Published:Updated:

கூகுள் கூகுள் மாட்டிக்கிச்சு சிக்கலிலே!

கூகுள் கூகுள் மாட்டிக்கிச்சு சிக்கலிலே!
பிரீமியம் ஸ்டோரி
கூகுள் கூகுள் மாட்டிக்கிச்சு சிக்கலிலே!

கூகுள் கூகுள் மாட்டிக்கிச்சு சிக்கலிலே!

கூகுள் கூகுள் மாட்டிக்கிச்சு சிக்கலிலே!

கூகுள் கூகுள் மாட்டிக்கிச்சு சிக்கலிலே!

Published:Updated:
கூகுள் கூகுள் மாட்டிக்கிச்சு சிக்கலிலே!
பிரீமியம் ஸ்டோரி
கூகுள் கூகுள் மாட்டிக்கிச்சு சிக்கலிலே!

ன்னும் சில மாதங்களில் ‘சங்கமே அபாரதத்தில்தான்யா ஓடுது’ என சுந்தர்பிச்சை ட்வீட்டினாலும் வியப்பில்லை; அந்தளவிற்குப் பல பஞ்சாயத்துகளில் மாட்டிக்கொண்டு விழிக்கிறது கூகுள்.

கூகுள் கூகுள் மாட்டிக்கிச்சு சிக்கலிலே!

கூகுளின் சர்ச் இன்ஜினில் பயனாளர்கள் எதையாவது தேடும்போது, அதில் கூகுள் விளம்பர சேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து சர்ச் ரிசல்ட்களைக் காட்டியது. “இது தப்பாச்சே” என ஐரோப்பிய யூனியன் அந்நிறுவனத்திற்கு கடந்த ஆண்டு 2.7 பில்லியன் டாலர் அபராதம் விதித்தது. அடுத்து, கூகுளின் ஆப்களை, ஆண்ட்ராய்டு போன்களில் கட்டாயமாக இன்ஸ்டால் செய்யச்சொன்ன குற்றத்திற்காக 5 பில்லியன் டாலர் அபராதம் கட்டச் சொல்லியிருக்கிறது ஐரோப்பிய யூனியன். இதுவரைக்கும் டெக் நிறுவனங்களில் விதிக்கப்பட்ட அதிகபட்ச அபாரதம் இது. இந்தச் சம்பவம் நடந்து ஓரிரு மாதங்கள்கூட ஆகவில்லை. அதற்குள்ளாகவே அடுத்த பிரைவசி பிரச்னையில் சிக்கியிருக்கிறது கூகுள்.

மொபைலில் லொக்கேஷன் செட்டிங்க்ஸை அணைத்து வைத்திருந்தாலும்கூட, கூகுள் நம்மைப் பின்தொடர்வதாகச் சொல்லி, சான்ஃபிரான்சிஸ்கோவில் புதிதாக வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இதனை ஆதாரபூர்வமாகவும் நிரூபித்துள்ளனர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

ஆனால்,கூகுள் இதற்குத் தெளிவாக விளக்கமளித்திருக்கிறது. “லொக்கேஷன் ஹிஸ்டரியை ஆஃப் செய்துவைத்தால் டைம்லைன் அப்டேட் ஆகாது.  ஆனால், கூகுளின் மற்ற ஆப்கள் உங்கள் லொக்கேஷனை டிராக் செய்யும். அவை உங்களின் கூகுள் அக்கவுன்ட்டில் பதிவாகும். இதை நிறுத்த வேண்டுமென்றால் Web & App Activity என்ற ஆப்ஷனை நிறுத்திக்கொள்ளலாம்” என்றிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கூகுள் கூகுள் மாட்டிக்கிச்சு சிக்கலிலே!

