2018 ஸ்பெஷல்
சினிமா
Published:Updated:

கேட்ஜெட்ஸ் - 2018

கேட்ஜெட்ஸ் - 2018
பிரீமியம் ஸ்டோரி
News
கேட்ஜெட்ஸ் - 2018

கேட்ஜெட்ஸ் - 2018

2018ல் ஆண்டுமுழுக்க ஏகப்பட்ட கேட்ஜெட்கள் வெளியாகியிருந்தாலும், ஒரு சில பிராண்டுகள் மாஸ் காட்டின... 

கேட்ஜெட்ஸ் - 2018

ரு சின்னக் கதை. விவோ, ஒப்போ, ஒன்ப்ளஸ் ஆகிய மூன்றுமே BBK எலக்ட்ரானிக்ஸ் என்னும் ஒரே நிறுவனத்தைச் சார்ந்த பிராண்டுகள்தாம். இந்த மூவரின் முக்கிய போட்டியாளர்  MI.

கேட்ஜெட்ஸ் - 2018



ஷியோமி, ரெட்மி என பட்ஜெட் மொபைல்களில் மட்டும் புழங்கிவந்த MI-க்கு, ரியல்மீ என்னும் புதிய பிராண்டை உருவாக்கி ஷாக் தந்தது BBK எலக்ட்ரானிக்ஸ். ரியல்மீயும் பட்ஜெட் செக்மென்ட்டில் ஹிட் அடிக்க, செம காண்டான MI உடனே ஆரம்பித்ததுதான் போக்கோ. ப்ரீமியம் வசதிகள் மற்றும் கம்மி விலை என்ற ஒன்ப்ளஸ்ஸின் அதே ஃபார்முலாவை அப்படியே போக்கோவிற்கும் எடுத்துப் பொருத்த... செம ஹிட்!  ப்ரீமியம் மொபைலில் இருக்கும் எல்லாம் F1-ல் இல்லையே எனச் சின்னச் சின்ன விமர்சனங்கள் ஒருபக்கம் வந்தாலும், கொடுக்கும் பணத்திற்கு அதிகபலன் கொடுக்கும் மொபைல் எனப் பெயரெடுத்தது போக்கோ. 20,000 பட்ஜெட்டில் பெஸ்ட் செல்லிங் மொபைலாக மாற, மிட் ரேஞ்ச் மொபைல்களின் ட்ரெண்டையே லேசாக மாற்றிவைத்தது போக்கோ.

கேட்ஜெட்ஸ் - 2018

ப்பிள் விட்ட மூன்று ஐபோன் களும், ‘சினாப்சிஸ்’ ரேஞ்சுக்கு “இவ்ளோதானா பாஸ்?” என ஏங்கவைக்க, பவுண்டட் ஸ்க்ரிப்ட்டாக வந்து காப்பாற்றியவை ஆப்பிள் வாட்ச் 4-ம் ஐபேடு ப்ரோவும். ஒருபக்கம் வெறும் ஸ்மார்ட் டிவைஸாக மட்டுமன்றி, பர்சனல் ஹெல்த் கேட்ஜெட்டாக ஆப்பிள் வாட்ச் புரோமோட் ஆக, டெக்னிக்கலாக ஐபேடு ப்ரோவும் அடுத்த லெவல் சென்றது. முன்பக்க டிஸ்ப்ளேவில் இருந்த ஒரே ஒரு பட்டனையும் தூக்கி எறிந்துவிட்டு, டிஸ்ப்ளே ஏரியாவை அதிகப்படுத்தி ஐபேடுக்குப் புத்துருவம் கொடுத்தது ஆப்பிள். விலை கொஞ்சம் அதிகம்தான் என்றாலும், Face ID, A12X பயானிக் சிப், 8 கோர் CPU, 7 கோர் GPU, 64 GB முதல் 1 TB வரை ஸ்டோரேஜ் தேர்வுகள் என முழுமையான ஒரு டேப்லெட்டாக அறிமுகமானது இது.

கேட்ஜெட்ஸ் - 2018

போன் XS, XS மேக்ஸ், XR என முத்து முத்தாக மொத்தம் மூன்று மொபைல்களை இந்த வருடம் களமிறக்கியது ஆப்பிள். சிலிக்கான் வேலியின் பெரியண்ணன் இந்த வருடம் என்ன பெரிய அப்டேட் விடப்போகிறார் என அனைவரும் கன்னத்தில் கைவைத்துக் காத்திருக்க, “இது எங்களுக்கு S வருஷம். அதனால பெருசா எதுவும் இருக்காது. போன வருஷம் விட்ட மொபைலையே லைட்டா பட்டி டிங்கரிங் மட்டும் பார்த்திருக்கோம்” என ஷோல்டரை இறக்கியது ஆப்பிள். “ஆக...அப்டேட்டா இல்லையா?” என்றவர்களுக்கு டூயல் சிம், இ-சிம் ஆகியவற்றை மட்டும் கண்ணில் காட்டியிருக்கிறது ஆப்பிள். இப்படியாக ஆண்ட்ராய்டுக்கு எப்போதோ வந்துவிட்ட டூயல்சிம், இந்த வருடம்தான் ஐபோன் யூசர்களுக்குக் கிடைத்தது. சரி... ஏதோ பட்ஜெட் வெர்ஷன் வந்திருக்காமே என ஐபோன் XR பக்கம் எட்டிப்பார்த்தால், அதன் விலையே ரூ.77,000-த்தைத் தொட்டது. இதில் மற்ற மொபைல்களைப்போல AMOLED டிஸ்ப்ளே இல்லை. ஸ்பெஷலான 6.1 இன்ச் Liquid Retina டிஸ்பிளே. மொபைல்களில் இதுதான் சிறந்த LCD டிஸ்ப்ளே என்கிறது ஆப்பிள். கூடவே இ-சிம்முடன் கூடிய டூயல் சிம், நேர்த்தியான டிசைன், விதவிதமான கலர் ஆப்ஷன்கள் ஆகியவையும் ஒன்றுசேர மற்ற இரண்டு மொபைல்களைவிடவும் அதிகம் கவனம் ஈர்த்தது XR.

கேட்ஜெட்ஸ் - 2018

“யார்யா இவன்... இம்புட்டு அப்டேட் விடுறான்?” என 2018-ல் ‘விஜய்சேதுபதி’ ரசிகர்கள் அளவுக்கு வியக்கவைத்தது ஒன்ப்ளஸ். ஆரம்பத்தில் ஒன்ப்ளஸ் 6, அடுத்த ஐந்து மாதத்தில் இன்னும் அப்டேட்டான ஒன்ப்ளஸ் 6T, அடுத்த இரண்டு மாதத்தில் சூப்பர்ஸ்பெஷல் மெக்லாரன் எடிஷன் என இந்த வருடம் முழுக்கவே ரசிகர்களை ‘ஹைப்’புடனே வைத்திருந்தது ஒன்ப்ளஸ். ஒவ்வொன்றும் ஒரு ரகம் என்றாலும், இன்டிஸ்ப்ளே சென்சார் மற்றும் ஸ்டைலிஷ் டிசைனுடன் இரண்டாவதாக வெளியான 6T-க்கு எல்லோருமே ஹார்ட்டின் விட்டனர். கேமரா, பர்ஃபாமன்ஸ், பேட்டரி, விலை அனைத்து ஏரியாவிலும் ‘அட்ச்சு தூக்க’ ப்ரீமியம் மொபைல்களையே ஓரங்கட்டிவிட்டு டாப் லிஸ்ட்டில் இடம்பிடித்துவிட்டது 6T.

காசிவிஸ்வநாதன்