Published:Updated:

கேம் சேஞ்சர்ஸ் - 15 - OYO

கேம் சேஞ்சர்ஸ் - 15 - OYO
பிரீமியம் ஸ்டோரி
கேம் சேஞ்சர்ஸ் - 15 - OYO

கேம் சேஞ்சர்ஸ் - 15 - OYO

கேம் சேஞ்சர்ஸ் - 15 - OYO

கேம் சேஞ்சர்ஸ் - 15 - OYO

Published:Updated:
கேம் சேஞ்சர்ஸ் - 15 - OYO
பிரீமியம் ஸ்டோரி
கேம் சேஞ்சர்ஸ் - 15 - OYO
கேம் சேஞ்சர்ஸ் - 15 - OYO

ணையம் உலகின் எல்லா மூலைக்கும் சென்றபிறகு அனைத்துத் தொழில்களும் மாற்றம் கண்டன. ஒரு நாட்டில் அப்படியொரு மாற்றத்தைக் கொண்டு வந்த ஐடியாக்களைப் பின்பற்றி மற்ற நாடுகளிலும் புதுப்புது ஸ்டார்ட் அப்கள் தொடங்கப்பட்டன. ஐடியாக்கள் அதே என்றாலும் அது வெற்றிபெற அபரிமிதமான உழைப்பும் கூடவே கொஞ்சம் புத்திசாலித்தனமும் தேவை. ஓரிடத்தில் ஹிட் அடித்த ஒரு ஐடியா எல்லா இடத்திலும் ஹிட் அடிக்குமென எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், ஒவ்வொரு நாட்டுக்கும் கலாசாரம், மக்களின் பழக்கவழக்கங்கள், பொருளாதார பலம் ஆகியவை மாறுபடும். அதைப் புரிந்துகொண்டு வெற்றிபெற்றவர்களிடமும் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உண்டு. அதன் அடிப்படையில்தான் சில இந்திய ஸ்டார்ட்அப்களை, ஒரிஜினல் ஐடியா அவர்களுடையது இல்லையென்றாலும், ‘கேம் சேஞ்சர்ஸ்’ தொடரில் எழுதிவருகிறேன். இந்த வாரமும் அப்படித்தான்.

கேம் சேஞ்சர்ஸ் - 15 - OYO

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உணவகத்துக்குச் செல்கிறோம். நமக்கு விருப்பமான உணவை ஆர்டர் செய்தால் ஒருவருக்குத் தேவையான அளவையா தருகிறார்கள்? கூடுதலாகத்தான் இருக்கும். ஆனால், அதற்கும் சேர்த்துத்தான் நாம் பணம் கொடுக்கிறோம். வீடு வாடகைக்கு எடுக்கும்போதும் இது நடக்கலாம். தேவையில்லாமல், தவறாக பிளான் செய்து கட்டிய இடத்துக்கும் சேர்த்து வாடகை... மெயின்ட்டெனன்ஸ்.. எல்லாம். காரோ பைக்கோ வாங்கினால்கூட, எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்ஸ் எனச் சிலவற்றை நம் தலையில் கட்டிவிடுவார்கள்.

பொதுவாக சேவைத்துறையில் இது அதிகமாக நடக்கும். அப்படியொரு இடம்தான் நாம் தங்கும் ஹோட்டல்கள். நீச்சல் குளம் தொடங்கி மது பானக்கூடம் வரை நாம் பயன்படுத்தாத சேவைகளுக்கும் சேர்த்துதான் நம்மிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள். ஏதேனும் ஒரு நிகழ்ச்சிக்காகப் புதிய ஊர் ஒன்றுக்குச் செல்கிறோம். நம் தேவை, இரவு தூங்கி, காலையில் எழுந்து குளித்துவிட்டு, முடிந்தால் ஒரு நல்ல பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டுவிட்டுக் கிளம்ப வேண்டியதுதான். இதற்கு ஏன் நாம் பயன்படுத்தாத சேவைகளுக்கும் பணம் தர வேண்டும்?

