Published:Updated:

நாளை முதல் தொடங்குகிறது #FlipkartDays சேல்... ஸ்பெஷல் ஆஃபர்கள் என்னென்ன?

கார்க்கிபவா
நாளை முதல் தொடங்குகிறது #FlipkartDays சேல்... ஸ்பெஷல் ஆஃபர்கள் என்னென்ன?
நாளை முதல் தொடங்குகிறது #FlipkartDays சேல்... ஸ்பெஷல் ஆஃபர்கள் என்னென்ன?

ஆடித் தள்ளுபடிலாம் அந்தக் காலம். ஆன்லைன் ஷாப்பிங்கில் பிக் பில்லியன் டேஸும், அமேசானின் கிரேட் இந்தியன் சேலும்தான் ஆடித் தள்ளுபடிகள். அது போக, அவ்வப்போது முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் போர்ட்டல்கள் போட்டி போட்டுக்கொண்டு சேல் நடத்துவதுண்டு. அப்படியொரு போட்டிதான் இந்த வாரம் நடக்கவிருக்கிறது.

ஃப்ளிப்கார்ட்டின் ”Flipkart days" ஆஃபர்கள் நாளை தொடங்கி மே 3-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. அதைத் தொடர்ந்து மே 4-ம் தேதி முதல் மே 7-ம் தேதி வரை அமேசான் சம்மர் சேல் நடக்கும்.

ஃப்ளிப்கார்ட் டேஸ் விற்பனையின் முக்கிய ஆஃபர்கள்:
- ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 10% உடனடி தள்ளுபடி
- சோனி, JBL, போட் போன்ற பிராண்டுகளின் ஹெட்ஃபோன்களுக்கு 70 சதவிகிதம் வரை தள்ளுபடி உண்டென ஃப்ளிகார்ட்டின் டீசர்கள் தெரிவிக்கின்றன
- 13,999லிருந்தே லேப்டாப்கள் கிடைக்கும்
- பவர் பேங்க் மற்றும் மொபைல் ஆக்சஸரிஸ்களுக்கும் கணிசமான தள்ளுபடிகள் உண்டு
- ஸ்மார்ட் டிவிகளின் விலையில் பெரிய வீழ்ச்சி இருக்குமென அறிவித்திருக்கிறது ஃபிளிப்கார்ட்

நீங்கள் லேப்டாப்போ, ஸ்மார்ட் டிவியோ, மொபைல்களோ வாங்குவதாக இருந்தால் நாளை ஃப்ளிப்கார்ட் தளத்தைப் பார்த்துவிட்டு முடிவு செய்யலாம்.