெவியின் கணிப்புகள் (முந்தைய அத்தியாயம்) கேள்விகள் எல்லாவற்றிற்கும் கேத்லீனிடம் விடையிருக்கிறது. அந்த விடைகள் செக்ஸ் பொம்மைகள் குறித்த நம் பார்வைகளை மாற்றக்கூடியவை.

லெவியின் கணிப்பு - செக்ஸ் ரோபோக்களால் பெண்கள்மீதான பாலியல் வன்கொடுமைகள், தொல்லைகள் குறையும். பாலியல் தொழில், கடத்தல் குறையும். பீடோபைல்களுக்கு (குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு உள்ளவர்கள்) வடிகாலாக இருக்கும்.

கேத்லீனின் பதில் - இவையெல்லாம் அனுமானங்கள்தான். இந்த செக்ஸ் ரோபோக்களால் எதுவுமே மாறப்போவதில்லை. ஏற்கெனவே சந்தையில் செக்ஸ் பொம்மைகளும், கருவிகளும் கிடைக்கின்றன. அவை சமூகத்தில் பாலியல் வன்கொடுமைகளை எந்த அளவுக்குக் குறைத்திருக்கிறது? இந்தத் தொழில்நுட்ப மாற்றங்கள் எல்லாமே ஏற்கெனவே வக்கிரமான உணர்வுகளோடு அலையும் ஆண்களை மேலும் வக்கிரமான வர்களாகத்தான் மாற்றும். காரணம், இந்த செக்ஸ் ரோபோக்கள் எல்லாமே உயிருள்ள பெண்ணின் சாயலில்தான் படைக்கப்ப டுகின்றன. ஏன் இந்த செக்ஸ் பொம்மைகள் ஏலியன்களைப்போலவோ வேறு ஏதோ உருவங்களிலோ உருவாக்கப்படவில்லை?

இந்த அறிவுள்ள பொம்மைகள் நல்ல அடிமைகள். பெண்களை அடிமைகளாக ஏலம்விட்டுப் பார்க்கும் பண்டைய மனநிலைதான் இது. பெண் பொம்மை சலித்துப்போகும்போது பொம்மையிடம் செய்து பார்த்ததையெல்லாம் உயிருள்ள நிஜமான பெண்களிடமும் முயற்சி செய்து பார்க்கத்தொடங்கினால் என்ன ஆகும்? இந்த பொம்மைகளால் புதுவகையான சைக்கோக்களை உருவாக்கப்போகிறோம். பீடோபைல்களுக்குக் குழந்தை மாதிரியான பொம்மைகளை அல்லவா தரப்போ கிறோம்? பீடோபைல்களிடமிருந்து அது எந்த வகையில் நம் குழந்தைகளைக் காக்கும்? பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுகிறவர்கள் வெறும் பாலியல் தேவைகளுக்காக மட்டுமே அதில் ஈடுபடுவதில்லை. அடுத்தவருடைய வேதனையை ரசிப்பது, அந்தக் கதறலைக் கொண்டாடுவது, அதிகாரத்தின் வழி அவர்களைப் பாலியல்ரீதியில் ஒடுக்குவது ஆகியவற்றுக்காகவும்தான். இந்த வகை மகிழ்ச்சியெல்லாம் ரோபோக்களிடம் கிடைக்காது. ரோபோக்களைப் பாலியல் வன்கொடுமை செய்தாலும், கொன்றாலும் அவை பொய்யாகத்தானே அழும்.

கேத்லீனின் கேள்விகளுக்கு யாரிடமும் பதில் இல்லை. ஆனால் இந்த வியாபாரத்தில் நிறைய நிறைய பணம் இருக்கிறது. பில்லியன் டாலர் பிசினஸ். அதில்தான் முதலாளிகளுக்கு ஆர்வமிருக்கிறது. நம்முடைய ஊர் அப்படித்தான். எதுவந்தாலும் அது பாலியல்வழிதான் வரும். இணையப் பயன்பாட்டில் தொடங்கி வீடியோ ஸ்ட்ரீமிங், ஆன்லைன் ஷாப்பிங், Payperview வரை சகல முன்னேற்றங்களுக்கும் ஆபாசத்தளங்கள்தான் ஆரம்பம். AI -இலும் அதுதான் நடக்கிறது. நிச்சயமாக முந்தைய தொழில்நுட்ப மாற்றங்களைப்போலவே இதன்வழி நிறைய நல்லதும் நடக்கலாம். கேத்லீனுடைய அச்சம் நமக்கும் உண்டு, ஆனால் இதைத் தவிர்க்கமுடியாது.

இந்தக் காதல் பொம்மைகள் நிச்சயம் தனிமையில் இருப்பவர்களுக்கு உதவும், பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளமுடியாதவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவலாம். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. பாலியல் தேவையைப் பூர்த்தி செய்வது ஈஸி. காதலிப்பது, துணையாக இருப்பது, நண்பராக வாழ்வது, பாடமெடுப்பது, சிகிச்சை கொடுப்பது, காதலிப்பது...Etc இவற்றுக்கெல்லாம் அடிப்படையான ஒன்று தேவையாக இருக்கிறதே... உணர்வுகள்!

சகமனிதர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதில் இருக்கிற சிக்கல்களால்தான் இங்கே பிரிவுகளும் துன்பங்களும் போர்களும் இன்னல்களும் விவாகரத்துகளும் பிரேக் -அப்களும் தற்கொலைகளும் நிகழ்கின்றன. நாமெல்லாம் உலகில் தோன்றி இத்தனை ஆண்டுகளாகி இன்னமும்கூட உணர்வுகளைப் புரிந்து கொள்வதில் தத்திகளாக இருக்கும்போது, ஓர் எந்திரத்தால் எப்படி முடியும்?

நம்முடைய உணர்வுகள் சிக்கலானவை. அதே அளவுக்கு, அந்த உணர்வுகளை ஓர் அல்காரிதமாக மாற்றுவதும் சிக்கலானது. ஓர் எந்திரத்தை அழுவதற்காகவே வடிவமைக்க லாம் அல்லது அழுகையைப் புரிந்துகொள்ள வடிவமைக்கலாம். அவற்றுக்கு அழுகையின் அகம் புறங்கள் இவைதாம் என அறிவூட்டலாம். ஆனால், உணர்வுகளை ஊட்டமுடியுமா?

சக மனிதனின் கண்ணீருக்கான காரணங்கள் புரியாமல் மனிதர்களே குழம்பும்போது அல்காரிதங்களால் எதை உணரமுடியும்? நாம் அழுதால் நம்முடைய அழுகை என்பது ஆனந்தத்திலா, இழப்பிலா, தவிப்பிலா, பிரிவிலா, ஏக்கத்திலா அல்லது வெங்காயம் உரித்ததாலா என எப்படி எந்திரங்களால் மொழி பெயர்த்து க்கொள்ள முடியும்?

மனிதர்களுக்கும் கணினி களுக்குமான வேறுபாடு அந்த உணர்வுகள்தாம். ஆனால் உணர்வுகளை உள்வாங்கி க்கொள்ளக் கூடிய எந்திரங்களும் தயாரிக்கப்ப டுகின்றன. Emotional AIகள். அவை நம் மூளைகளின் செயல்பாட்டின் வழி நம் உணர்வுகளைக் கண்டறியும்.

ஆனால் அவை தயாரிக்கப்ப டுவது நம்மைத் தாலாட்ட அல்ல... நம்மைக் கண்காணிக்க!

- காலம் கடப்போம்