Published:Updated:

கேட்ஜெட்ஸ்

கேட்ஜெட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
கேட்ஜெட்ஸ்

மொபைல் - டிஜிட்டல் உலகம்கார்த்தி

கேட்ஜெட்ஸ்

மொபைல் - டிஜிட்டல் உலகம்கார்த்தி

Published:Updated:
கேட்ஜெட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
கேட்ஜெட்ஸ்

Real Me

பட்ஜெட் மொபைல்களைப் பொறுத்தவரையில் ஷியோமியின் ரெட்மி நிறுவன மொபைல்கள்தான் எப்போதும் டாப் சேல்ஸ். அதற்குப் பதிலடி கொடுக்க ஒப்போ நிறுவனம் ‘ரியல்மி’ எனும் பெயரில் புதிய மொபைலை இறக்கியிருக்கிறது.

கேட்ஜெட்ஸ்

* FibreGlass ஃபினிஷ்
* 2160 x 1080 பிக்ஸல் - 6’’ ஸ்கிரீன்
* 13 மெகாபிக்ஸல் ரியர் கேமரா 
* Bokeh வசதியுடன்கூடிய 8 மெகாபிக்ஸல் ஃபிரன்ட் கேமரா 
* 3410mAH பேட்டரி
* ஆண்டிராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் * டூயல் சிம் + மெமரி கார்டு ஸ்லாட்

6 ஜிபி ரேம் வசதி இதில் இருப்பதால், மல்ட்டி - டாஸ்க்கிங் மிகவும் சுலபம். மொபைல் சூடாவதில்லை என்பது கூடுதல் ப்ளஸ். எல்லாம் சரியாக இருக்கும் மொபைலில், ஃபிங்கர் பிரின்ட் பாதுகாப்பு வசதியை ஒப்போ ஏன் மிஸ் செய்தது என்பது புரியாத புதிர்.

!விலை


* 3 ஜிபி ரேம் + 32 ஜிபி இன்டெர்னல் மெமரி ரூ8,990

* 4 ஜிபி ரேம் + 64 ஜிபி இன்டெர்னல் மெமரி ரூ10,990

* 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் மெமரி ரூ13,990

ப்ளஸ்

* சிறந்த திறன்

* சிறப்பான ஃபேஸ் அன்லாக் வசதி

மைனஸ்

* ஃபிங்கர் பிரின்ட் வசதி இல்லை

மற்ற சாய்ஸ்

ரெட்மி நோட் 5

ரியல்மி-ஐ விடவும் சிறப்பான பேட்டரி, பிராசஸர், ஃபிங்கர் பிரின்ட் சென்ஸார் போன்றவற்றில், நோட் 5 டிக் அடித்தாலும் விலை சற்று அதிகம். இரண்டிலுமே ஆவரேஜ் கேமராதான். ரெட்மி நிறுவனம்தான் உங்கள் ஒரே சாய்ஸ் என்றால், ரியல்மி-க்கு ஈடுகொடுப்பது நோட் 5 தான்.

மோட்டோ ஜி 6


டூயல் கேமரா, அதிவேக சார்ஜிங் வசதி போன்றவற்றில் டிக் அடிக்கிறது மோட்டோ ஜி6. ஆனால், 4 ஜிபி + 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மாடலுக்கே , நீங்கள் 15,999 ரூபாய் செலவு செய்ய வேண்டியதிருக்கும்.

கேட்ஜெட்ஸ்

ரெட்மி Y2

ரெட்மி-க்குப் போட்டியாக ஒப்போ நிறுவனம் ‘ரியல்மி’ என ஆரம்பித்தால், ரெட்மி நிறுவனம் தங்களது அடுத்த மாடலான ரெட்மி Y2-வை ரியல்யூ (RealYou) மொபைல் என விளம்பரம் செய்திருக்கிறார்கள்.

ரெட்மி Y1 மொபைலில் இருப்பது போலவே, இதிலும், டூயல் சிம் ஸ்லாட் + மெமரி கார்டு ஸ்லாட் இருக்கிறது .  பொதுவாக கேமராக்களில் அதிகக் கவனம் செலுத்தாத ரெட்மி, இந்த சீஸனில் அனைத்து மொபைல்களிலும் கேமராக்களில் தொடர்ந்து டிக் அடித்துவருகிறது. ரெட்மி நோட் 5 ப்ரோவைத் தொடர்ந்து Y2-விலும் கேமரா சிறப்பானதாக இருக்கிறது. குறைவான வெளிச்சத்தில் சோபிக்கத் தவறுவது மட்டுமே ஒரே மைனஸ்.

* 1440x720 பிக்ஸல் - 5.99’’ டிஸ்ப்ளே
* செல்ஃபி லைட் வசதியுடன்கூடிய 16 மெகாபிக்ஸல் ஃபிரன்ட் கேமரா
* 12 மெகாபிக்ஸல் + 5 மெகாபிக்ஸல்
* டூயல் ரியர் கேமரா
* 18:9 aspect ratio உடன்கூடிய டிஸ்ப்ளே
* டூயல் சிம் + மெமரி கார்டு ஸ்லாட்
* Qualcomm Snapdragon 625 பிராசஸர்
* 3080mAh பேட்டரி
* ஆண்டிராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம்

விலை

* 3ஜிபி ரேம் +32 ஜிபி இன்டெர்னல் மெமரி ரூ9,999

* 4ஜிபி + 64 ஜிபி இன்டெர்னல் மெமரி ரூ12,999

மற்ற சாய்ஸ்

Honor 7C

டூயல் ரியர் கேமரா, 6’’ டிஸ்ப்ளே, ஸ்லிம் டிசைன் என 7c எல்லா விதத்திலும் டிக் அடிக்கிறது. சார்ஜ் ஏற அதிக நேரம் எடுத்துக்கொள்வது, ஹோனர் நிறுவன மொபைல்களில் இருக்கும் பெரும் சோதனை. முழுவதுமாக சார்ஜாக 2 மணி நேரத்துக்கு மேல் ஆகிறது.