Published:Updated:

பட்ஜெட் பிக்ஸல், ஆண்ட்ராய்டு Q, ஸ்மார்ட் அசிஸ்டன்ட்... கூகுள் I/O-வின் 7 ஹைலைட்ஸ்!

பட்ஜெட் பிக்ஸல், ஆண்ட்ராய்டு Q, ஸ்மார்ட் அசிஸ்டன்ட்... கூகுள் I/O-வின் 7 ஹைலைட்ஸ்!

இம்முறை பிரைவசியை முன்னிறுத்தியிருக்கிறது கூகுள். செட்டிங்ஸ் தொடங்கி இதற்காக பல மாறுதல்களை செய்திருக்கிறது. உங்கள் தகவல்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறது என்பதை மீண்டும் மீண்டும் அழுத்தி சொல்கிறது கூகுள்.

"விடைகள் தேடிக்கொடுக்கும் நிறுவனத்திலிருந்து உங்களுக்காக வேலைகளை முடித்துதரும் நிறுவனமாக மாறியிருக்கிறது எங்கள் நிறுவனம்", இப்படிதான் வருடாந்திர I/O நிகழ்வைத் தொடங்கி வைத்தார் கூகுளின் தலைமைச் செயல் அதிகாரி கூகுள். வருங்கால திட்டங்கள் குறித்தும், புதிய வசதிகள் குறித்தும் முக்கிய அறிவிப்புகளை இந்த நிகழ்வில் வெளியிட்டது கூகுள். இதில் மிக முக்கியமான சில அறிவிப்புகளைக் காண்போம்.

கூகுள் சர்ச்

கூகுள் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது அவர்களின் சர்ச் இன்ஜின்தான். இனி தேடல்களின்போது ஆடியோ பாட்கேஸ்ட்களையும் இனி கூகுள் கொடுக்கும். மேலும், கேமராவை இன்டகிரேட் செய்யும் வசதியும், AR தொழில்நுட்பமும் கொண்டு தேடல் முடிவுகளுடனும் இனி உங்களால் இன்டராக்ட் செய்யமுடியும். அதாவது பூனை என்று தேடினால் பூனையின் 3D மாடல் ஒன்று வரும். அது உங்கள் இடத்தில் இருந்தால் எப்படி இருக்குமெனப் பார்க்கலாம். இது பொருள்களை கூகுளில் தேடும்போது பயனுள்ளதாக இருக்கும். மேலும் கூகுள் லென்ஸும் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணத்துக்கு இனி உணவகங்களுக்குச் சென்று அங்கிருக்கும் மெனுவை நோக்கி உங்கள் கேமராவைக் காட்டினால் அதில் எது சிறந்தது என்பதைச் சொல்லும். அவற்றை கிளிக் செய்தால் கூகுள் மேப்ஸில் இருக்கும் படங்கள் மற்றும் விமர்சனங்களை உங்களுக்குக் காட்டும்.

பட்ஜெட் பிக்ஸல், ஆண்ட்ராய்டு Q, ஸ்மார்ட் அசிஸ்டன்ட்... கூகுள் I/O-வின் 7 ஹைலைட்ஸ்!

கூகுள் டுயூப்லெக்ஸ் 

கூகுள் அசிஸ்டன்ட்டுடன் இன்டகிரேட் ஆகியிருக்கும் இந்த விர்ச்சுவல் AI பர்சனல் அசிஸ்டன்ட் ஓர் உணவகத்துக்கோ, பியூட்டி பார்லருக்கோ நீங்கள் செல்ல வேண்டும் என்றால் இதுவே போன் செய்து பேசி நமக்காக புக்கிங் செய்துவிடும். சென்ற வருடம் அறிவிக்கப்பட்ட இதில் இந்த வருஷம் இன்னும் சில விஷயங்கள் சேர்க்கப்படவுள்ளன. இனி கார் புக் செய்வது, பஸ் புக் செய்வது போன்ற வேலைகளை இதுவே இனி எளிதாகப் பார்த்துவிடும். என்ன புக் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டால் தானாக உங்கள் தகவல்களை நிரப்பித் தந்துவிடும். நாம் ஒருமுறை செக் செய்துவிட்டு பேமன்ட் செய்தால் போதும். இந்தத் தகவல்களை உங்களது முந்தைய பயணங்களை வைத்து எடுத்துக்கொள்ளும். இதனால் உங்களது நேரம் குறையும். இது எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்படவில்லை.

பட்ஜெட் பிக்ஸல், ஆண்ட்ராய்டு Q, ஸ்மார்ட் அசிஸ்டன்ட்... கூகுள் I/O-வின் 7 ஹைலைட்ஸ்!

லைவ் கேப்ஷன்

இந்த வசதியின் மூலம் இணைய சேவை எதுவுமின்றி உங்கள் வீடியோ மட்டும் ஆடியோவிற்கு லைவ்வாக சப்டைட்டில்ஸ் வர வைக்கமுடியும். இது ஆண்ட்ராய்டு Q-வில் கிடைக்கும். இந்த வசதியை இத்துடன் விடாமல் போன் உரையாடல்களும் 'லைவ் ரிலே' என்று தருகிறது.

பட்ஜெட் பிக்ஸல், ஆண்ட்ராய்டு Q, ஸ்மார்ட் அசிஸ்டன்ட்... கூகுள் I/O-வின் 7 ஹைலைட்ஸ்!

