Published:Updated:

'குறைந்த விலையில் வெளியாகப்போகும் கூகுள் மொபைல்!' - என்ன ஸ்பெஷல்?

ரஞ்சித்.வெ. ரா
'குறைந்த விலையில் வெளியாகப்போகும் கூகுள் மொபைல்!' - என்ன ஸ்பெஷல்?
'குறைந்த விலையில் வெளியாகப்போகும் கூகுள் மொபைல்!' - என்ன ஸ்பெஷல்?

கூகுளின் ஃபிளாக்‌ஷிப் மொபைல்களான பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3XL ஆகியவற்றை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இவற்றின் விலை 60,000 ரூபாய்க்கு மேல் இருக்கிறது. இருப்பினும், இந்த மொபைல் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. கூகுள் பிக்சலின் கேமரா, டெக்கீஸால் அதிகம் பாராட்டப்பட்டது.

இந்நிலையில், பிக்சல் வரிசையில் குறைந்த விலையில் அனைவரையும் கவரும் விதமாக பிக்சல் லைட் மொபைலை அறிமுகப்படுத்த கூகுள் திட்டமிட்டுள்ளது. 'கூகுள் பிக்சல் 3 லைட்' மற்றும் 'கூகுள் பிக்சல் 3XL லைட்' என இரண்டு மொபைல்கள், வரும் 2019 -ம் ஆண்டு வெளிவரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிக்சல் லைட் மொபைல்கள் பிக்சல் மொபைல்களைப் போலவே தோற்றம்கொண்டிருக்கும். ஆண்ட்ராய்ட் 9 பை இயங்குதளத்தோடு வெளிவரும் என்றும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது தவிர, 12 மெகாபிக்ஸல் பின்புற கேமராவும் 8 மெகாபிக்ஸல் முன்புற செல்ஃபி கேமராவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேகத்தைப் பொறுத்தவரை 4 ஜிபி அளவு ராம் இருக்கும். 32 ஜிபி இன்டர்னல் மெமரி கிடைக்கும். இதன் விலையை கட்டுக்குள் வைத்திருக்க கூகுள் பிளாஸ்டிக் பாடியை உபயோகிப்பதாகத் தெரிகிறது. பிக்சலில் இல்லாத 3.5mm ஜாக் இதில் இருக்கும், டைப் C போர்ட்டும் இதில் இடம்பெறலாம்.
5.5 இன்ச் மற்றும் 6 இன்ச் அளவில் இருக்கும் இந்த மொபைல்கள், 30,000 ரூபாய் முதல் 40,000 ரூபாய் இருக்கலாம் என்று எதிர்பார்க்கலாம்.