Published:Updated:

'ஆண்ட்ராய்டு இல்ல ஐஒஸ்; இதுதான் உங்களுக்கு சாய்ஸ்' - விண்டோஸ் போனுக்கான ஆதரவை நிறுத்தும் மைக்ரோசாஃப்ட்!

'ஆண்ட்ராய்டு இல்ல ஐஒஸ்; இதுதான் உங்களுக்கு சாய்ஸ்' - விண்டோஸ் போனுக்கான ஆதரவை நிறுத்தும் மைக்ரோசாஃப்ட்!
'ஆண்ட்ராய்டு இல்ல ஐஒஸ்; இதுதான் உங்களுக்கு சாய்ஸ்' - விண்டோஸ் போனுக்கான ஆதரவை நிறுத்தும் மைக்ரோசாஃப்ட்!

ஒரு காலத்தில் மொபைல் சந்தையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்த விண்டோஸ் இயங்குதளத்தின் காலம் கூடிய விரைவில் முடிவுக்கு வரப் போகிறது. இந்த ஆண்டு டிசம்பர் 10-ம் தேதிக்குப் பிறகு விண்டோஸ் 10 இயங்குதளத்தைக் கொண்ட மொபைல்களுக்கான ஆதரவு நிறுத்தப்படும் என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக செக்யூரிட்டி அப்டேட்கள் தொடங்கி அனைத்து விதமான அப்டேட்களும் இனிமேல் விண்டோஸ் 10 இயங்குதளத்தைக் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்குக் கிடைக்காது. 

மேலும் அதன் பிறகு சில வசதிகள் சரியாக இயங்காமலும் போகவும் வாய்ப்புள்ளது. இறுதியாக விண்டோஸ் 10 மொபைல் இயங்குதளப் பதிப்பானது கடந்த 2015-ம் ஆண்டில் வெளியானது. ஒரு சில விண்டோஸ் மொபைல்கள் மட்டுமே அதை ஏற்றுக் கொண்டு இயங்க ஏற்றதாக இருந்தன. கடந்த சில வருடங்களாகவே விண்டோஸ் மொபைல்களுக்கான வரவேற்பு குறைந்து கொண்டே சென்றது. எனவே தற்பொழுது இறுதியாக இந்த முடிவை மைக்ரோசாஃப்ட் எடுத்துள்ளது. 

மேலும் இது தொடர்பாக விரிவான தகவல்கள் அதன் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. 'ஆதரவு நிறுத்தப்படுவதன் காரணமாக ஆண்ட்ராய்டு அல்லது ஐஒஸ் இயங்குதளத்தைக் கொண்ட சாதனத்திற்கு மாறிக்கொள்ளுங்கள்' எனவும் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் பயனாளர்களுக்கு பரிந்துரை செய்துள்ளது.