ஆண்ட்ராய்டு  Q 

அடுத்த ஆண்ட்ராய்டு வெர்ஷனான 'Q'-விற்கு அறிமுகம் தந்தது கூகுள். வளர்ந்துவரும் ஃபோல்ட்பிள் ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்ப 'Q' இருக்கும், இதற்காகச் சிறப்பு வசதிகள் இதில் சேர்க்கப்பட்டிருக்கிறதாம். 'ஸ்மார்ட் ரிப்ளை' என்ற புதிய வசதியும் 'Q'-வில் இருக்கும். வரும் மெசேஜ்களுக்கு ஏற்ற பதில்கள், எமோஜிகள் என சிலவற்றை உங்களுக்குப் பரிந்துரைக்கும். அதில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்வு செய்து அனுப்பிவிடலாம். ஏற்கெனவே ஜிமெயிலில் இதேபோன்ற வசதியைப் பார்த்திருக்கமுடியும். 'Q'-வில் சேர்க்கப்பட்டதில் முக்கியமான ஒரு வசதியாகப் பார்க்கப்படுவது டார்க் தீம்தான். பயன்பாட்டாளர்கள் பலரும் பல நாள்களாகக் கேட்டுவந்த இந்த வசதி 'Q'-வில் வரும். இதன்மூலம் பேட்டரி திறனை அதிகப்படுத்தமுடியும்.

பட்ஜெட் பிக்ஸல், ஆண்ட்ராய்டு Q, ஸ்மார்ட் அசிஸ்டன்ட்... கூகுள் I/O-வின் 7 ஹைலைட்ஸ்!

இம்முறை பிரைவசியை முன்னிறுத்தியிருக்கிறது கூகுள். செட்டிங்ஸ் தொடங்கி இதற்காகப் பல மாறுதல்களைச் செய்திருக்கிறது. உங்கள் தகவல்கள் பாதுகாப்பாகதான் இருக்கிறது என்பதை மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்கிறது கூகுள். ஒரே பட்டனில் உங்கள் பிரைவசி ஆப்ஷன்களை பார்க்கமுடியும். தகவல்களை நீக்கமுடியும். இப்போது 23 சாதனங்களில் Q பீட்டா வெர்ஷனை பயன்படுத்திப் பார்க்கமுடியும்.

நெஸ்ட் ஹோம் ஹப் மேக்ஸ்

கூகுள் ஹோம் சாதனங்களுக்கு இனி நெஸ்ட் பெயரில் வெளிவரும். கடந்த கூகுள் ஹோம் ஹப்பிற்கு கேமராவும் அது சார்ந்த வசதிகளும் கூடுதலாகக் கொடுத்தால் அதுதான் நெஸ்ட் ஹோம் ஹப் மேக்ஸ். பாதுகாப்பு, தொடங்கி கை செய்கை இயக்கம் வரை பல விஷயங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது இந்த கேமரா. ஆனால், பர்சனல் ரூமில் கேமரா என்றால் ஆபத்து என்ற எண்ணம் வரக்கூடாதென கேமரா, மைக் இரண்டையும் எலெக்ட்ரிக்களாக துண்டிக்கத் தனி சுவிட்ச் தரப்பட்டிருக்கிறது. கேமரா ஆன் ஆகியிருந்தால் பச்சை நிற ஒளி ஒன்று வருமென்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பட்ஜெட் பிக்ஸல், ஆண்ட்ராய்டு Q, ஸ்மார்ட் அசிஸ்டன்ட்... கூகுள் I/O-வின் 7 ஹைலைட்ஸ்!

பிக்ஸல் 3a, பிக்ஸல் 3a XL

ப்ரீமியம் பிக்ஸலின் பட்ஜெட் வெர்ஷன் என இதை அறிமுப்படுத்தியது கூகுள். உடனே எங்கும் கிளம்பிவிட வேண்டாம். 39,999 ரூபாய்தான் அந்த பட்ஜெட். ஒன்ப்ளஸ் 6T-க்கு டஃப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படும் இதில் ஹைலைட் இதன் கேமராதான். கிட்டத்தட்ட பிக்ஸல் 3-யில் இருக்கும் அதே கேமராதான். இப்போது சந்தையில் இருக்கும் பெஸ்ட் கேமரா இதுதான். இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வருகிறது இது.

பட்ஜெட் பிக்ஸல், ஆண்ட்ராய்டு Q, ஸ்மார்ட் அசிஸ்டன்ட்... கூகுள் I/O-வின் 7 ஹைலைட்ஸ்!

கூகுள் மேப்ஸ்

நமது இருப்பிடத்தைக் கூகுள் ட்ராக் செய்வதாகப் பல குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தது. இதனால் இப்போது மேப்ஸில் இன்காக்னிட்டோ மோடு உண்டு. இது ஆன் செய்துகொண்டால் எந்தத் தகவலும் சேமிக்கப்படாது. இது விரைவில் யூடியூப்பிற்கும் வரவிருக்கிறது. 

'பிரைவசி'-யை கூகுள் மட்டுமல்ல ஃபேஸ்புக் போன்ற மற்ற நிறுவனங்களும் முன்னிறுத்துகின்றன. இது உண்மையானதா இல்லை உருவாக்கப்படும் பிம்பமா என்பதற்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.