Published:Updated:

`இனி 24 மணி நேரமும் விளையாடலாம்! - 6 மணி நேரத் தடையை விலக்கிய பப்ஜி

`இனி 24 மணி நேரமும் விளையாடலாம்! - 6 மணி நேரத் தடையை விலக்கிய பப்ஜி
`இனி 24 மணி நேரமும் விளையாடலாம்! - 6 மணி நேரத் தடையை விலக்கிய பப்ஜி

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானதாக இருக்கும் PUBG விளையாட்டைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சமீபகாலமாக எழுந்து வந்தது. இதைத் தொடர்ந்து விளையாடுவதால் உடல்நலம் பாதிக்கிறது என்பது இதன் மீது வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் சில பகுதிகளில் பப்ஜி விளையாடத் தடை விதிக்கப்பட்டது. குஜராத் போன்ற பகுதிகளில் பொது இடத்தில் பப்ஜி விளையாடிய சிலர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இது தவிர பல கல்லூரிகள், பள்ளிகளில் இதை விளையாட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்படிப் பல இடங்களிலும் இருந்து தடை விதிக்க வேண்டும் என்று எழுந்த கோரிக்கையால் பப்ஜி நிறுவனம் விளையாடும் நேரத்தைக் கட்டுப்படுத்த முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியானது.

அதன்படி இந்தியாவில் ஒருவர் ஒரு நாளில் ஆறு மணி நேரம் மட்டுமே விளையாட அனுமதிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில் விளையாடிய சிலருக்கு அது தொடர்பான எச்சரிக்கை செய்தியும் காட்டப்பட்டது. வெறும் இரண்டு மணி நேரம் விளையாடினாலும் இந்த எச்சரிக்கை காட்டப்படுவதாகச் சிலர் தெரிவித்திருந்தார்கள்.  

இந்நிலையில், அந்தச் செய்தி விளையாட்டிலிருந்த பிழை காரணமாகவே காட்டப்பட்டதாக பப்ஜி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ``பப்ஜி விளையாடுபவர்களிடம் இருந்து பெற்ற கருத்துகளால் Birthday Crate என்ற பகுதியை மாற்றம் செய்திருக்கிறோம். மேலும் Healthy Gameplay System என்ற பிழையும் சரி செய்யப்பட்டு விட்டது. இனிமேல் நீங்கள் எந்தவித தடையும் இல்லாமல் விளையாடலாம். சிரமத்துக்கு வருந்துகிறோம்" என ட்விட்டரில் பப்ஜி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.