Published:Updated:

மூன்றே வாரத்தில் ஒரு மில்லியன் நோட் 7 சீரிஸ் மொபைல்கள் விற்பனை... ஷியோமியின் அதிரடி சாதனை!

மூன்றே வாரத்தில் ஒரு மில்லியன் நோட் 7 சீரிஸ் மொபைல்கள் விற்பனை... ஷியோமியின் அதிரடி சாதனை!
மூன்றே வாரத்தில் ஒரு மில்லியன் நோட் 7 சீரிஸ் மொபைல்கள் விற்பனை... ஷியோமியின் அதிரடி சாதனை!

ஷியோமி நிறுவனம் குறைந்த விலையில் நிறைய சிறப்பம்சங்களுடன் ஆண்ட்ராய்டு மொபைல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் அண்மையில் ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அந்நிறுவனம் வெளியிட்டது. 

இந்த சீரிஸ் மொபைல்களான ரெட்மி நோட் 7 மற்றும் நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இரண்டும் குறைந்த விலையில், அதிக சிறப்பம்சங்கள் கொண்டுள்ளன. 3 GB ரேம், 32 GB மெமரி உள்ள ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் விலை 9,999 ரூபாய் எனவும், இதே மாடலில், 4 GB ரேம், 64 ஜிபி மெமரி உள்ள நோட் 7 ஸ்மார்ட்போன் விலை 11,999 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதுவும் ஆன்லைன் விற்பனை மட்டும்தான் என்பதால் இன்னுமே செம டிமாண்ட் இருக்கிறது.

இதனால் வெறும் மூன்றே வாரத்தில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட போன்கள் விற்பனையானது. தற்போது அதையடுத்து மார்ச் மாத இறுதியில் 4 மில்லியன் விற்பனையைத் தொடும் என்று நிறுவனத்தார் கணக்கிட்டிருந்தனர். அதேபோல தற்போது உலகம் முழுவதும்  4 மில்லியன் ரெட்மி நோட் 7 சீரிஸ் போன்கள் விற்றுத்தீர்ந்துள்ளன. இது ஷியோமிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி" எனத் தலைமை செயல் அதிகாரி லீ ஜூன் தெரிவித்துள்ளார்.