Published:Updated:

கேம் சேஞ்சர்ஸ் - Bigbasket

கேம் சேஞ்சர்ஸ் - Bigbasket
பிரீமியம் ஸ்டோரி
கேம் சேஞ்சர்ஸ் - Bigbasket

தொடர் - 19

கேம் சேஞ்சர்ஸ் - Bigbasket

தொடர் - 19

Published:Updated:
கேம் சேஞ்சர்ஸ் - Bigbasket
பிரீமியம் ஸ்டோரி
கேம் சேஞ்சர்ஸ் - Bigbasket

ந்தியாவின் முக்கியமான மேலாண்மைக் கல்லூரி அது. ஹரி மேனன் அந்தக் கல்லூரியின் மாணவர்களுக்காகச் சிறப்புரை ஆற்ற வந்திருந்தார்.“உங்களில் எத்தனை பேருக்கு ஸ்டார்ட் அப் தொடங்க வேண்டும் என ஆசை. கைகளை உயர்த்தலாம்” என்றார். அவருக்குத் தேவையான அளவு கைகள் உயர்ந்தன.

கேம் சேஞ்சர்ஸ் - Bigbasket

“எம்.பி.ஏ மாணவர்களிடம் எனக்குப் பிடிக்காத விஷயங்கள் நிறைய உண்டு. மார்க்கெட்டிங், ஸ்ட்ராடஜி, கன்சல்டிங் இப்படி வேலை செய்ய ஆசை என்றே பலரும் சொல்றாங்க. சரி, அதுல வேலை தந்தா வாரம் எவ்ளோ மணி நேரம் வேலை செய்யணும்னு கேட்கிறாங்க. இப்படிக் கேட்கிறவங்களுக்கு அந்த வேலையில என்ன பேஷன் இருக்கும்னு எனக்குப் புரியல. அதுல வடிகட்டி அடுத்த ரவுண்டுக்கு வர்றவங்கள்ல ஸ்டார்ட் அப் ஆர்வம் இருக்கிறவங்க கம்மி. அப்படியே இருந்தாலும், எடுத்த உடனே முதலீடு தேவைன்னு சொல்றாங்க. அவங்க ஐடியா அவங்களுக்கு ஒரு நம்பிக்கை கொடுக்கிறதுக்கு முன்னாடியே இன்னொருத்தர் நம்பி பணம் தரணுமாம். இந்தியாவுல ஸ்டார்ட் அப் வெற்றிக்கதைகள் அதிகம் வரணும்னா நீங்கெல்லாம்... அதான் எம்.பி.ஏ-க்கள்... மாறணும்” என்றார் ஹரி மேனன்.

ஹரி சொல்வதில் உண்மை இருக்கிறது. நிச்சயம் இருக்கிறது. இந்தியத் தொழில் முனைவர்களுக்கு முதலில் தேவை உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் பக்குவம். ஆங்கிலத்தில், Emotional quotient என்பார்கள். Intelligent quotient என்பது நம் அறிவு சார்ந்தது. EQ என்பது உளவியல் சார்ந்தது. நல்ல நல்ல ஐடியாக்களும் அயராத உழைப்பும் கொண்டவர்கள்கூட இந்த விஷயத்தில் கோட்டைவிட்டு, அதனால் தொழிலே சாய்ந்த கதைகள் பல உண்டு. ஹரி மேனன் அதைத்தான் குறிப்பிட்டார். அதைச் சொல்வதற்கு ஹரி மேனனுக்கு எல்லாத் தகுதியும் அனுபவமும் உண்டு. வீட்டுக்கே வந்து காய்கறிகளையும் மளிகைப் பொருள்களையும் கொடுக்கும் Bigbasket.com நிறுவனத்தின் இணை நிறுவனர் அவர்.

இப்போது 25 இந்திய நகரங்களில் பிக்பேஸ்கெட் சேவை கிடைக்கிறது. கிட்டத்தட்ட ஒரு கோடி பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் இவர்களிடம் இருக்கிறார்கள். 1,000 பிராண்டுகளின் 18,000 பொருள்களை இவர்களிடம் ஆர்டர் செய்யலாம். ஒவ்வொரு மாதமும் 10 லட்சத்துக்கும் அதிகமாக ஆர்டர்களை டெலிவரி செய்கிறது பிக் பேஸ்கெட். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேம் சேஞ்சர்ஸ் - Bigbasket

``ஃப்ளிப்கார்ட்டும் ஸ்விகியும் செய்வதைத்தான் இவர்களும் செய்கிறார்கள்? அதில் என்ன ஆச்சர்யம்?” என்ற சந்தேகம் எழலாம். ஹரி மேனன் ஃப்ளிப்கார்ட்டின் பன்சால்களுக்கு முன்னோடி. ஃப்ளிப்கார்ட் தொடங்கப்படுவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே ஹரி மேனன் E- commerce எனப்படும் இணையச் சந்தையில் காலடி வைத்தவர். 15 ஆண்டு கார்ப்பரேட் அனுபவத்துக்குப் பிறகு 1999-ல் இணையச் சந்தையில் நுழைந்தார் ஹரி மேனன். மும்பையில் பிறந்த ஹரி பிட்ஸ் பிலானி மாணவர். கேம் சேஞ்சர்ஸில் இதுவரை நாம் பார்த்த பலரும் அதே கல்லூரியைச் சேர்ந்தவர்கள் என்பது சுவாரஸ்ய ஒற்றுமைதான்.

