Published:Updated:

பொறுமை பொண்ணுங்களுக்குத்தான் அதிகம்! - ரோபோ பொண்ணு ஸ்நேக ப்ரியா

பொறுமை பொண்ணுங்களுக்குத்தான் அதிகம்! - ரோபோ பொண்ணு ஸ்நேக ப்ரியா
பிரீமியம் ஸ்டோரி
பொறுமை பொண்ணுங்களுக்குத்தான் அதிகம்! - ரோபோ பொண்ணு ஸ்நேக ப்ரியா

வாய்ப்பு வாசல்ஆர்.வைதேகி - படங்கள் : க.பாலாஜி

பொறுமை பொண்ணுங்களுக்குத்தான் அதிகம்! - ரோபோ பொண்ணு ஸ்நேக ப்ரியா

வாய்ப்பு வாசல்ஆர்.வைதேகி - படங்கள் : க.பாலாஜி

Published:Updated:
பொறுமை பொண்ணுங்களுக்குத்தான் அதிகம்! - ரோபோ பொண்ணு ஸ்நேக ப்ரியா
பிரீமியம் ஸ்டோரி
பொறுமை பொண்ணுங்களுக்குத்தான் அதிகம்! - ரோபோ பொண்ணு ஸ்நேக ப்ரியா

பெண் குழந்தைகளுக்கு சொப்புச் சாமான்களும், ஆண் குழந்தைகளுக்கு கார் பொம்மைகளும் வாங்கித் தந்து வளர்ப்பது இயல்பு. பிற்காலத்தில் படிப்பில் தொடங்கி பார்க்கும் வேலை வரை இதன் பிரதிபலிப்பு தொடர்கிறது. கம்ப்யூட்டர் துறையில்கூட சாஃப்ட்வேர் பெண்களுக்கு, ஹார்டுவேர் ஆண்களுக்கு என்பதுதான் எழுதப்படாத நியதி. இதைத் தகர்த்தது மட்டுமன்றி, தன்னைப்போலவே பலரையும் தன் வழியில் ஈர்த்துக்கொண்டிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்நேகப்ரியா. எலெக்ட்ரிக்கல் அண்டு எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் பட்டதாரியான இவர், இன்று எஸ்.பி.ரோபோடிக்ஸ் நிறுவனத்தின் அதிபர்!

ஆண்கள் மட்டுமே முழு ஆளுமை செலுத்திவரும் ரோபோடிக்ஸ் துறையில், இன்று பெண்களாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக்காட்டியிருக்கிறார் ஸ்நேகப்ரியா.

``அண்ணா யுனிவர்சிட்டியில இன்ஜினீயரிங் முடிச்சேன். சின்ன வயசுலேருந்தே கேட்ஜெட்ஸைப் பிரிச்சு ஆராய்ச்சி பண்றது என் வழக்கம். முதல் வருஷம் படிக்கும்போதே நானும் என் நண்பர் பிரணவனும் ரோபோடிக்ஸ் தொடர்பான எல்லாப் போட்டிகள்லயும் கலந்துக்கிட்டோம். முதல் வருஷம் எல்லாப் போட்டிகள்லயும் தோல்வி. மூணாவது வருஷத்துல இன்டர்நேஷனல் போட்டிகள்ல இந்தியாவின் பிரதிநிதியா கலந்துக்கிற அளவுக்குத் தேறி, ஜெயிச்சிட்டு வந்தோம். தொடர் முயற்சிகளும் வெற்றிகளும்தான் ரோபோடிக்ஸ் துறை மீதான காதலை ஏற்படுத்துச்சு.

பொறுமை பொண்ணுங்களுக்குத்தான் அதிகம்! - ரோபோ பொண்ணு ஸ்நேக ப்ரியா

என் கல்லூரிக் காலத்துல, நான் கத்துக்கணும்னு நினைச்ச விஷயங்களுக்குத் தேவையான வசதிகளோ, வாய்ப்புகளோ கிடைக்கலை. அடுத்த தலைமுறையினருக்கு அந்தக் கஷ்டங்கள் இருக்கக் கூடாதுனு நினைச்சேன். நானும் பிரணவனும் சேர்ந்து இணையதளம் ஒண்ணு ஆரம்பிச்சோம். நாங்க ஏற்கெனவே உருவாக்கிய ரோபோவின் பாகங்களைக் காட்சிப்படுத்தி, விற்க ஆரம்பிச்சோம். அடுத்தகட்டமா கல்லூரி மாணவர்களுக்குப்  பயிற்சி கொடுக்கத் தொடங்கினோம்.

