புது டிசைன், கிட்டத்தட்ட அதே விலை... ஒன்ப்ளஸ்6T-ன் ப்ளஸ் மைனஸ்! #VikatanGadgetReview

OnePlus6T review
தற்போது 6T-யின் ஆரம்ப விலை 37,999. இந்த விலைக்கு ஏற்றபடி இருக்கிறதா ஒன்ப்ளஸ்?
எல்லாம் ஏற்கெனவே தெரிந்துவிட்ட போதிலும், டெல்லியில் நேற்று நடந்த ஒன்ப்ளஸ் 6T லாஞ்ச் கொஞ்சம் சுவாரஸ்யமாகவே இருந்தது. Never Settle, Flagship KILLER என்னும் டேக்லைன்களை விடவும் ஒன்ப்ளஸ், இவ்வளவு தூரம் வாடிக்கையாளர்களைப் பெற்றதற்குக் காரணம் அதன்மீது அதன் வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் மதிப்புதான். விளம்பரங்களைத் தாண்டி ஒன்ப்ளஸ் இவ்வளவு ஹிட் அடித்ததற்குக் காரணம், அதன் Word Of Mouth-தான். அமேசான் தளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே, பெருமளவிலான விற்பனையைச் செய்யும் ஒன் ப்ளஸ், சாம்சங், ஆப்பிள் போன்ற ப்ரீமியம் மொபைல்களை விடவும், கடந்த ஆறு மாதத்தில் அதிக மொபைல்களை விற்றதற்கும் அதுவே காரணம். கடந்த மே மாதம், ஒன்ப்ளஸ் 6 மொபைலை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது, ஒன்ப்ளஸ் 6Tயை வெளியிட்டிருக்கிறார்கள். ஒன்ப்ளஸ் 6 சில வாரங்களிலேயே 10 லட்சம் யூனிட்கள் விற்றதாக அதிகாரபூர்வமாகத் தெரிவித்திருக்கிறார்கள். இந்தியாவில் கடந்த இரு காலாண்டுகளிலும், ப்ரீமியம் மொபைல் செக்மென்ட்டில் ஒன்ப்ளஸ்தான் நம்பர் ஒன். #OnePLus6T. இதெல்லாம் ஒன்ப்ளஸ்ஸின் டிராக் ரெக்கார்டு. இதை ஒன்ப்ளஸ் 6T-யிலும் தக்கவைக்குமா?