1999-ல் ஐந்து நண்பர்களுடன் இணைந்து fabmart என்ற பெயரில் ஓர் இணையக் கடையைத் தொடங்கினார் ஹரி. இணையம் மூலம் ஷாப்பிங்கா என்ற ஆச்சர்யம் அப்போது போதுமான கவனத்தை இவர்கள் பக்கம் திருப்பியது. “கூடுற கூட்டமெல்லாம் ஓட்டா மாறுமா” என்ற அரசியல் கோட்பாட்டின்படிதான் இணையத்திலும் நடந்தது. வந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர். ஆனால், வாங்கியவர் வெகு சிலர். ஹரி ஏமாற்றமடையவில்லை. இணையம் இந்தியர்களுக்கு இன்னும் நெருங்கிய நண்பனாகவில்லை. ஆனால், ஆகிவிடுவான் என நம்பினார். அதனால், Fabmart- ஐ `Fabmall’ என்ற பெயரில் நிஜக் கடையாக மாற்றினார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தியர்கள் மாறும்வரை இதைச் செய்வோமென முடிவெடுத்தார்.

ஒருவிதத்தில் ஹரி மேனன் “ஸ்டார்ட் அப் கமல்ஹாசன்” என்று சொல்லலாம். எல்லோ ருக்கும் முன்னதாகவே புதியதாக ஒன்றைத் தொடங்கி, அதற்குச் சரியான வரவேற்பு கிடைக்காமற்போனது. ஆனால், அதே ஐடியாவை, சில காலம் கழித்து வேறொருவர் தொடங்கி ஹிட் அடித்தது வரலாறு. 2011 வரை ஹரி இணையம் பக்கம் வரவில்லை. அந்த ஆண்டுதான் Bigbasket தொடங்கப்பட்டது. அது சரியான நேரம் என ஹரி கணித்தார். 

கேம் சேஞ்சர்ஸ் - Bigbasket

2011-ல் டாட் காம் மார்க்கெட்  நன்றாகத்தான் இருந்தது. ஆனால், உலக அளவில் பிக் பேஸ்கட் போல, காய்கறிகளை வீட்டுக்கே டெலிவரி செய்யும் ஐடியாக்கள் ஜெயிக்கவில்லை. ஸ்விகி, ஊபர் போன்ற நிறுவனங்கள் வேறு. அவர்களிடம் சொந்தமாக உணவகமோ காரோ கிடையாது. இன்னொருவரின் பொருளையோ சேவையையோ வாடிக்கை யாளரிடம் கொண்டு சேர்க்கும் வேலையை மட்டுமே செய்கிறார்கள். ஆனால், காய்கறிகள் அப்படியல்ல. இவர்களே வாங்கி, ஓரிடத்தில் சேமித்து அங்கிருந்து டெலிவரி செய்ய வேண்டும். இதன் பிசினஸ் மாடலே வேறு. அதற்கு ஒரு வெற்றியடைந்த  முன்னுதாரணம் இல்லை. அதுதான் ஹரி மேனன் முன்னிருந்த சவால். அதை வெற்றிகரமாகச் சமாளித்ததுதான் மற்ற இந்திய ஸ்டார்ட் அப் ஜாம்பவான்களிடமிருந்து ஹரியை வித்தியாசப்படுத்துகிறது.

பிக் பேஸ்கட் தொடங்கிய முதல் மூன்றாண்டுகள் எந்தவிதமான விளம்பரமும் செய்யவில்லை. வாய்மொழி மூலமாக மட்டுமே தங்கள் பிராண்டு பிரபலமாக வேண்டுமென நினைத்தார்கள். அதற்கொரு சரியான காரணமும் உண்டு. இந்த சப்ளை செயினில் என்ன மாதிரியான பிரச்னைகள் வருமென முழுமையாகக் கணித்துவிட முடியாது. நிறைய வாடிக்கையாளர்களை விளம்பரம் மூலம் உள்ளே கொண்டு வந்துவிட்டு பிரச்னைகள் அதிகரித்தால் வெளியேறிவிடுவார்கள். அவர்களை மீண்டும் கொண்டுவர கூடுதல் செலவாகும். அதுவே வாடிக்கையாளர்களின் பாராட்டுடன் வாய்மொழியாக பிராண்டு பிரபலமானால், பிரச்னைகள் குறைவாக இருக்கிறதென அர்த்தம். அதன்பின், விளம்பரங்கள் மூலம் லட்சக்கணக்காக வாடிக்கையாளர்களை உள்ளிழுக்கலாம். இதுதான் ஹரி மேனனின் திட்டம்.