கேம் சேஞ்சர்ஸ் - 15 - OYO

அது மட்டுமல்ல; விலையை வைத்து ஹோட்டல்களின் தரத்தை அறிய முடியாது. விலைகுறைந்த ஹோட்டல்கள் நன்றாக இருப்பதுண்டு; விலையதிகமான ஹோட்டல்கள் சொதப்புவதும் உண்டு. புதிய ஊரில் இதை எப்படிக் கண்டறிவது?

இது எல்லாவற்றுக்கும் தீர்வாக வந்ததுதான் ஓயோ (OYO) ரூம்ஸ். இதன் நிறுவனர் ரித்தேஷ் அகர்வால் (Ritesh Agarwal) இந்த ஐடியாவை யோசித்தபோது அவர் வயது 17. அதைச் சாத்தியப்படுத்தியபோது அவர் வயது 18. இளம் வயதில் கோடீஸ்வரன் ஆனவர் ரித்தேஷ்.

ரித்தேஷின் சொந்த ஊர் ஒடிசா மாநிலத்திலிருக்கும் ஒரு சிறு நகரம். 13 வயதிலே ரித்தேஷுக்கு தனக்கான பணத்தைத் தானே சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வம். அதற்காக சிம் கார்டுகளை விற்றிருக்கிறார். ரித்தேஷ் தன் வயது மாணவர்களிடமிருந்து நிறைய மாறுபட்டிருந்தார். 8 வயதிலேயே ரித்தேஷுக்கு கணினி மீது ஆர்வம். கணினி என்றால் கேம்ஸ் ஆடுவது அல்ல; கோடிங். ஆம், அப்போதே ரித்தேஷுக்கு கோடிங் பிடிக்கும். தன் அண்ணனின் லேப்டாப்பை வாங்கி கோடிங் எழுதுவார். அதை ரித்தேஷுக்குக் கற்றுத்தந்த வாத்தியார் கூகுள். தன்முனைப்பு கொண்ட அனைவருக்கும் அனைத்தையும் சொல்லித் தரும் வாத்தியார் கூகுள்தானே? ரித்தேஷும் கற்றுக்கொண்டார். கோடிங்தான் தன் வாழ்க்கை என முடிவு செய்த ரித்தேஷ் 2009-ல், ஐ.ஐ.டி-யில் சேர்ந்தார். அங்கே கற்றுத்தரும் விஷயங்கள் எல்லாம் ரித்தேஷ் எப்போதோ தெரிந்துகொண்டவைதாம். அதனால் அவருக்கு நிறைய நேரமிருந்தது. அப்போது ஒரு புத்தகம் எழுதினார்.  ‘Indian Engineering Colleges: A Complete Encyclopaedia of Top 100 Engineering Colleges’ என்ற அப்புத்தகம் ஃப்ளிப்கார்ட்டில் செம ஹிட். 

கேம் சேஞ்சர்ஸ் - 15 - OYO

ரித்தேஷுக்குப் பயணமும் பிடிக்கும். அடிக்கடி பயணம் செய்தார். ஒரு பேக் போதும். கிளம்பிவிடுவார். பட்ஜெட் ஹோட்டலோ, பி.ஜி.யோ, டார்மெட்ரியோ... கிடைக்கும் இடங்களில் தங்கிவிடுவார். டெல்லியில் Bed & Breakfast ரக தங்குமிடங்கள் நிறைய உண்டு. அதாவது, இரவு தூங்கலாம்; காலையில் சாப்பிடலாம். அவ்வளவுதான். கிளம்பிவிட வேண்டும். ரித்தேஷுக்கு முதல் ஸ்டார்ட் அப்கான ஐடியா சிக்கியது அங்குதான்.

