Published:Updated:

374.08 கோடி... கேண்டிகிரஷ் கேமின் ஒரு மாத வருமானம்... பப்ஜி எவ்ளோ தெரியுமா? #VikatanInfographics

374.08 கோடி... கேண்டிகிரஷ் கேமின் ஒரு மாத வருமானம்... பப்ஜி எவ்ளோ தெரியுமா? #VikatanInfographics
374.08 கோடி... கேண்டிகிரஷ் கேமின் ஒரு மாத வருமானம்... பப்ஜி எவ்ளோ தெரியுமா? #VikatanInfographics

கடந்த ஏப்ரல் மாதத்தில் கேண்டி கிரஷ் சாகா கேமின் மூலம் 374.08 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்புவரைக்கும், பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு, சினிமா டிக்கெட் முன்பதிவு, தேர்வு அப்ளிகேஷன் பதிவு செய்வது, கேம் விளையாடுவது என்று அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள பிரவுசிங் சென்டரைத்தான் நாடினோம். அதிலும், குறிப்பாக கேம் விளையாடுவதற்கு என்றே பிரவுசிங் சென்டருக்குச் சென்றவர்களும் உண்டு. அங்கு சென்றவர்களுக்கு ப்ளே ஸ்டேஷன் வந்தது. தற்போது அனைவரிடத்திலும் செல்போன் வந்த பிறகு, ப்ளே ஸ்டோர்தான் பிரவுசிங் சென்டர், ப்ளே ஸ்டேஷன் எல்லாமே. பிரவுசிங் சென்டரிலும், ப்ளே ஸ்டேஷனிலும் கேம் விளையாடியவர்களுக்கு, மொபைலில் ஆப்ஸ் மூலம் விளையாடுவது புதிதாகவும், ஸ்மார்ட்டாகவும் தெரிந்தது.

374.08 கோடி... கேண்டிகிரஷ் கேமின் ஒரு மாத வருமானம்... பப்ஜி எவ்ளோ தெரியுமா? #VikatanInfographics

இந்தியாவில் பணம் செலுத்தி செயலிகள் பயன்படுத்துபவர்கள் மிகவும் குறைவு. ஆனால், மற்ற நாடுகளில், குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் அதிக அளவில் பணம் செலுத்தி செயலிகளைப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் இலவச செயலிகள் மூலமாகவே தங்கள் தேவையை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். 

உலக அளவில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களில் முதலிடங்களில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மெசஞ்சர், ஃபேஸ்புக் லைட் போன்றவை இருந்தாலும், இவற்றிற்கு அடுத்து அதிகமாக டவுன்லோடு செய்யப்படுவது கேமிங் ஆப்ஸ்தான். இந்த ஆப்ஸ் மூலம் கோடிக்கணக்கான லாபத்தை ஆப் உரிமையாளர்கள் பெறுகின்றனர். சாதாரண ஆப்ஸ் மூலம் பெறப்படும் வருமானத்தைவிட கேமிங் ஆப்ஸ் மூலம் கிடைக்கும் வருமானம்தான் ஆச்சர்யப்பட வைக்கிறது.  

374.08 கோடி... கேண்டிகிரஷ் கேமின் ஒரு மாத வருமானம்... பப்ஜி எவ்ளோ தெரியுமா? #VikatanInfographics

இதில் முதலிடத்தில் இருப்பது கேண்டி கிரஷ் சாகா (Candy Crush Saga) ஆப்தான். கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்த கேமின் மூலம் 374.08 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இரண்டாவது இடத்தில் இருப்பது போக்கிமான்-கோ (Pokemon Go) இந்த ஆப் மூலம் 254.12 கோடி வருமானம் கிடைத்துள்ளது. அடுத்ததாக கிளாஷ் ஆப் கிளான்ஸ் (Clash of Clans) 229.61 கோடி வருமானம் கிடைத்துள்ளது. சமீபத்தில் பிரபலமடைந்த பப்ஜி (PUBG) கேம் இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் பப்ஜி மூலம் 200.26 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து ஹோம்ஸ்கேப்ஸ் (Homescapes), காய்ன் மாஸ்டர் (Coin Master), கார்டன்கேப்ஸ் (Gardenscapes), எம்பயர்ஸ் & பஸில்ஸ் (Empires & Puzzeles) மற்றும் கரேனா ஃப்ரீ ஃபயர் (Garena free fire ) ஆகிய கேம் ஆப்ஸ் உள்ளன. ஒவ்வொரு ஆப் மூலமும் 100 கோடிக்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது. 

374.08 கோடி... கேண்டிகிரஷ் கேமின் ஒரு மாத வருமானம்... பப்ஜி எவ்ளோ தெரியுமா? #VikatanInfographics

ஐபோனை காட்டிலும், ஆண்ட்ராய்டு போனில்தான் அதிக கேம்கள் தரவிறக்கம் செய்யப்படுகின்றன. இதைத் தெரிந்துகொண்ட பல்வேறு மொபைல் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு இதற்கென பிரத்யேகமான முறையில் அதிக ROM கொண்ட செல்போன்களையும் அவ்வப்போது தயாரித்து வெளியிட்டு வருகின்றன. பல்வேறு கேம் வெப்சைட்டுகள் கூட, அதைக் கைவிட்டுவிட்டு ஆப்ஸ் தயாரித்து, அதன் மூலம் லாபத்தை அள்ளிவருகின்றன.

சமீபகாலமாக செல்போன்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், அதை விட இருமடங்கு அளவில் ப்ளேஸ்டோரில் ஆப்ஸ் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. புதிது புதிதாக ஆயிரக்கணக்கான கேம் ஆப்ஸ் வந்துகொண்டிருந்தாலும் மக்களைக் கவர்வது ஒரு சில ஆப்ஸ் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு