Published:Updated:

கேம் சேஞ்சர்ஸ் - 26 - Zoomcar

கேம் சேஞ்சர்ஸ் - 26 - Zoomcar
பிரீமியம் ஸ்டோரி
கேம் சேஞ்சர்ஸ் - 26 - Zoomcar

கேம் சேஞ்சர்ஸ் - 26 - Zoomcar

கேம் சேஞ்சர்ஸ் - 26 - Zoomcar

கேம் சேஞ்சர்ஸ் - 26 - Zoomcar

Published:Updated:
கேம் சேஞ்சர்ஸ் - 26 - Zoomcar
பிரீமியம் ஸ்டோரி
கேம் சேஞ்சர்ஸ் - 26 - Zoomcar
கேம் சேஞ்சர்ஸ் - 26 - Zoomcar

ந்தியர்கள் மேற்குலகை நோக்கி வேலைக்காகவோ தொழில் செய்யவோ போவது வழக்கம். ஆனால், எல்லா விதிகளுக்கும் விதிவிலக்கு என ஒன்று உண்டு அல்லவா? அந்த விதிவிலக்குதான் கிரெக் மோரன் மற்றும் டேவிட் பேக். இந்த இரண்டு அமெரிக்கர்களும் இணைந்து இந்தியாவில் தொடங்கிய ஸ்டார்ட் அப் தான் ஸூம் கார். ``அது என்ன புதுக் கார்?” எனத் தெரிந்துகொள்ளும் முன் இவர்களின் சுவாரஸ்யமான புரொஃபைலைப் பார்த்து ஒரு லைக் தட்டி விடுவோம்.   

கேம் சேஞ்சர்ஸ் - 26 - Zoomcar

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பட்டம் பெற்றதும், மேற்படிப்புக்கு உதவித்தொகையும் கிடைத்த பின்பும்கூட அதை வேண்டாமென்ற கிரெக் மற்றும் டேவிட்டிடம் “என்ன செய்யப் போறீங்க” என்றார் அவர்களின் பேராசிரியர்.

``இந்தியாவுக்குப் போய் கார் ஷேரிங் ஸ்டார்ட் அப் தொடங்கப் போறோம்” - என்றார்கள் மாணவர்கள்.

“இந்தியர்களுக்குக் கார் வாங்குவது என்பது அந்தஸ்து தொடர்பான விஷயம். அதை அவர்கள் இன்னொருவருடன் ஷேர் செய்ய விரும்ப மாட்டார்கள்” - இது பேராசிரியர்.

``அமெரிக்காவைவிட கார் பிரியர்கள் உலகில் எங்குமிருக்க மாட்டார்கள். இங்கேயே அந்த ஐடியா வெற்றிதான்... நீங்க எப்பவாது பஸ்ல டேட்டிங் போயிருக்கீங்களா? அது வேலைக்காவாது புரொபசர். கார் வேண்டும்” - இது டேவிட் பேக்

கொஞ்ச நேரம் டேவிட்டை உற்றுப் பார்த்த அந்தப் பேராசிரியர் “நீ உன் டேட்ல சொதப்பினதுக்குக் காரணம் பஸ் இல்லை. நீதான். அது உனக்கு எப்பப் புரியப்போகுதோ” என்றார்.

ஒழுங்காகப் படிக்கவில்லையென ஆசிரியரிடம் திட்டு வாங்குவது பரவாயில்லை. இப்படி டேட்டிங்குக்கும் லாயக்கில்லை எனத் திட்டு வாங்கிட்டோமே என வருந்தினார் டேவிட் பேக். ஆனாலும் நம்பிக்கை குறையவில்லை. இந்தியாவைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம் என முடிவு செய்தார்கள் நண்பர்கள்.    

கேம் சேஞ்சர்ஸ் - 26 - Zoomcar

அப்போது வந்த  ஒரு வங்கியின் ஆஃபரை ஏற்றுக்கொண்டார் டேவிட். ஒரே காரணம், அந்த வங்கிக்கு இந்தியாவில் கிளை உண்டு. அதன்மூலம் இந்தியாவிற்குப் போகலாம் என நினைத்தார் டேவிட். அமெரிக்காவிலிருந்துகொண்டே இந்திய நண்பர்கள் மூலம் இந்தச் சந்தையை நன்று புரிந்துகொண்டார். ஆனால், அவரால் இந்தியாவிற்கு வரவே முடியவில்லை. எந்தக் காரணத்துக்காக வேலையில் சேர்ந்தோமோ அது நடக்கவில்லையே என யோசித்த டேவிட், ஒரு சுபயோக சுபதினத்தில் அந்த வேலைக்கு குட் பை சொல்லிவிட்டார். இந்தியாவிற்குப் போனால் பிழைத்துக்கொள்ளலாம் என நினைக்க டேவிட்டுக்குப் பல காரணங்கள் இருந்திருக்கலாம்.  அந்தச் சமயத்தில் உலகம் முழுவதுமே இந்தியச் சந்தையைக் குறி வைத்துக்கொண்டிருந்தது என்பதுதான் உண்மை.