2012-ல படிப்பை முடிச்சதும் எங்க சொந்த கம்பெனியைப் பதிவுசெஞ்சோம். `கிட்டோபாடிக்ஸ்' என்ற பெயர்ல பள்ளிக் குழந்தைகளுக்கான பயிற்சிகளைத் தொடங்கினோம். போதுமான பயிற்சியாளர்கள் இல்லாததால், டிஜிட்டல் புராடெக்ட் ஒண்ணை டிசைன் பண்ணினோம். அதுவே ஒரு டீச்சரா செயல்படும். அனிமேட்டட் வீடியோஸ், நிஜ உதாரணங்கள் எல்லாத்தையும் வெச்சு சொல்லிக்கொடுக்கும். கான்செப்ட் புரியலைன்னா, அதையே வேற விதமா சொல்லிக்கொடுக்கும். டெஸ்ட் வைக்கிறது, அந்தக் குழந்தைக்கு அடுத்து என்ன மாதிரியான பயிற்சி தேவைனு எல்லாத்தையும் அதுவே முடிவுபண்ற மாதிரி அந்த சிஸ்டத்தை   மேம்படுத்தி அறிமுகப்படுத்தினோம்.

`ரோபோடிக்ஸ் படிப்பை ஆன்லைன்ல படிக்கிறதா... அதெப்படி சாத்தியம்?' என்கிற கேள்வி சிலருக்கு வரலாம். பயிற்சிக்கான கிட்டை நாங்க கொடுத்துடுவோம். அப்புறம் ஆன்லைன்ல டிஜிட்டல் டீச்சர் பாடம் எடுப்பாங்க. நேர்ல டீச்சர் இருந்து சொல்லிக்கொடுத்தா எப்படியிருக்குமோ, அப்படித்தான் குழந்தைங்க ஃபீல் பண்ணுவாங்க. ஒரு பார்ட்டைத் தப்பாப் பொருத்திட்டாங்கன்னா, ஆன்லைன் டீச்சர் அதைச் சுட்டிக்காட்டி அதுக்கான காரணத்தையும் விளக்கும். தப்பான விதங்களை எல்லாம் முதல்ல சொல்லிக்கொடுத்து, தவறுகள்லேருந்து பாடம் சொல்லிக்கொடுக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எல்லாருமே ஆன்லைன்ல படிக்கிறதை விரும்புவாங்கனு சொல்ல முடியாது. அதுக்காக, இந்தியா முழுக்க 35 மேக்கர் லேப்ஸ் ஆரம்பிச்சோம். அது ஸ்மார்ட் க்ளாஸ் செட்டப் மாதிரி இருக்கும். படிக்கிறவங்க அங்கே போகணும். லேப்ல உள்ள கிட்டை வெச்சுக் கத்துக்கலாம்'' - ஸ்நேகப்ரியாவின் பேச்சில் அடுக்கடுக்கான ஆச்சர்யங்கள்!

``ரோபோடிக்ஸ்ல எலெக்ட் ரானிக்ஸ், மெக்கானிக்கல், புரொகிராமிங்னு எல்லாம் இருக்கு. அதைப் படிக்கிறவங்களோட தனித்திறமையைக் கண்டுபிடிச்சு, டிஜிட்டல் டீச்சரே வழிகாட்டும். இன்ஜினீயரிங் முடிச்ச எத்தனையோ பேர் வேலையில்லாம இருக்காங்க. வேலையில்லைங்கிறது காரணமில்லை; தகுதியானவங்க இல்லைங்கிறதுதான் நிஜம். அந்தத் தகுதிகளைக் கண்டுபிடிச்சு வளர்த்துக்கிறதுக்கான ஒரு பிளாட்பாரம்தான் ரோபோடிக்ஸ் பயிற்சி'' என்கிற ஸ்நேகா, பேஸிக் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கலாக புளூ டூத் வைத்துச் செய்வது, கோடிங், அல்காரிதம் என  நான்கு கிட் வைத்திருக்கிறாராம்.

