கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

கேட்ஜெட்ஸ்

கேட்ஜெட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
கேட்ஜெட்ஸ்

கேட்கெட்ஸ் - டிஜிட்டல் உலகம்கார்த்தி

கேட்ஜெட்ஸ்

ன் ப்ளஸ் நிறுவனம், முதன்முறையாக ப்ளூடூத் ஹெட்செட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. முதல் விற்பனையிலேயே 3 நிமிடங்களில் உலகம் முழுக்க அவுட் ஆஃப் ஸ்டாக் ஆனதுதான் இந்த ஹெட்செட்டின் முதல் ப்ளஸ்.

ஒன் ப்ளஸ்ஸின் மொபைல்களில் இருந்த டேஷ் சார்ஜிங் டெக்னாலஜியை, ஹெட்செட்டுக்குள் நுழைத்திருக்கிறார்கள். 10 நிமிடம் சார்ஜ் செய்தாலே 5 மணி நேரம் வரை பயன்படுத்த முடிகிறது. மேக்னெட் கொண்ட இரு பக்கங்களையும் இணைத்தால் ஆஃப், மீண்டும் அவற்றை பிரித்தால் ஆன் ஆவது என அசத்துகிறது Wireless Bullets. ஒன் ப்ளஸ் 6 மொபைலைப் போலவே, இதற்கும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டென்ட் உத்திரவாதம் தருகிறது ஒன் ப்ளஸ். அதாவது சாரலில் நனையலாம், அடை மழையில் நனையக் கூடாது.

ப்ளஸ்: சிறப்பான சவுண்ட் குவாலிட்டி, அட்டகாசமான கனெக்ட் / டிஸ்கனெக்ட் வசதி, அதிவேக சார்ஜிங்

மைனஸ்: வாட்டர் ப்ரூஃப் இல்லை

கேட்ஜெட்ஸ்

கடந்த ஆண்டு ஐஃபோன்  X வெளிவந்ததிலிருந்தே, எல்லா மொபைல்களும் நாட்ச் டிசைனுக்கு அப்டேட் ஆகிவிட்டன. அதிக ஸ்கிரீன் ஸ்பேஸ், 18:9 Aspect Ratio என்பதுதான் தற்போதைய மொபைல்களின் செல்லிங் பாயின்ட். விவோ தனது X21 மொபைலை 19:9 Aspect Ratio-வில் வெளியிட்டிருக்கிறது. அதிக ஸ்கிரீன் ஸ்பேஸ்க்காக, அனைத்து மொபைல்களும் ஃபிங்கர் பிரின்ட் சென்ஸாரை பின்பக்கம் கொண்டுசெல்ல, விவோ முதன்முறையாக ஸ்கிரீனேலேயெ ஃபிங்கர் பிரின்ட் சென்ஸாரைச் சேர்த்திருக்கிறார்கள்.

‘அட, என் மொபைலில் ஃபிங்கர் பிரின்ட் ஸ்கிரீனிலேயே இருக்கே’ என கெத்து காட்ட விரும்புகிறவர்கள், தாராளமாக விவோ  X21ஐ தேர்வு செய்யலாம்.

* 6.28” FHD+ டிஸ்ப்ளே

* 6 ஜிபி ரேம்

* 3200 mAh பேட்டரி

* ஆண்டிராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம்

* டூயல் ரியர் கேமரா (2 * 12 மெகாபிக்ஸல் + 5 மெகாபிக்ஸல்)

* 2 * 12 மெகாபிக்ஸல் ஃபிரன்ட் கேமரா

* ரியர் கிளாஷ் பினிஷ்

ப்ளஸ்: சிறப்பான சாப்ட்வேர், இன்பில்ட் ஃபிங்கர் பிரின்ட் சென்ஸார், சிறப்பான ஃபேஸ் அன்லாக்

மைனஸ்: டைப் சி போர்ட் இல்லை, அதிக விலை

கேட்ஜெட்ஸ்

‘சூப்பர் டூப்பர் பேட்டரி கொண்ட போன்’ என பட்ஜெட் மொபைல்களில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருந்தது அசூஸ் ஜென்ஃபோன். தற்போது `30,000 பட்ஜெட்டில் அட்டகாசமான வசதிகளுடன்கூடிய மொபைலை வெளியிட்டிருக்கிறது. ஐஃபோன் Xல் இருக்கும் அனிமோஜி போல், அசூஸும் இதில் ZeniMoji எனும் இமோஜிக்களைப் புகுத்தி இருக்கிறது. உங்கள் முகபாவனைகளை பிரதி எடுத்து அசத்துகின்றன இந்த இமோஜிக்கள்.

இந்த மொபைல் முழுக்க முழுக்க AI-ல் இயங்குகிறது. சுற்றுப்புற ஒலி அளவை வைத்து, மொபைல் ரிங்டோன் எவ்வளவு சத்தமாக ஒலிக்க வேண்டும் என்பது வரை தீர்மானிக்கிறது 5 Z. டைப் சி சார்ஜருடன் கூடிய அதிவேக சார்ஜிங் வசதி இருந்தாலும், முழுமையாக சார்ஜ் ஆக 90 நிமிடங்களுக்கு மேல் எடுத்துக்கொள்கிறது 5Z.

* டூயல் ரியர் கேமரா (12 MP + 8 MP)

* 8 MP ஃபிரன்ட் கேமரா

* 3300 mAh பேட்டரி

* 6.2” Full HD+ (2246 * 1080) Super IPS+ டிஸ்ப்ளே

* 2 டிபி வரை மைக்ரோ SD கார்டு வசதி

* 100 ஜிபி கூகுள் ஸ்டோரேஜ் இலவசம்

* Qualcomm® Snapdragon™ 845 64 bit ஆக்டோகோர் பிராசஸர்

* ஆண்டிராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம்.

* ரியர் 2.5 D கிளாஷ் ஃபினிஷ்

விலை

* 6 ஜிபி ரேம் + 64 ஜிபி இன்டெர்னல் மெமரி ரூ29,999

* 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் மெமரி ரூ32,999

* 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டெர்னல் மெமரி ரூ36,999

ப்ளஸ்: நல்ல கேமரா, AI வசதிகள், சிறப்பான ஹெட்செட் .

மைனஸ்: Wireless சார்ஜிங் இல்லை, வாட்டர் ரெசிஸ்டென்ட் இல்லை, ஃபேஸ் அன்லாக் அவ்வளவு சிறப்பாக இல்லை.

மற்ற சாய்ஸ்

ஒன் ப்ளஸ் 6:


புராசஸர், ரேம் , லுக் & ஃபீல் போன்றவற்றில் இரு மொபைல்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. பர்ஃபாமென்ஸ், அதிவேக சார்ஜிங் போன்றவற்றில் ஒன் ப்ளஸ் முன்னே இருந்தாலும், அசூஸ் கேமராவில் ஓவர்டேக் செய்கிறது. ஒன் ப்ளஸ் 6 விலையை விட, 5Z ரூ 5,000 விலை குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹானர் 10

மூன்று மொபைல்களுக்குமான ஸ்பெக்ஸில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. சிறப்பான கேமராதான் உங்கள் சாய்ஸ் என்றால், ஒன் ப்ளஸ் 6, 5Z விட ஹானர் 10 பெஸ்ட் சாய்ஸ். 24 மெகாபிக்ஸல் + 16 மெகாபிக்ஸல் டூயல் ரியர் கேமரா மற்றும் 24 மெகாபிக்ஸல் ஃபிரன்ட்கேமரா. விலை ரூ32,999.