இப்போது 25க்கும் அதிகமான  ஊர்களில் இந்த சேவை கிடைக்கிறது. பெங்களூரும் ஹைதையும் இவர்களின் டாப் ஹிட் நகரங்கள். மற்ற இடங்களுக்குப் பரவும் திட்டங்களும் தயார். ஆனால்,  பிரச்னை டெலிவரி பாய்ஸ். இந்தப் பொருள்களைக் கையாள்வதும் குறிப்பிட்ட நேரத்துக்குள் டெலிவரி செய்வதும் மிக முக்கியம். இல்லையெனில் மொத்த லாபமும் அழுகிப்போகும் பொருளால் நஷ்டக் கணக்காகிவிடும். ஒரு முறை அப்படி ஆகிவிட்டால் மீண்டும் அதே வாடிக்கையாளரைப் பிடிப்பது சிரமம். “இது ஹோட்டல்காரர் தப்பு”, “இது டிரைவர் தப்பு” எனப் பழியைப் போடவும் ஆளில்லை. அதனால், மற்ற சிறு ஊர்களுக்கு இதை விரிவுபடுத்துவதில் இன்னமும் சிக்கல் நீடிக்கிறது

கேம் சேஞ்சர்ஸ் - Bigbasketமெதுவாக, திட்டமிட்டு வளர்ந்து வருவதுதான் பிக் பேஸ்கெட்டின் மிகப்பெரிய பலம். 2014-ல் ஆண்டு வருமானம் 178 கோடியாக இருந்தது. 2015-ல் அது 600 கோடி ஆனது. 2017-ல் 1,070 கோடி ஆனது. இந்த ஆண்டு அது 2,000 கோடியாக உயரும் என்கிறார்கள். ஆனால், இந்த 2,000 கோடி என்பது இந்தியாவின் கிராசரி மார்க்கெட்டில் ஐந்து சதவிகிதம்கூடக் கிடையாது. எல்லா சூப்பர் மார்க்கெட்டுகளிலும் மால்களிலும் பார்க்கிங் பிரச்னை அதிகமாக இருக்கிறது. எனவே, மக்கள் மளிகைப் பொருள்க ளுக்காகக் கடைகளுக்குச் செல்வது குறையுமென்கிறார்கள் வல்லுநர்கள். அதனால் இனி வரும் ஆண்டுகளில் பிக் பேஸ்கட்டின் வளர்ச்சி இன்னும் வேகமாக இருக்கும். அதனால்தான் இதன் மொத்த மதிப்பு விரைவில் இரண்டு பில்லியன் டாலர் ( இந்திய ரூபாயில் 15,000 கோடி) ஆகுமெனக் கணிக்கிறார்கள். தொடங்கிய ஏழே ஆண்டுகளில் இந்த வளர்ச்சி என்பது ஹரியே எதிர்பார்க்காததுதான்.

“42 கி.மீ மராத்தானில் முதல் கிலோமீட்டரை மட்டுமே தாண்டியிருக்கிறோம்” என்கிறார் ஹரி மேனன். நிறைய விவசாயிகளுடன் கைகோப்பது, ஸ்டோரேஜ் ஏரியாக்களை அதிகரிப்பது, ஆர்டர் செய்தால் வீட்டுக்குப் பொருள் வர ஆகும் நேரத்தைக் குறைப்பது என நிறைய கனவுகளுடன் தன் பயணத்தைத் தொடர்கிறார்்.

ஹரிக்கு பிக் பேஸ்கட்டைவிட மிகப்பெரிய காதல் ஒன்றிருக்கிறது. அது இசை. ஹரி ஒரு கிட்டார் பிளேயர். கல்லூரிக் கலைநிகழ்ச்சிகளில் வாசிக்கத் தொடங்கியவர், இன்று பிக் பேஸ்கேட் போர்டு மீட்டிங்க் வரை தொடர்கிறார். ஒருவேளை, ஸ்டார்ட் அப் பக்கம் வராமல் போயிருந்தால் இசையமைப்பாளர் ஆகியிருப்பேன் என்கிறார் ஹரி மேனன். எல்லாத் தொழில் முனைவர்களுக்கும் இப்படியொரு கலை ஆர்வமும் தேவை. கலை என்பது மண் சார்ந்தது; மக்களுக்கானது. ஸ்டார்ட் அப்களும் அப்படித்தான். இதைத்தான்  “Think local; Act global” என்கிறார்கள். உள்ளூர்ப் பிரச்னைகளுக்கான தீர்வு, அது சர்வதேசத் தரத்தில். அதுதான் ஸ்டார்ட் அப்களின் சக்சஸ் மந்திரம்.

கார்க்கி பவா