2012-ல், 18வது வயதில் Oravel stays என்ற தன் முதல் ஸ்டார்ட் அப்பைத் தொடங்கினார் ரித்தேஷ். பட்ஜெட் ஹோட்டல்களைக் கண்டறிந்து புக்கிங் செய்ய உதவும் ஒரு தளம். ஐடியாவைப் பார்த்துப் பல முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர். Peter Theil என்ற பிரபல இன்வெஸ்ட்டர் (பே பாலின் இணை நிறுவனர், ஃபேஸ்புக்கின் ஆரம்பகால முதலீட்டாளர்) ரித்தேஷுக்குப் பண உதவி செய்து ஊக்குவிக்க, கல்லூரிப் படிப்பையே பாதியில் கைவிட்டார். 24 மணி நேரத்தையும் Oravel stays-க்காகச் செலவிட்டார். ஆனால், ஏதோ பிரச்னை. விஷயம் வேலைக்காகவில்லை.

18 வயதில் தொழில் தொடங்க வந்தவருக்கு ஏகப்பட்ட சிக்கல்கள். மனம் உடைந்துபோயிருந்தார் ரித்தேஷ். அவர் குடும்பம் வசதியான குடும்பம்தான். ஒரே ஒரு போன் செய்தால் போதும். “வீட்டுக்கு வந்துடு தங்கம்.. நாம வேற பாத்துக்கலாம்” எனச் சொல்லிவிடுவார்கள். ஆனால், அதுதான் தன் முன்னேற்றத்துக்கான தடையாக இருக்குமென ரித்தேஷ் நினைத்தார். அன்று அந்த கால் செய்திருந்தால் ரித்தேஷின் கனவு நனவாகியிருக்காது. இந்தியர்களுக்குக் குறைந்த விலையில் நிறைவான சேவை ஒன்று இன்று கிடைத்திருக்குமா என்பது தெரியாது.

கேம் சேஞ்சர்ஸ் - 15 - OYO

ஹோட்டல் புக்கிங்தான் ஐடியா என்றதும் ரித்தேஷ் செய்த முதல் வேலை என்ன தெரியுமா? வட இந்தியா முழுவதும் பல ஊர்களுக்குப் பயணித்தார். பலதரப்பட்ட ஹோட்டல்களில் தங்கினார். அதன் நிறைகுறைகளைக் கூர்மையாகக் கவனித்தார். இணையம் சார்ந்த தொழில்கள் தினமும் பல நூறு தொடங்கப்படுகின்றன. அவை எல்லாவற்றுக்கும் இணையம் ஒரு கருவி மட்டுமே. அதன் நுணுக்கம் என்பது நாம் என்ன மாதிரியான சேவை தருகிறோம் என்பதே. அதனால்தான் ரித்தேஷ், கணினிக்குள் மட்டுமே மூழ்காமல் ஹோட்டல்களுக்குப் படையெடுத்தார்.

Oravel stays ஐடியாவில் சின்ன மாற்றம் தேவை என ரித்தேஷ் நினைத்தார். ஒவ்வொரு ஹோட்டலும் ஒவ்வொரு தரத்தில் இருந்தது. தன் வாடிக்கையாளர்கள் அந்தக் குறைகளை ஹோட்டலின் குறையாகப் பார்க்கவில்லை; Oravel stays குறையாகப் பார்த்தார்கள் என்பது புரிந்தது. Oravel stays-க்கு மூடுவிழா நடத்தினார். அதே ஐடியாவை மெருகேற்றி OYO ROOMS தொடங்கினார். அதுதான் ரித்தேஷின் ஜீபூம்பா.

ஓயோ ரூம்ஸ் என்பது ஒரு நெட்வொர்க். அதில் ஒரு ஹோட்டல் இணைய வேண்டுமானால், ஓயோவின் ஆட்கள் வந்து அதன் தரத்தைச் சோதனையிடுவார்கள். எவையெல்லாம் தேவையில்லை எனச் சொல்வதன் மூலம் ஹோட்டலின் செலவைக் குறைப்பார்கள். எவை தேவை எனச் சொல்வதன் மூலம் வாடிக்கையாளர்களின் தேவையைத் தீர்க்க உதவுவார்கள். இந்த ஐடியா இந்தியச் சந்தைக்குத் தோதாக இருந்தது. அதனால் வேகமாக வளர்ந்தது.

