Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

வலைபாயுதே

twitter.com/amuduarattai

ஆஸ்பத்திரி போனமா, ஆப்பிள் பழத்தைக் கொடுத்தமா, ஆறுதல் சொன்னமான்னு இருக்கணுமே தவிர, நோய்கள் பற்றிய நம் ஆராய்ச்சி முடிவுகளை நோயாளியிடம் சமர்ப்பிக்கக் கூடாது. 

வலைபாயுதே

twitter.com/sundartsp

கிருஷ்ணர் பர்த்டேக்கு குழந்தைகளுக்கு வேஷம் கட்டி மகிழ்ச்சி அடையுறாங்க, விநாயகரை அவர் பர்த்டேக்கு கடல்ல தூக்கிப்போடுறாங்க,  குண்டா  இருந்தா உலகம் கடவுள்னுகூட பாக்குறதில்லை.

twitter.com/HAJAMYDEENNKS

தூங்காம படின்னு பிள்ளைகளிடம் சொன்ன பெற்றோர்கள் இப்ப மொபைலைப் பார்க்காம தூங்குன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க...!

twitter.com/Kozhiyaar

நம் ஊர்லதான்யா, அரசியல்வாதியெலாம் ஆன்மிகம் பேசிட்டிருக்காங்க... சாமியாரெலாம் அரசியல் பண்ணிட்டிருக்காங்க!

twitter.com/yugarajesh2

இந்து மதத்தை மீட்டெடுக்க கடவுளால் அனுப்பப்பட்ட தூதர் எச்.ராஜா - விசு# நீங்களே உங்களுக்குள்ள கலாய்ச்சுக் கிட்டா அப்புறம் நாங்க எல்லாம் எதுக்கு..?

facebook.com/elambarithi.k

என்னதான் வீரம், வேதாளம், விவேகம்னு படமெடுத்து ஃபேமஸ் ஆனாலும் உலகம் ‘சிறுத்தை சிவா’ன்னுதான் சொல்லும். அதான் வாழ்க்கை.

facebook.com/karthikeyan.maddy

சாம்பார் பாக்கெட்டின் பின் முனையைக் கடித்து பிய்த்து.. தோசையில் பீய்ச்சி அடித்துக் கொண்டே... ‘தம்பி, பொறுமைங்கிறது... என்று ஆரம்பித்தார் அந்த போதகர்.

facebook.com/iam.suriyaraj

அந்தக் காலத்துல நார்லதானே மாலை கட்டினாங்க. அப்போ அதுக்குப் பெயர் `பூநார்’ன்னு தானே வந்திருக்கணும்..!

twitter.com/Kozhiyaar

கிக் ஸ்டார்ட் பைக்கிலிருந்து செல்ஃப் ஸ்டார்ட் ஸ்கூட்டருக்கு மாறுவது, வயது ஏறுவதற்கான குறியீடுகளில் ஒன்று!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வலைபாயுதே

twitter.com/motheenfarooq

தொலைநோக்குப் பார்வை என்பது தூரத்தில் ட்ராஃபிக் போலீஸ் பிடிப்பதை அறிந்து யூ டர்ன் எடுத்து மாற்றுப் பாதையில் செல்வதே.

twitter.com/chithradevi_91

டீச்சர்களைப் பொறுத்தவரை நல்ல மாணவன் என்பவன் பி.டி பீரியடிலும் புத்தகத்தோடு திரிபவன்.

twitter.com/thoatta

Psychiatrist நம்மகிட்ட கறக்கிறதைவிட சலூன்காரர் அதிகம் விஷயம் கறந்துடுறாரு.

twitter.com/Kozhiyaar

என்னதான் ரியர்வ்யூ கண்ணாடி யில் பார்த்து விட்டாலும், நம்ம தலையைத் திருப்பி நேர்ல பார்த்துகிட்டா தான் யாரும் இல்லைனு நம்புது மூளை!

twitter.com/shivaas_twitz

உடம்பைக் குறைக்க முடிவெடுக்கும் யாரும்,‘டயட்’டை ஞாயிற்றுக்கிழமை தொடங்குவதில்லை..!

twitter.com/smhrkalifa

வலைபாயுதே

நண்பன் திட்டும்போது சந்தோஷமாகவும், அதே நண்பன் நம்மைப் புகழும்போது பயமாகவும் இருக்கிறது.

twitter.com/Thaadikkaran

கோபமா இருக்குற அப்பாவைக்கூட நம்பிடலாம். எப்படியும் அடிப்பார்னு தெரியும். ஆனா அடிக்க மாட்டேன்னு சொல்ற அம்மா இருக்காங்களே, வெரி டேஞ்சுரஸ்..!

 facebook.com/Karna Sakthi

ஏக்கர் கணக்கில் தோட்டங்களுடன் இருக்கும் பிரதமர் மாளிகையை மறுத்துவிட்டு எளிமையாக மூன்று அறை கொண்ட ஒரு அபார்ட்மென்ட் ப்ளாட் மட்டும் போதும் என்றிருக்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான். இங்கே ஒரு ஏழைத்தாயின் மகன் மொத்த அபார்ட்மென்டையும் வாங்குற விலையில் ஒரு கோட்சூட்டை வாங்கிப் போட்டுக் கொண்டு திரிகிறார்.

facebook.com/ஜெ.வி. பிரவீன்குமார்

சில உணவகங்கள் காலையில் பொங்கலையும் சாம்பாரையும் தனித்தனியாக வழங்குகிறார்கள். மதியம் ஆனபின்னர் அந்த சாம்பாரையும் பொங்கலையும் ஒன்றாக்கி சாம்பார் சாதம் எனும் பெயரில் வழங்குகிறார்கள்.

twitter.com/Kozhiyaar

ஏதாவது திட்டுறதுன்னா போன் கட் ஆகிடுச்சான்னு உறுதிப்படுத்திக்கொண்டு திட்டுங்கப்பா! மனசு வலிக்குதுய்யா!

twitter.com/Thaadikkaran

வீட்ல நடக்குற மாமியார் கொடுமையைவிட விஜய் டிவில நடக்குற மாமியார் கொடுமைதான் அதிகமா இருக்கு..!

சைபர் ஸ்பைடர்