
டிஜிட்டல்
மென்பொருள் தயாரிப்பு மற்றும் சேவை நிறுவனமான ஜோஹோ (ZOHO), தமிழ்நாடு சிறு மற்றும் குறுந் தொழில்கள் கூட்டமைப்பான டான்ஸ்டியா (TANSTIA) அமைப்புடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. இதன்படி, ஜோஹோவின் மென்பொருள்களை (ZOHO EmPoWeR) டான்ஸ்டியா உறுப்பினர்கள் சுமார் 20% தள்ளுபடி விலையில் பயன்படுத்த முடியும். இதுகுறித்த அறிவிப்பை ஜோஹோவின் ராஜேந்திரன் தண்டபாணி மற்றும் முரளிமனோகர், டான்ஸ்டியாவின் தலைவர் எஸ்.அன்புராஜ், இணைச் செயலாளர் எஸ்.வாசுதேவன் ஆகியோர் வெளியிட்டனர்.

இதற்கான விழாவில் தமிழ்நாடு தொழில்முனை வோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இயக்குநர் எஸ்.நாகராஜன் ஐ.ஏ.எஸ் கலந்து கொண்டு பேசும்போது, “இந்தக் கூட்டு மூலம் தமிழகத்திலுள்ள சிறு மற்றும் குறுந்தொழில் நிறு வனங்களில் பணிச்சுமை குறைந்து, வளர்ச்சியை நோக்கிச் செல்லமுடியும்” என்றார்.

“ஜோஹோவின் மென்பொருள்கள் எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு உதவும் விதமாக வடிவமைக்கப் பட்டுள்ளன. சுமார் 5 லட்சம் டான்ஸ்டியா உறுப்பினர்கள் ஜி.எஸ்.டி பதிவுகளை மேற் கொள்ளவும், வரிக் கணக்குத் தாக்கல் செய்யவும் இந்த மென்பொருள் உதவும்’’ என்றார் ராஜேந்திரன் தண்டபாணி. தமிழகத்தில் உள்ள எஸ்.எம்.இ-க்கள் டிஜிட்டல் தொழில்நுட்பங் களைப் பயன்படுத்தத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியான விஷயமே!
சி.சரவணன் - படம்: பா.காளிமுத்து