ஹாலிவுட் படங்களில் கதை இந்தியாவிற்கு 15 நிமிடங்களாவது நகர்ந்து வந்துகொண்டிருந்தன. அதன்மூலம் இந்திய ஸ்டார் ஒருவரைப் படத்துக்குள் நுழைத்து இந்திய ரசிகர்களைக் கவர நினைத்தார்கள். சில திரைப்படங்கள் அமெரிக்காவில் வெளியாகும் முன்பே இந்தியாவில் வெளியான சம்பவங்களும் உண்டு. பல சர்வதேச நிறுவனங்கள் “இந்தியச் சந்தை எங்களுக்கு முக்கியம்” என வெளிப்படையாக அறிவித்துக் களமிறங்கின. பில் கேட்ஸ்கூட ``இனி இந்தியச் சந்தையில் இறங்காமல் உலக அளவில் பெரிய நிறுவனமாக இருப்பது சாத்தியமில்லை” என்றார். இப்படி ஜாம்பவான்கள் இந்தியாவின் பலம் பற்றிப் பேசினாலும் நேரிடையாக இந்தியாவிற்கு வந்து தொழில் தொடங்க முதலில் யாருமே நினைக்கவில்லை. அதைச் செய்தது கிரெக்கும் டேவிட்டும்தாம். இந்தியா முழுவதும் சுற்றியவர்கள் கார் ஷேரிங் என்ற ஐடியாவை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து ஒரு புதிய மாடலை டிசைன் செய்தார்கள். அந்த ஜீபூம்பா ‘கார் ரென்ட்டல்.’

இந்தியர்கள் கார்களை வாடகைக்கு எடுத்தால் கார் மட்டும் வராது; கூடவே ஓர் ஓட்டுநரும் வருவார். நம் வீட்டிலே கார் இருக்கிறதென்றால் ஓட்டுநர் மட்டும் வருவார். ஆனால், நாமே ஓட்டுநர் ஆக கார் மட்டும் வேண்டுமென்றால் கிடைக்காது. நண்பர்கள் யாராவது ‘இவன் நல்லா ஓட்டுவான்ப்பா’ என மனது வைத்துக் கொடுத்தால்தான் உண்டு. இது வளர்ந்த நாடுகளில் வெற்றியடைந்த ஐடியாதான். ஆனால் இந்தியர்களுக்கு?

டேவிட்டின் இந்தக் கேள்விக்குப் பதிலிருந்தது. இந்தியர்கள் உலகமயமாக்கலுக்குப் பின் மேற்கத்திய விஷயங்கள் பலவற்றுக்கு ஓகே சொல்லியிருக்கிறார்கள். அதனால், அந்தக் கலாசாரத்துக்குப் பழகிய ஊரிலிருந்து இதைத் தொடங்கினால் சரியாக வரும் என்பதே அந்தப் பதில். அப்படி அவர்கள் இந்திய மேப்பில் வட்டம் போட்ட இடம் பெங்களூரு. தெருவுக்கு மூன்று ஆட்டோக்களும் பத்து சாஃப்ட்வேர் இன்ஜினீயர்களும் இருக்குமிடம்.

இந்தியாவில் 15 சதவிகிதத்தினருக்கும் குறைவானோரிடம்தான் அப்போது கார் இருந்தது. ஆனால், கார் தேவை என்பது 50 % தாண்டியிருந்தது. கார் இல்லாதவர்கள் வாடகைக்குத்தான் கார் எடுக்கிறார்கள். ஆனால், அது விலை அதிகம். அவர்களுக்குக் காரை மட்டும் வாடகைக்குத் தந்தால், அவர்களே ஓட்டலாம். செலவு குறைவு. கூடுதலாக ஒருவர் அமரலாம். பயணிப்பவர்கள் எல்லோருமே தெரிந்தவர்கள் என்பதால் பேசுவதைக்கூட சென்சார் செய்யத் தேவையில்லை. இப்படிப் பல சாதகமான விஷயங்கள் இருந்தாலும் இந்த ஐடியாவைச் செயல்படுத்துவதில் பல சிக்கல்கள் இருந்தன.

இந்தியாவில் டெக் நிறுவனம் ஒன்றைத் தொடங்குவது எளிதாக இருக்கலாம். ஆனால், மற்ற ஏரியாக்கள் அப்படியல்ல. லஞ்சம்; அடுத்து விதிமுறைகளே குழப்பமாகவும் சிக்கலாகவும்தானிருக்கும். இந்தியாவில், கார் வாடகைக்கு விடுபவர்கள் மஞ்சள் போர்டு லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். கிரெக் மற்றும் டேவிட்டிடம் அது இல்லை. ஏற்கெனவே அந்த லைசென்ஸ் வைத்திருக்கும் ஒரு நிறுவனத்துடன் அவர்கள் இணைந்து செயல்பட்டே ஆக வேண்டும். பெங்களூரிலிருந்த அனைத்து முன்னணி கார் நிறுவனங்களிடமும் பேசிப் பார்த்துவிட்டார்கள். வெள்ளைக்காரனுக்கு காரை வாடகைக்குத் தருவது என்றாலே பாஸ்போர்ட்டைக் கேட்பார்கள். இவர்கள், வியாபாரமே செய்யலாம் என்றால் யோசிக்க மாட்டார்களா? முடியாது என்றே பதில் வந்தது. மிச்சமிருந்தது ஒரே ஒரு நிறுவனம். ரமேஷ் டூர்ஸ் & டிராவல்ஸ்.  

