Published:Updated:

ஃபோர்ட்நைட் முதல் பப்ஜி வரை... 2018-ன் சூப்பர் ஹிட் வீடியோ கேம்கள்!

ஃபோர்ட்நைட் முதல் பப்ஜி வரை... 2018-ன் சூப்பர் ஹிட் வீடியோ கேம்கள்!

இந்த வருடம் ட்ரெண்டிங்கில் இருந்து கேம்கள் இவை.

ஃபோர்ட்நைட் முதல் பப்ஜி வரை... 2018-ன் சூப்பர் ஹிட் வீடியோ கேம்கள்!

இந்த வருடம் ட்ரெண்டிங்கில் இருந்து கேம்கள் இவை.

Published:Updated:
ஃபோர்ட்நைட் முதல் பப்ஜி வரை... 2018-ன் சூப்பர் ஹிட் வீடியோ கேம்கள்!

ல பில்லியன் டாலர்கள் வர்த்தகம் நடைபெறும் துறைகளில் கேமிங்கும் ஒன்று. கேமின் வடிவமைப்பும், கான்செப்ட்டும் ஓரளவு வெற்றிபெற்றுவிட்டாலே போதும். விளம்பரம், கேம் பர்சேஸ் என வெகு சுலபமாக மில்லியன் கணக்கான டாலர்களை அள்ளிவிடலாம். இந்த வர்த்தகத்தை மனதில் வைத்துத்தான் ஹாலிவுட் பட அளவிற்கு உழைப்பைக் கொட்டி கேம்களை உருவாக்கி வருகின்றனர். அப்படி 2018-ல் கேமர்கள் மத்தியில் தெறி ஹிட்டான சில கேம்கள் இதோ.

RedDead Redemption 2:

2010-ல் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வசூலை வாரிக்குவித்த 'Reddead Redemption' கேமின் இறுதி பாகமாக இந்த கேம் வெளிவந்துள்ளது. உலகின் ஆல்டைம் பேவரைட் கேம் என்று சொல்லப்படும் 'Grand Theft Auto' கேமை தயாரித்த ராக்ஸ்டார் (Rockstar) நிறுவனம் இதைத் தயாரித்துள்ளது. இந்த கேம் வெளியான முதல் மாதத்தில் மட்டும் உலகளவில் 25 மில்லியன் கேம் சிடிக்கள் விற்றுள்ளது.

ஃபோர்ட்நைட் முதல் பப்ஜி வரை... 2018-ன் சூப்பர் ஹிட் வீடியோ கேம்கள்!

இந்த கேம்களின் கதைக்கருவையே ஒரு திரைப்படத்திற்கு இணையானதாக சுவாரஸ்யமாக வடிவமைத்துள்ளனர்.19-ம் நூற்றாண்டில் கதை நடைபெறுகிறது. அக்காலத்தில் வாழ்ந்த Cowboy Gang மனிதர்கள்தான் இந்த விளையாட்டின் மையம். தற்போதைய நிலவரப்படி RedDead Redemption 2 உலகளவில் சுமார் 300 மில்லியன் டாலருக்கும் மேல் வசூலித்துள்ளது.

EA FIFA 2019:

ஃபோர்ட்நைட் முதல் பப்ஜி வரை... 2018-ன் சூப்பர் ஹிட் வீடியோ கேம்கள்!

உலகம் முழுவதும் அதிக மக்களால் விரும்பிப் பார்க்கப்படும் விளையாட்டு கால்பந்து. கால்பந்தைப் பொறுத்தவரை பிரபல அணிகளின், வீரர்களின் டீ சர்ட், போஸ்டர்ஸ் மட்டுமே மில்லியன் கணக்கில் விற்பனை ஆகின்றன. இதேபோலத்தான் கேமிங்கும். இதை மனதில் வைத்து எலக்ட்ரானிக் ஸ்போர்ட்ஸ் (EA sports) நிறுவனத்தினரால் வடிவமைக்கப்பட்ட கால்பந்து கேம்தான் FIFA.ஒவ்வொரு வருடமும் இதன் அறிமுக விழாவே மிக பிரமாண்டமாக நடக்கும். கேம் வெளியாவதற்கு முதல்நாளே கேம் பிரியர்கள் கடை வாசலில் காத்து கிடக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதேபோல இந்த வருடமும் செப்டம்பர் 28-ம் தேதி வெளியான இந்த கேம், உலகளவில் ஸ்போர்ட்ஸ் கேம்களின் 'டிரெண்ட் செட்டர்' ஆனது. 

