Published:Updated:

சுஜாதா முதல் சு.வெங்கடேசன் வரை... 'கிளாசிக்' படைப்புகள் ஒரே ஆப்பில்! #Appappo

கருணாநிதியுடனான நிருபரின் ஒருநாள் அனுபவம், கிரேஸி மோகன் எடுத்த நாகேஷின் நேர்காணல், ரஜினியின் திருமண சர்ச்சை குறித்து அப்போதைய அவரின் விரிவான பேட்டி, ஜோதிகாவின் 2000-ம் ஆண்டு நேர்காணல், க.அன்பழகனின் வாழ்க்கைப் பயணம், பிரபலங்களின் மறக்கமுடியாத நேர்காணல்கள்... இப்படி சுவாரஸ்யமான கட்டுரைகள் எல்லாத்தையும் ஒரே இடத்தில் படிக்கணுமா உங்களுக்காகத்தான் பாஸ் இந்த ஆப்.

சுஜாதா முதல் சு.வெங்கடேசன் வரை... 'கிளாசிக்' படைப்புகள் ஒரே ஆப்பில்! #Appappo
சுஜாதா முதல் சு.வெங்கடேசன் வரை... 'கிளாசிக்' படைப்புகள் ஒரே ஆப்பில்! #Appappo

"என்ன சச்சின்...? பம்பாயில் உங்களுக்கு நெறைய கேர்ள் ஃப்ரெண்ட்ஸாமே..? அப்படியா..?"

“அய்யய்யோ. யார் சொன்னாங்க? எனக்கு ஒரே ஒரு கேர்ள் ஃப்ரெண்டுதான். என்னோட அஞ்சலி! (சச்சினை மணக்க இருக்கும் லக்கிகேர்ள்)”

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 24, சச்சின் ரசிகர்களுக்கு கொண்டாட்டமானது. சோஷியல் மீடியாவில் ஷேர்செய்ய அவர்கள் அளவுக்கு வேறு யாரிடமும் அந்தளவுக்கு 'ரெக்கார்டுகள்' இருக்காது. பழைய ரெக்கார்டுகள், மேட்ச் நினைவுகள், சாதனைகள் என அத்தனையும் போஸ்ட்டாகவும், மீமாகவும் மாறும். ட்விட்டர், ஃபேஸ்புக் என எல்லா இடங்களிலும் சச்சின் பிறந்தநாள் ட்ரெண்டாக ஏறும். இதுதவிர ஊடகங்களும் தங்கள் பங்குங்கு சச்சினைக் கொண்டாடும். மொத்தத்தில் அன்றையநாள் சச்சின் ரசிகர்களுக்குத் திருவிழாவாக இருக்கும். இப்படி ஊரே சச்சின் மயக்கத்தில் இருக்கும்போது, சச்சினின் 23 வருட பழைய நேர்காணல் ஒன்றை உங்களிடம் கொடுத்தால் படிப்பீர்களா? யார்தான் மறுப்பார்கள். அதுவும் மேலே பார்த்தது போல, சச்சினின் கியூட்டான, ஷார்ப்பான பதில்கள் நிரம்பிய ஒரு தமிழ் நேர்காணலை உங்களுக்குக் கொடுத்தால் படிப்பீர்கள்தானே? அதனை யார் கொடுப்பார்? இந்த சேவையை வழங்குவதுதான் Curated Content ஆப்களின் பணி.

நியூஸ் அக்ரிகேட்டர்கள் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். பல்வேறு ஊடகங்களில் வெளியாகும் அன்றாட செய்திகளைத் தொகுத்து, ஒரே இடத்தில் வழங்குவது இவர்களின் வேலை. இதேபோல காலத்திற்கும் நிற்கும் செய்திகள், கட்டுரைகள் அல்லது வேறு இலக்கியப்படைப்புகளை மட்டும் தொகுத்து அதனை சரியான சமயத்தில் வெளியிடுவது Curated Content ஆப்களின் வேலை. இதற்கு உதாரணம்தான் மேலே பார்த்த சச்சின் நேர்காணல். இதுபோன்ற பிரத்யேகமான கட்டுரைகள், பேட்டிகள் மற்றும் படைப்புகளை நேர்த்தியாக வெளியிட்டுவருகிறது அப்பப்போ எனும் ஆப்.

