Published:Updated:

48 MP கேமராவுடன் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன்! - விரைவில் இந்தியாவில் வெளியாகிறது

48 MP கேமராவுடன் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன்! - விரைவில் இந்தியாவில் வெளியாகிறது
48 MP கேமராவுடன் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன்! - விரைவில் இந்தியாவில் வெளியாகிறது

மொபைல் சந்தையில் முன்னிலையில் இருக்கும் ஷியோமி நிறுவனம் கூடிய விரைவில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. ரெட்மி நோட் 7 என்ற இந்த ஸ்மார்ட்போன் கடந்த சில நாள்களுக்கு முன்னால் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே, அந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகி வந்தது. அதை தற்பொழுது உறுதிப்படுத்தியிருக்கிறார் ஷியோமி இந்தியாவின் நிர்வாக இயக்குநரான மனு குமார் ஜெயின்.`` நாங்கள் இந்தச் சந்தையை தலைகீழாக மாற்றப்போகிறோம்" என அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதன் மூலமாக ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாவது உறுதியாகியுள்ளது.

6.3 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்ட ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் 48 MP கேமரா இருக்கிறது. Snapdragon 660 புராசஸரைக் கொண்ட இதன் விலை மிகக் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தியாவில் இதன் விலை பதினைந்தாயிரம் ரூபாய்க்குக் கீழே நிர்ணயிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது அறிமுகப்படுத்தப்படும் தேதியை ஷியோமி நிறுவனம் தெரிவிக்கவில்லை என்றாலும், அடுத்த மாதத் தொடக்கத்தில் இது அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.