முன்பெல்லாம் மொபைலில் முன்பக்க கேமரா என்பது அவ்வளவு முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படாமல் இருந்தது. என்றைக்கு `செல்ஃபி' என்கிற விஷயம் பிரபலமாகத் தொடங்கியதோ... அதன் பிறகு, முன்பக்க கேமரா தரமாக இருக்க வேண்டும் எனப் பலரும் நினைக்கத் தொடங்கிவிட்டார்கள். சில போன்களில் பின்புற கேமராவைவிட முன்புற கேமராவின் திறன் அதிகமாக இருப்பதிலிருந்தே மொபைல் நிறுவனங்கள் செல்ஃபிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம். ஆகவே, மொபைல் வாங்கும்போது முன்புற கேமராவில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் எவை?

மொபைல் வாங்கும்போது பெரும்பாலும் பார்க்கும் முதல் விஷயம் அதன் பிக்ஸல் அளவு. இந்த அளவு அதிகமாக இருப்பதை வைத்து அதற்கேற்றவாறு கேமராவின் தரம் இருக்கும் எனப் பலரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். பிக்ஸல் அளவு மட்டுமே கேமராவின் தரத்தை நிர்ணயிப்பதில்லை என்பதுதான் உண்மை. பிக்ஸல் அளவுக்குத் தகுந்தவாறு போட்டோவின் அளவு பெரிதாகக் கிடைக்கும். அவ்வளவே!

முன்புற கேமராவில் கவனிக்கவேண்டிய மற்றொரு முக்கிய விஷயம், அது படம்பிடிக்கும் பரப்பளவு. வைடு ஆங்கிள் அதிகமாகக் கொண்ட கேமரா என்றால், அதிக அளவிலான பரப்பைப் படம்பிடிக்கலாம். பகலில் வெளிச்சம் குறைவான இடங்களிலோ, இரவிலோ தெளிவாக செல்ஃபி எடுப்பதற்கு ஃப்ளாஷ் தேவைப்படும். அதனால், ஃப்ளாஷ் இருக்குமாறு பார்த்து வாங்குவது நல்லது.

முன்பக்கம் டூயல் கேமராவைக் கொண்ட மொபைல்களும் இப்போது கிடைக்கின்றன. இதன் மூலமாக டெப்த் எபெக்ட் கொண்ட செல்ஃபிகளை தெளிவாக எடுக்க முடியும். இத்தனை விஷயங்களை ஆராய்ந்து பார்த்தாலும்கூட ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தகுந்தவாறு கேமராவின் தரம் இருக்கும். எனவே, குறிப்பிட்ட மொபைல் தொடர்பான ரிவ்யூஸ்களை படித்த பிறகோ, ஏற்கெனவே பயன்படுத்துபவர்களின் கருத்துகளைக் கேட்ட பிறகோ வாங்குவது நல்லது.

அண்மைக்காலமாக மொபைல் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளில் portrait mode, Bokeh mode எனப் பல்வேறு மோட்களில் போட்டோக்களை எடுக்க முடியும் என விளம்பரப்படுத்துகின்றன. அவ்வளவு ஏன் ஆப்பிள்கூட தனது ஐபோன்களில் இந்த மோட் இருப்பதாக விளம்பரப்படுத்தப்படுகிறது. இது தவிர Depth Effect போன்றும் சில மோட்கள் மொபைல் கேமராவில் இருக்கின்றன. இப்போது சாதாரண போட்டோவாக இருந்தாலும், செல்ஃபியாக இருந்தாலும்... பலருக்கும் இதுபோன்ற எஃபெக்ட்கள் போட்டோவில் இருப்பது விருப்பமானதாக இருக்கிறது.

பெயர்கள் வேறு விதமாகவும், போட்டோ எடுக்கப்படும் விதம் இருந்தாலும்கூட, இவற்றில் கிடைக்கும் எஃபெக்ட்கள் ஒன்றாகத்தான் இருக்கின்றன. இந்த எஃபெக்ட்டில் எடுக்கும்போது நமது உருவம் மட்டுமே முழுவதுமாக ஃபோகஸ் செய்யப்பட்டு, பின்புறம் தெரியும் காட்சிகள் அனைத்தும் மறைக்கப்பட்டிருக்கும், இதனால் போட்டோ நமக்குப் புதிய கோணத்தில் கிடைக்கும். இவற்றை ஒவ்வொரு நிறுவனங்களும் அவர்களுக்குத் தகுந்தாற்போல் பெயர்களை மாற்றி விளம்பரப்படுத்துகிறார்கள் அவ்வளவுதான்!

இப்போது, ஸ்மார்ட்போன்கள் அனைத்திலுமே AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள். இந்தத் தொழில்நுட்பமானது ஒரு செல்ஃபியை உடனடியாக மேம்படுத்துகிறது. இதனால் சாதாரண கேமராவைவிட, AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் மொபைல்களில் குவாலிட்டியான செல்ஃபி கிடைக்கும்.

- மு.ராஜேஷ்