கூகுள் இப்படி லொக்கேஷன் சார்ந்த விஷயங்களில் சிக்குவது முதல்முறையல்ல; மொபைலில் ஜி.பி.எஸ் வசதியை நிறுத்திவைத்திருந்தாலும்கூட கூகுளால் நம் இருப்பிடத்தைத் தெரிந்துகொள்ளமுடியும் என்பதைக் கடந்த ஆண்டு தனியார் இணையதளம் ஒன்று வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தது. அப்போதுதான் கூகுள் இன்னொரு அதிர்ச்சியளிக்கும் உண்மையைப் பகிர்ந்துகொண்டது. அதாவது, நம் மொபைல் போனின் டவர்களை வைத்து, நம்மை அடையாளம் கண்டுகொள்ளும் செல் ஐ.டி என்ற தொழில்நுட்பத்தை இதற்காகப் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டது. இந்த செல் ஐ.டி-யில் இருக்கும் சிக்கல் என்னவென்றால், நம் மொபைலில் ஜி.பி.எஸ் செயல்படாதபோதுகூட நாம் எங்கிருக்கிறோம் என்பது கூகுளுக்குத் தெரியும். மெரினாவுக்கோ, அண்ணா சமாதிக்கோ என்றால், அருகில்தான் எம்.ஜி.ஆர் சமாதி... பார்க்கலாமே எனப் பரிந்துரைக்கும். காலை டிபன் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தால், இந்த ஹோட்டலுக்கு எத்தனை ஸ்டார் என ரேட்டிங் கேட்கும்.  இப்படி, நாம் விரும்பாதபோதுகூட நம்மைப் பின்தொடர்வது எப்படி சரியாகும்? , “இந்த வசதியை கடந்த 11 மாதங்களாகத்தான் பயன்படுத்துகிறோம். உடனே நிறுத்திவிடுகிறோம்” எனச் சமர்த்தாக பதில்சொன்னது கூகுள். ஆனால், அடுத்த ஒரு வருடத்திற்குள்ளாகவே அடுத்த பஞ்சாயத்தில் வந்து நிற்கிறது. எதற்காக செல்லுமிடமெல்லாம் பயனாளர்களை ஷெர்லக் ஹோம்ஸ் போலப் பின்தொடர்கிறது?

துல்லியமான விளம்பரம்; அதன்மூலம் வரும் வருமானம். இந்த இரண்டும்தான் முக்கியக்காரணம். நாம் இருப்பது சென்னையா கோவையா எனத் தெரிந்தால் அந்தந்த ஊரில் இருக்கும் பெரிய கடைகளின் விளம்பரங்களைக் காட்டலாம். சென்னையில் கோயம்பேடா மயிலாப்பூரா எனத் தெரிந்தால் அந்தந்த இடத்திலிருக்கும் ஹோட்டல் விளம்பரங்களைக் காட்டலாம். அதிலும் எந்தத் தெரு, எந்தக் கட்டடம், எந்த அறை என்பது வரை தெரிந்துவிட்டால் நம்மைச் சுற்றியிருக்கும் கடைகளின் எல்லா விளம்பரங்களையும் காட்டலாம். இந்தளவு துல்லியமாக உங்களைக் கண்காணிக்க வேண்டுமென்றால், எந்நேரமும் நம் கையிலேயே தவழ்ந்துகொண்டிருக்கும் மொபைலை விட்டால் வேறு சிறந்தவழி என்ன? அதனால்தான் பிரைவசி குறித்த எந்தவொரு கவலையும் இல்லாமல், நம்மீது கண் வைக்கின்றன இணைய நிறுவனங்கள்; இதே இலக்கணம்தான் கூகுளுக்கும்.

கடந்த மே மாதம் ஐரோப்பிய யூனியனில் GDPR விதிகள் அமலானதிலிருந்து எல்லா நிறுவனங்களுமே பிரைவசி, டேட்டா பாதுகாப்பு போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துகின்றன. மாட்டிக்கொண்டால், கடுமையான அபராதத்தை சந்திக்கவேண்டும் என்பதுதான் இதற்கு காரணம். தற்போது இந்தியாவும் தன்னுடைய டேட்டா பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்துவதில் முனைப்புகாட்டிவருகிறது; இதேபோல உலகெங்குமே தனிநபர்களின் தகவல்கள் குறித்தும், பிரைவசி குறித்தும் விழிப்பு உணர்வு அதிகரித்துள்ளது.

எனவே வருங்காலத்தில் மக்களின் பிரைவசிக்கு எதிராக இந்நிறுவனங்கள் எந்த முடிவு எடுத்தாலும், அது கண்ணிவெடியில் கால்வைப்பதற்கே சமம்.

ஞா.சுதாகர்