கேம் சேஞ்சர்ஸ் - 26 - Zoomcar

டிசம்பர் 23 அன்று அந்த நிறுவனத்துடன் மீட்டிங் முடிவானது. அன்றிரவே கிறிஸ்துமஸுக்காக கிரெக் அமெரிக்கா செல்ல வேண்டும். ரிட்டர்ன் டிக்கெட் போடாமல், போவதற்கு மட்டுமே டிக்கெட் போட்டிருந்தார் கிரெக். காரணம், ரமேஷ் டிராவல்ஸும் முடியாதென்றால் அமெரிக்காவிலேயே பெட்டிக்கடை வைத்துப் பிழைத்துக்கொள்வதென முடிவு செய்திருந்தார். ஆனால், அந்த மீட்டிங் நல்லபடியாக முடிந்தது. முதலில் ஏழு கார்களை ஸூம் காருக்காகத் தர ஒப்புக்கொண்டது ரமேஷ் டிராவல்ஸ்.

பெங்களூருவாசிகள் சிலர் ஸூம் கார் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களைவிடச் சிறந்த விளம்பரம் எதுவுமில்லை. அது ஸூம் கார் விஷயத்திலும் உண்மை ஆனது. ஸூம் கார் வேகமாக வளர்ந்தது. ஸூம் காருக்கு ஏழு கார்கள் போதவில்லை. ஒரே ஆண்டில் கார்களின் எண்ணிக்கை 1000 ஆனது. அந்தச் சமயத்தில் மஹேந்திரா நிறுவனமும் சில கார்களைத் தந்து உதவ, பெங்களூரின் புதிய நாயகன் ஆனது ஸூம் கார்.

வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமானதும் தொழில்நுட்ப விஷயத்திலும் வளர்ந்தே ஆக வேண்டிய கட்டாயம். அதற்குத் தேவை முதலீடு. அள்ளிக் கொடுத்தார்கள் ஃபோர்டு உட்பட பல முதலீட்டாளர்கள்.

வீட்டுக்கே வந்து கார் தருவது, குறிப்பிட்ட இடத்தில் பிக்கப் செய்வது, நம்மிடம் கார் இருந்தால் அதையே ஸூம் கார் மூலம் வாடகைக்கு விடுவது என நிறுவனர்கள் கொண்டு வந்த அத்தனை ஐடியாக்களுமே ஸூம் காரை இந்தியாவில் வ்ரூஊஊஊம் என வளர்த்தது. 2017-ல் ‘டாம் 10 புதுமையான ஐடியாக்கள் கொண்ட ஸ்டார்ட் அப்’ விருதும் கிடைத்தது. இன்று வாடகை சைக்கிளிலும் கால் பதித்திருக்கிறார்கள்.

ஸூம் கார் 2016-லே லாபம் பார்க்கத் தொடங்கிவிட்டது. ஆனால், வந்த லாபத்தையெல்லாம் புதிய முயற்சிகளுக்காகவும், நிறுவனத்தைப் பெரியதாக்கவும் முதலீடு செய்துவிட்டார்கள். அது சரியான முடிவுதான். அந்தச் சின்ன வெற்றிக்காகவா அவர்கள் கடல் கடந்து வந்திருக்கிறார்கள்? இந்தியாவின் கடைக்கோடி கிராமம் வரைக்கும் ஸூம் கார் சென்றடைய வேண்டும் என நினைக்கிறார்கள் கிரெக்கும் டேவிட்டும். அப்போதுதான் இந்தியச் சந்தை முழுவதையும் அவர்கள் பயன்படுத்திக்கொண்டதாக ஆகும். ஸூம் கார் நிச்சயம் அதைச் செய்யும். ஏனெனில், இங்கே வருவதற்கு முன்பே அவர்களுக்குத் தெரிந்த, நம்பிய ஒரு விஷயம் உண்டு.

அது, இந்தியா ஏழை நாடாக இருக்கலாம். ஆனால், மார்க்கெட் பெருசு.

இங்கே மார்க்கெட் என்பதே மக்கள்தாம். அவர்களை ஏமாற்றாமல், சரியான முறையில் சேவைகள் கொடுப்பது முக்கியம். ஸ்டார்ட் அப்கள் அந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தினால் போதும். மக்கள் ஆதரவு நிச்சயம்; ஸூம் காருக்குக் கிடைத்ததைப்போல.

கார்க்கிபவா