“ஒரு லட்சம் பேர் பயன்படுத்திவிட்டு `ஓக்கேப்பா’ எனச் சொல்லும் விஷயங்களைச் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. பத்துப்பேர் என்றாலும் `ஐ லவ் இட்’ எனச் சொல்ல வேண்டும். அதுதான் என் இலக்கு” என்கிறார் ரித்தேஷ் அகர்வால். அமெரிக்காவில் சக்கைப்போடுபோட்ட Airbnb என்ற கான்செப்ட்டை வைத்துதான் Oravel தொடங்கப்பட்டது. ஆனால், அதை இந்தியாவுக்கு ஏற்றதுபோல மாற்றிய பின்தான்  இங்கே ஹிட் ஆனது. ஸ்டார்ட் அப் விஷயத்தில் இளைஞர்கள் மனதில்கொள்ள வேண்டிய பாடம் அது. நாம் செய்துகொண்டிருப்பது வேலைக்காகாது எனத் தெரிந்தால் அதைக் கைவிடக்கூடாது. என்ன மாற்றம் தேவை என்பதை உணர்ந்து அடுத்தகட்டப் பணிகளைச் செய்ய வேண்டும். 

கேம் சேஞ்சர்ஸ் - 15 - OYO

இன்று 350 நகரங்களில் ஒரு லட்சம் ஓயோ ரூம்கள் இருக்கின்றன. ஓயோவின் மொத்த மதிப்பு 2600 கோடியைத் தாண்டும். இதுவரை செய்த செலவுகளை எல்லாம் பிரேக் ஈவன் செய்து, இப்போது லாபம் பார்க்கத் தொடங்கியிருக்கிறது ஓயோ ரூம்ஸ்.

உலக அளவில் குறைந்த வயதில் சி.இ.ஒ ஆனவர், பிசினஸ் இன்சைடர் தந்த `8 Hottest Teenage Start Up Founders in the World’ விருது பெற்றவர், இந்தியாவின் இளமையான கோடீஸ்வரன் என ரித்தேஷுக்குப் பெருமை சேர்க்கும் விஷயங்கள் ஏராளம் உண்டு. ஆனால், அவை அனைத்தையும்விட, தன் மனம் சொன்னதைக் கேட்டு, சொந்தக் காலிலே நின்று, தான் நினைத்ததைச் சாதித்தவர் என்ற அடையாளம்தான் முக்கியம். அது நிகழ்ந்தால் மற்ற அனைத்தும் தாமாகத் தேடி வரும்.

ரித்தேஷை நீங்கள் ஏதேனும் கருத்தரங்கிலோ ஹோட்டலிலோ பார்க்க நேரிடலாம். அப்போதும் அவரின் முகத்தை விட்டு முதுகைப் பாருங்கள். அங்கே ஒரு Back pack இருக்கும். அதுதான் ரித்தேஷின் வீடு.

ரித்தேஷுக்கு இன்னும் விக்கிபீடியா பக்கம்கூட இல்லை. அதனால் என்ன? இந்தியாவின் முக்கிய நகரங்களின் முக்கிய வீதிகளில் OYO ROOMS பெயர் மின்னிக்கொண்டிருக்கிறது. அடுத்த முறை நம் கண்ணில் அவை படும்போதெல்லாம் 18 வயதில் உலகை மாற்ற முனைந்த அந்த இளைஞனின் வெற்றிமுகமும் கூடவே தெரியுமில்லையா? அதுதான் நிஜ வெற்றி!

- ஐடியா பிடிப்போம் 

கார்க்கி பவா