Published:Updated:

6,000 ரூபாய்க்கு புதிய ஸ்மார்ட்போன்! - ரியல்மீயின் அடுத்த அதிரடி

6,000 ரூபாய்க்கு புதிய ஸ்மார்ட்போன்! - ரியல்மீயின் அடுத்த அதிரடி
6,000 ரூபாய்க்கு புதிய ஸ்மார்ட்போன்! - ரியல்மீயின் அடுத்த அதிரடி

ஒப்போவின் ரியல்மீ நிறுவனம் 6,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் “A1” என்கிற புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த நிறுவனம் வெளியிட்ட ரியல்மீ 1, 2 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது A1 என்கிற ஸ்மார்ட்போனை 2019-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது  “ரியல்மீ C1” மாடல்தான் இந்நிறுவனத்தின் ஆரம்ப விலை மொபைலாக இருந்து வருகிறது. இதன் விலை 7,499 ரூபாய்.

6,000 ரூபாய்க்கு புதிய ஸ்மார்ட்போன்! - ரியல்மீயின் அடுத்த அதிரடி

C1 மாடல் மொபைல் போன் நாட்ச் டிசைனில் 19:9 HD டிஸ்பிளே கொண்டுள்ளது. 2 ஜிபி ராம் 16 ஜிபி இன்டர்னல் மெமரியுடன், 1.8 GHZ ஆக்ட்டா கோர் ப்ராசசர் கொண்டு இயங்குகிறது. ஆனால், A1 மாடலில் 1 ஜிபியாக ராம் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நாட்ச் டிசைன் டிஸ்பிளேதான் ட்ரெண்ட் என்பதால் இந்த மொபைலிலும் அதை எதிர்பார்க்கலாம். விலை குறைவு என்பதால் பிங்கர்பிரிண்ட் சென்சார் இருக்காது என்று தெரிகிறது. அதேபோல் பின்பக்கம் இரண்டு கேமரா இருக்கவும் வாய்ப்பில்லை.

6,000 ரூபாய்க்கு புதிய ஸ்மார்ட்போன்! - ரியல்மீயின் அடுத்த அதிரடி

ஏற்கெனவே ரியல்மீயின் மொபைல்களின் மீது நன்மதிப்பு இருப்பதால் A1 மாடல் மீதும் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த நிறுவனம் மொபைலை வெளியிடும்போதுதான் அதன் முழு விவரமும் தெரியவரும்.