``அடுத்து ஐ.ஓ.டி. அதாவது, இன்டர்நெட் ஆஃப் திங்ஸ். இனிமே ஐ.ஓ.டி-தான் எதிர்காலம். இந்த உலகத்துல எல்லாப் பொருள்களும் இன்டர்நெட்டுடன் இணைக்கப்படுது. அந்தப் பொருள்களைப் பற்றிய எல்லாத் தகவல்களும் டேட்டாவா சேர்ந்துகிட்டே இருக்கும். அதைவெச்சு எவ்வளவோ விஷயங்கள் பண்ணலாம். அதைப் படிக்க ஐ.ஓ.டி தெரியணும். பெண்களின் பங்களிப்பும் ஆர்வமும் இந்தத் துறையில கம்மிதான். அதுக்கு, `பொண்ணுங்களுக்கு ஹார்டுவேர் வேலையெல்லாம் வேண்டாம்'னு பெற்றோர் நினைக்கிறது முதல் காரணம். ரோபோடிக்ஸ்ல, ஹார்டுவேர் மட்டுமில்லை... புரொகிராமிங்கும் இருக்கு. புரொகிராமிங்ல பொண்ணுங்கதான் பெஸ்ட். ஒரு ரோபோவை கோடிங் பண்ணும்போது, அது உடனே ஓடிடாது. அதுல தவறுகள் இருக்கும். அது ஓடி முடிச்ச பிறகுதான் தவறுகளைக் கண்டுபிடிச்சு சரிசெய்ய முடியும். அதுக்கான பொறுமை பொண்ணுங்களுக்குத்தான் அதிகம். பெற்றோர் இதைப் புரிஞ்சுக்கணும்'' - அடுத்த தலைமுறைக்கும் அவர்களின் பெற்றோருக்கும் அப்டேட்ஸ் கொடுக்கிறார்.

``இன்னிக்கு எல்லாத் துறைகளிலும் ரோபோக்களின் தேவை அதிகமாகியிருக்கு. போக்குவரத்துத் துறை, மிகப்பெரிய உதாரணம். அதனாலதான் செல்ஃப் டிரைவிங் கார்கள் பிரபலமாகிட்டுவருது. இந்தியாவின் முதல் ரோபோ ரெஸ்டாரன்ட், எங்களுடைய பெங்களூரு இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த மாணவர்கள் உருவாக்கினதுதான். எங்கெல்லாம் மனித உழைப்பு அதிகம் தேவையோ, அங்கெல்லாம் ரோபோக்களின் தேவை அதிகரிச்சிட்டிருக்கு. அந்த மனித உழைப்பை வேறவிதமான வேலைகளுக்குப் பயன்படுத்த முடியும்.

அதெல்லாம் சரி... `ரோபோக்களின் எண்ணிக்கை அதிகமானா, மனிதர்கள் வேலை இழக்கும் நிலை வராதா?'ன்னு கேட்கிறவங்களும் இருக்காங்க. கம்ப்யூட்டர் வந்தபோதுகூட இதையேதான் கேட்டாங்க. கம்ப்யூட்டர் வந்த பிறகு பல புதிய வேலைகள் உருவான மாதிரிதான் இதிலும் நடக்கும். அதனால, மக்கள் தங்களை அடுத்த நிலைக்குத் தயார்படுத்திக்க, திறமைகளை வளர்த்துக்கிறது அவசியம்...'' - `கண்டிஷன்ஸ் அப்ளை'யோடு சொல்கிறார் ஸ்நேகா.

ரோபோக்களைப் பற்றிப் பேசும்போது `எந்திரன்' சிட்டி எட்டிப்பார்க்காமல் இருக்குமா? நிஜத்தில் அப்படியொரு சிட்டி சாத்தியமா, ஸ்நேகா?

``முழுக்க ஹ்யூமனான அப்படியொரு ரோபோ சாத்தியமில்லை. ரெண்டு கால்களுடன் மனித உருவில் இருக்கிற அந்த மாதிரி ரோபோ நமக்குத் தேவையும் இல்லை. இப்போதைக்கு மனித உருவில் கால்களுக்குப் பதில் சக்கரங்கள் வெச்ச ரோபோக்கள்தான் புழக்கத்துல இருக்கு. எதிர்காலத்துல விவசாயம், மருத்துவமனை, ஸ்பேஸ் உள்ளிட்ட எல்லாத் துறைகள்லயும் ரோபோக்கள் வந்துடும். வீட்டுவேலைகளுக்குக்கூட ரோபோக்கள் வந்துடும். வாக்குவம் க்ளீனர், தோசை சுடுற ரோபோனு இப்பவே இருக்கு. ஆனா, விலை அதிகம். எதிர்காலத்துல வீடுகள்ல பயன்படுத்துற அளவுக்குக் குறைஞ்ச விலையில ரோபோக்களின் பயன்பாடு அதிகமாகும்'' - நம்பிக்கை தருகிறார்.

`ரோபோ மாதிரி சமைக்கிறதும், பாத்திரம் தேய்க்கிறதுமா என்னடா வாழ்க்கை இது!' என அலுத்துக்கொள்கிறவர்களுக்கு, அந்த வேலைகளையும் ரோபோக்களே செய்யப்போகிற நாள் தூரத்தில் இல்லை என்பதுதான் இப்போதைக்கு ஆறுதலான செய்தி!