10 MB-க்கும் குறைவான இந்த ஆப்பில் எக்காலத்திற்கும் நிற்கும் எக்கச்சக்க பொக்கிஷங்கள், டிஜிட்டலாக பொதிந்து கிடைக்கின்றன. வாட்ஸ்அப்பிலிருந்து ஃபேஸ்புக் வரை எங்கெங்கும் ஃபேக் நியூஸ் பரவிக்கிடக்கும் காலத்தில், மூத்த ஊடகவியலாளர்கள் மற்றும் தமிழின் பெருமைமிகு எழுத்தாளர்களின் கட்டுரைகளும், படைப்புகளும் அதே டிஜிட்டல் தளத்தில் கிடைத்தால் எப்படியிருக்கும்? அதைத்தான் சாத்தியப்படுத்தியிருக்கிறது அப்பப்போ.

இன்று இணையத்தில் கொட்டிக் கிடக்கும் அபரிமிதமான தகவல்களால் நமது நேரமும் விரயமாவது உண்மை. ஆனால், நமக்குப் பிடித்த விஷயங்களைப் பற்றி உயர்தரமான எக்ஸ்க்ளூசிவ் கன்டென்ட்டை தேடி எடுத்து தொகுத்துத் தரும்போது, நம் நேரம் விரயமாவது தடுக்கப்படுகிறது. இந்த விதத்தில்தான்  ‘அப்பப்போ’ நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது!

ப்ளே ஸ்டோரில் டவுன்லோடு செய்து, மொபைல் எண் கொடுத்து லாகின் செய்தால் போதும்; அப்பப்போ ரெடி. பதிவு செய்ததுமே உங்களின் டிஜிட்டல் வாலட்டில் 101 ரூபாய் சேர்ந்துவிடும். இதற்குமேல் இந்த ஆப்பில் படிக்கப்போகும் ஒவ்வொரு கட்டுரைக்கும் இந்த வாலட்டில் இருந்துதான் பணம் கழியும். மொத்தமும் தீர்ந்தபிறகு மீண்டும் வழக்கமான பேமன்ட் ஆப்ஷன்கள் மூலம் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். இந்த வாரம் வெளியான நடிகர்களின் பேட்டிகள் தொடங்கி, 1980-90-கள் வரையிலான கிளாஸிக் பேட்டிகள், சுஜாதா, நா.முத்துகுமார் போன்ற நட்சத்திர எழுத்தாளர்களின் படைப்புகள், மாரி செல்வராஜின் 'மறக்கவே நினைக்கிறேன்', சு.வெங்கடேசனின் 'வேள்பாரி', வெற்றிமாறனின் 'மைல்ஸ் டு கோ' போன்ற 'மோஸ்ட் வான்டட்' தொடர்கள் வரைக்கும் ஆப் முழுக்கவே படிக்க அத்தனை விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன.

அந்தந்த நேரத்தின் ட்ரெண்டிற்கு ஏற்ப ஆப்பின் 'Home Page' மாறிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குப் பிடிக்கும் விதத்தில் ஹோம்-பேஜ் தானாகவே மாறிக் கொள்வது செம்ம! பல்ஸ் தெரிந்து படிக்கும் நபர்களுக்கு நிச்சயம் இதை மிஸ் செய்யத் தோன்றாது. இதுதவிர படைப்புகளைத் தேடித்படிக்க, 'Search' ஆப்ஷனும் உண்டு. நாம் விரும்பும் தலைப்புகளில் கட்டுரைகள் இருக்கிறதா எனத் தேடிப்பிடித்தும் பிடிக்கலாம். அல்லது 'Discover' பகுதியில் இருக்கும் ட்ரெண்டிங் 'Bubble'-களை க்ளிக் செய்தால் அதுதொடர்பான கட்டுரைகள் வந்துவிழுகின்றன. ஆப்பின் ஒவ்வொரு பக்கத்திலும் சர்ப்ரைஸ் கட்டுரைகள் எக்கச்சக்கமாக இருக்கின்றன. வேறு எங்குமே தேடிப்படிக்க முடியாத இந்தப் படைப்புகளை, டிஜிட்டலில் இன்ஸ்டன்ட்டாக படிக்க வழிசெய்வது சிறப்பு. கருணாநிதியுடனான நிருபரின் ஒருநாள் அனுபவம், கிரேஸி மோகன் எடுத்த நாகேஷின் நேர்காணல், ரஜினியின் திருமண சர்ச்சை குறித்து அப்போதைய அவரின் விரிவான பேட்டி, ஜோதிகாவின் 2000-ம் ஆண்டு நேர்காணல், க.அன்பழகனின் வாழ்க்கைப் பயணம் போன்றவை சில சாம்பிள்ஸ்.

