Published:Updated:

அறையை எங்கிருந்தாலும் கண்காணிக்கலாம்... ஷியோமியின் புதிய ஹோம் செக்யூரிட்டி கேமரா

அறையை எங்கிருந்தாலும் கண்காணிக்கலாம்... ஷியோமியின் புதிய ஹோம் செக்யூரிட்டி கேமரா
அறையை எங்கிருந்தாலும் கண்காணிக்கலாம்... ஷியோமியின் புதிய ஹோம் செக்யூரிட்டி கேமரா

ஷியோமி நிறுவனம், இந்தியாவில் மொபைல்கள் மட்டுமின்றி வீட்டு உபயோகப் பொருள்கள் சிலவற்றையும் விற்பனை செய்துவருகிறது. ஏற்கெனவே, ஏர் ப்யூரிஃபையர், ஹோம் செக்யூரிட்டி கேமரா போன்றவை இங்கே விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. தற்போது, எம்ஐ ஹோம் செக்யூரிட்டி கேமராவின் பேஸிக் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கேமரா மூலமாக இது வைக்கப்பட்டுள்ள இடத்தைக் கண்காணிக்க முடியும்.

எடுத்துக்காட்டாக, வீட்டில்  ஓர் அறையில் இதைப் பொருத்திவிட்டால், அந்த அறையை ஸ்மார்ட்போன் மூலமாக எங்கிருந்து வேண்டுமானாலும் கண்காணிக்கலாம். இதற்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட கேமரா, 360 டிகிரி கோணத்திலும் திரும்பும் திறன் கொண்டது. இது, பேஸிக் மாடல் என்பதால் முன்புறம் இருப்பவற்றை மட்டுமே பார்க்க முடியும். அதற்காக, இந்த கேமராவில் 130 டிகிரி வைடு ஆங்கிள் லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் விலை 2,299 ரூபாய். இன்று மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வரும் இது, தற்போது அறிமுக விலையாக 1,999 ரூபாய்க்கு கிடைக்கும்.