Published:Updated:

`பாப்அப் கேமரா சூழ் உலகு!' மொபைல் கேமராக்களின் எதிர்காலம் இனி இதுதானா?

புதிய தொழில்நுட்பங்கள் வரும் போது உலகம் உற்று நோக்குவது சாம்சங், ஆப்பிள் போன்ற முன்னணி நிறுவனங்களைத்தான். ஆனால் இந்த முறை சீன நிறுவனங்கள் அதை மாற்றிக் காட்டியிருக்கின்றன.

`பாப்அப் கேமரா சூழ் உலகு!' மொபைல் கேமராக்களின் எதிர்காலம் இனி இதுதானா?

புதிய தொழில்நுட்பங்கள் வரும் போது உலகம் உற்று நோக்குவது சாம்சங், ஆப்பிள் போன்ற முன்னணி நிறுவனங்களைத்தான். ஆனால் இந்த முறை சீன நிறுவனங்கள் அதை மாற்றிக் காட்டியிருக்கின்றன.

Published:Updated:

ப்போது வெளியாகும் ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலானவற்றில் பாப் அப் கேமரா என்ற விஷயத்தைப் பார்க்க முடிகிறது. போனுக்குள் மறைந்திருக்கும் கேமரா தேவைப்படும் நேரத்தில் மட்டும் வெளியே வருகிறது. இதனால் ஃபிரன்ட் கேமராவுக்கு டிஸ்ப்ளேவில் இடம் தேவைப்படுவதில்லை என்பதால் ஃபுல் வியூ டிஸ்ப்ளேவும் கிடைக்கிறது. இந்த பாப் அப் கேமரா டிரெண்ட் எப்படித் தொடங்கியது ?

சீன நிறுவனங்கள் காட்டிய ஆர்வம்

அண்மையில் வெளியான ஒன்ப்ளஸ் 7 ப்ரோ வரைக்கும் பாப்அப் கேமரா வந்து விட்டது. எப்போதும் இது போல புதிய தொழில்நுட்பங்கள் வரும் போது உலகம் உற்று நோக்குவது சாம்சங், ஆப்பிள் போன்ற முன்னணி நிறுவனங்களைத்தான். ஆனால் இந்த முறை சீன நிறுவனங்கள் அதை மாற்றிக் காட்டியிருக்கின்றன. ஃபுல் வியூ டிஸ்ப்ளேவை ஒரு மொபைலில் கொடுக்க வேண்டும் என்று பல வருடங்களாகவே மொபைல் நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. ஆப்பிளோ, சாம்சங்கோ முதலில் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட விஷயத்தை கடைசியில் சாதித்தது விவோ நிறுவனம்தான். கடந்த வருடம் முதல் முறையாக விவோ நிறுவனம் NEX என்ற போனில் பாப் அப் கேமராவை அறிமுகம் செய்தது. அதன் பின்னர் மற்ற சீன நிறுவனங்களும் அதேபோல போன்களை வெளியிடத் தொடங்கின. முதலில் பிரீமியம் செக்மென்ட் ஸ்மார்ட்போன்களில் இருந்த இது தற்போது சற்று விலை குறைவான போன்களிலும் தென்பட ஆரம்பித்திருக்கிறது. இன்னும் சில மாதங்களில் பட்ஜெட் மொபைல்களிலும் பாப் அப் கேமராவை நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

`பாப்அப் கேமரா சூழ் உலகு!' மொபைல் கேமராக்களின் எதிர்காலம் இனி இதுதானா? 

பாப்அப் கேமரா எப்படிச் செயல்படுகிறது?

மொபைலுக்கு உள்ளே இருக்கும் கேமரா அமைப்பை வெளியே கொண்டு வந்து மீண்டும் உள்ளே கொண்டு செல்வதற்காக உள்ளே ஒரு சிறிய மின் மோட்டார் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் ஒரு ஸ்டெப் அப் வகை மோட்டாரே இதில் இருக்கும். அதனுடன் ஒரு சுழலும் அமைப்புடன் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதால் மோட்டார் இயங்கும் போது பாப் அப் கேமரா வேகமாக மேலும் கீழும் சென்று வர முடிகிறது. உன்னிப்பாகக் கவனித்தால் மோட்டார் இயங்கும் போது வரும் சத்தத்தைக் கேட்க முடியும். ஒரு விநாடிக்கு குறைவான நேரத்தில் கேமரா மேலே வந்து விடும் என்பதுதான் அனைத்து மொபைல் நிறுவனங்கள் கூறும் உத்தரவாதமாக இருக்கிறது. அதே நேரம் இதில் சில சிக்கல்களும் இருக்கின்றன. பாப் அப் கேமரா மொபைல்களை வாட்டர் ஃப்ரூப் ஆக வடிவமைக்க முடியாது. மேலும் பழுதானால் மாற்றுவதும் கடினம், செலவும் அதிகமாகும். நகரும் பாகங்கள் இருப்பதால் இது சீக்கிரம் பழுதடையவும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டு வருகின்றன. ஆனால், இவை பல வகையான சோதனைகளுக்குப் பின்னரே பயன்படுத்தப்படுகிறது என மொபைல் நிறுவனங்கள் கூறுகின்றன. மேலும் கீழே விழுந்தால் தானாகவே உள்ளே சென்றுவிடுவது, அதிக தடவைகள் கேமராவை ஓப்பன் செய்தால் எச்சரிக்கை செய்வது எனக் கூடுதலான பாதுகாப்பு வசதிகளும் கொடுக்கப்படுகின்றன. வசதியோ சிக்கலோ எதுவாக இருந்தாலும் மொபைல் சந்தையில் இப்போதைய டிரெண்டிங் பாப் அப் கேமராதான்.

`பாப்அப் கேமரா சூழ் உலகு!' மொபைல் கேமராக்களின் எதிர்காலம் இனி இதுதானா?

பாப்அப் செல்ஃபி கேமராதான் இனிமேல் நிரந்தரமானதா?

தொழில்நுட்பத்தில் எதுவுமே நிரந்தரமானது கிடையாது. இப்போது டிரெண்டாகத் தெரியும் ஒன்று சில நாள்கள் கழித்து சாதாரணமானதாக மாறக்கூடும். இப்போது ஃப்ரன்ட் கேமராவை இடம் மாற்ற தேவைப்பட்ட போது பாப் அப் என்ற விஷயம் கைகொடுத்திருக்கிறது. அதற்கு மாற்றான விஷயத்தை உருவாக்க மொபைல் நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. குறிப்பாக சாம்சங் டிஸ்ப்ளேவுக்கு அடியிலேயே கேமராவைக் கொடுக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்க முயற்சி செய்து வருகிறது. ஒரு வேளை சாம்சங் அதில் வெற்றி பெற்றால் மாற்றம் வரலாம். அது வரை சந்தையில் இந்த பாப்அப் கேமராவே ஆதிக்கம் செலுத்தும்.