இப்படி படிக்கும் ஒவ்வொரு கட்டுரைகளுக்கும் ஒரு ரூபாய், 3 ரூபாய், 5 ரூபாய் என விலை நிர்ணயம் செய்திருக்கிறார்கள். அதிகபட்ச விலையே ரூ.5-தான். அதுவும் படிக்கும் ஒவ்வொரு கட்டுரைக்கும் இந்தத்தொகை நம் வாலட்டில் இருந்து கழிந்துகொண்டே இருக்கும். மாதத்திற்கு, வாரத்திற்கு என்றெல்லாம் கட்டணம் செலுத்தவேண்டியதில்லை. நமக்கு தெரிந்தவர்களிடம் இந்த ஆப்பை REFER செய்தால் அதற்கான கிரெடிட் வேறு தருகிறார்கள்.

இப்படி தனித்தனி கட்டுரைகள் தவிர்த்து, தொடர்களுக்கு 'Bundles' என்ற பிரிவு இருக்கிறது. இதில் தொடரின் ஒவ்வொரு அத்தியாத்திற்கும் பணம் செலுத்தாமல், மொத்த அத்தியாயத்திற்கும் ரூ.20, ரூ.25 எனப் பணம் கட்டி வாங்கிவிடலாம். ஸ்டெர்லைட் விஷயத்துல 1994ல இருந்து இப்போ வரைக்கும் என்ன நடந்ததுன்னுகூட Bundle இருக்கும்.  இப்படி படிப்பதற்கு படைப்புகள் மட்டுமின்றி, படிக்கும் அனுபவத்தையும் நேர்த்தியாக்கியிருக்கிறது 'அப்பப்போ'. கட்டுரைகள் மற்றும் தொடர்களைப் படிக்கும்போது அதன் படங்களும், ஓவியங்களும் வாசிப்பனுவத்தைக் கூட்டுகின்றன. சுவாரஸ்யமான கட்டுரைகளுக்காக தினந்தோறும் ஆப்பிற்குள்ளேயே உலாவவேண்டும் என்ற அவசியமும் இல்லை. அந்தந்த நேரத்தின் ட்ரெண்டிற்கு உடனே உடனே நோட்டிஃபிகேஷன்கள் வந்துவிழுகின்றன.

இப்படி மாறிவிட்ட நம் வாசிப்பனுபவத்திற்கு முழுமையாக ஒத்துழைப்பது இதன் ப்ளஸ். சில சமயங்களில் ஆப் கிராஷ் ஆவது மட்டும் சின்ன மைனஸ். அவ்வளவே! மற்றபடி, தமிழ் இதழியலில் காலத்திற்கும் நிற்கும் படைப்புகளை படிக்கவிரும்புபவர்கள் இப்போதே ப்ளே ஸ்டோர் பக்கம் போகலாம். இந்த App-ல் பொக்கிஷ கட்டுரைகளையும், படைப்புகளையும் வெளியிட விகடனும் தற்போது 'அப்பப்போ'வுடன் கைகோத்துள்ளது. விரைவில் இன்னும் சில ஊடக நிறுவனங்களும் இணையவிருக்கின்றன.

இதேபோல செய்தி நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர்களுக்கும் படைப்பாளர்களுக்கும் சிவப்புக்கம்பளம் விரிக்கிறது 'அப்பப்போ'. எக்ஸ்க்ளூசிவ்வான கட்டுரைகள், சுவாரஸ்யமான படைப்புகள் போன்றவை உங்களிடமிருந்தால் இப்போதே அப்பப்போவைத் தொடர்புகொள்ளலாம். உங்களின் படைப்புகளும் அப்பப்போவில் வெளியாகும். அதற்கான பேமென்ட்டும் உங்களுக்கு உண்டு.

தினந்தோறும்வரும் செய்திகளை, அதன் கடந்தகாலத்திற்கு சென்று வேறொரு பரிமாணத்தில் வாசிக்க விரும்புபவர்களுக்கு அப்பப்போ பெஸ்ட் சாய்ஸ்!

‘அப்பப்போ’ இன்ஸ்டால் பண்ணிப் பாருங்க… 101 ரூபாய் ஃப்ரீயா பெறுங்க! http://bit.ly/Appappo101

ஆங்.. அந்த 1995 சச்சின் பேட்டியை அப்பப்போ ஆப்பில் இப்போவே படிக்கணுமா? இன்ஸ்டால் பண்ணிட்டு மேல இருக்க சச்சின் படத்த க்ளிக் பண்ணுங்க!