Fortnite Battle Royal:

ஃபோர்ட்நைட் முதல் பப்ஜி வரை... 2018-ன் சூப்பர் ஹிட் வீடியோ கேம்கள்!

2017-ம் ஆண்டு எவ்வித ஆடம்பர அறிவிப்பும் இல்லாமல் சாதாரணமாக வெளிவந்த கேம் 'Fortnite'. வெளியான சில தினங்களிலேயே உலகம் முழுவதும் பிரபலமடைந்து, இதன் கேம் சிடிக்கள் மளமளவென்று விற்றுத் தீர்ந்தன. இது இந்தளவிற்கு வெற்றிபெறும் என்று அதை வடிவமைத்த 'Epic Games' நிறுவனத்தினரே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இதனை சற்று மேம்படுத்தி ஆண்ட்ராய்டு, ஐ.ஒ.எஸ் ஆகிய இயங்குதளங்களுக்கும் சேர்த்து 2018-ல் வருடம் வெளியான கேம்தான் 'Fortnite Battle Royale' வெளியான குறுகிய நாட்களிலே கிட்டத்தட்ட 130 மில்லியன் பிளேயர்களை பெற்று மற்ற முன்னணி கேம்களைத் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.

God Of War:

ஃபோர்ட்நைட் முதல் பப்ஜி வரை... 2018-ன் சூப்பர் ஹிட் வீடியோ கேம்கள்!

ஆக்ஷன் கேம் பிரியர்களின் ஆல்டைம் சாய்ஸாக இருப்பது கேம் 'God of War'-தான். இந்த கேம் விளையாடும் அனைவருமே தங்களை இந்த கேமின் நாயகனான கேரடோஸ் (Kratos) ஆக கற்பனை செய்து கொள்வர். அந்தளவிற்கு இந்த கேமின் கதையமைப்பு வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த வருடம் ஏப்ரல் 20-ம் தேதி வெளியான இந்த கேம் இதற்கு முந்தைய God of war கேம்கள் படைத்த சாதனையைத் தவிடுபொடியாக்கி உள்ளது. வெளியான இரண்டு மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 25 மில்லியன் பிரதிகளை விற்று ஆக்ஷன் கேம் பிரிவில் தனிக்காட்டு ராஜாவாக உள்ளது. இதை வடிவமைத்தது Santa Monica studio என்றாலும் இதை உலகளவில் பிரபலமாக்கியது இக்கேமினை வெளியிட்ட சோனி நிறுவனமே ஆகும்.

PUBG:

ஃபோர்ட்நைட் முதல் பப்ஜி வரை... 2018-ன் சூப்பர் ஹிட் வீடியோ கேம்கள்!

2018-ல் வெளியான கேம்களில் உங்களுக்குப் பிடித்தது என்னவென்றால் சிறிதும் யோசிக்காமல் பெரும்பாலானோர் சொல்லும் பெயர் பப்ஜிதான். Player Unknown Battle Ground என்பதன் சுருக்கமே இந்த PUBG ஆகும். தென் கொரியாவைச் சேர்ந்த 'Bluehole' என்ற நிறுவனம் இதனை வடிவமைத்தது. முதலில் Windows இயங்குதளத்தில் அறிமுகமான PUBG பெரிய வெற்றியைருசித்தது. அதன் தொடர்ச்சியாக ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ் இயங்குதளங்களில் February 2018-ல் வெளியானது. இதனை வடிவமைத்த நிறுவனமே எதிர்பாராத அளவிற்கு இமாலய வெற்றியை இந்த கேம் பெற்றுள்ளது. செல்போனில் வெளியான சில காலத்திலேயே Xbox மற்றும் Pc கேமாக மாறிய பெருமை PUBG கேமையே சேரும். தற்போது வரை ட்ரெண்டிங்கில் இருக்கும் இந்த கேம் உலகின் அதிகமுறை தரவிறக்கம் செய்யப்பட்ட கேம்களில் ஒன்றாக உள்ளது.