Published:Updated:

இந்தியாவில் `செல்ஃப்' எடுக்காத கூகுள் பிக்ஸல் மொபைல்கள்... என்ன காரணம்?

இந்தியாவில் `செல்ஃப்' எடுக்காத கூகுள் பிக்ஸல் மொபைல்கள்... என்ன காரணம்?

நல்ல ஸ்மார்ட்போனில் ஒருவர் எதிர்பார்ப்பது என்ன? நல்ல மென்பொருள், தரமான கேமரா, நல்ல பர்ஃபார்மென்ஸ். இவை இருந்தும் கூகுள் பிக்ஸல் மொபைல்கள் எதிர்பார்த்த அளவில் விற்காதது ஏன்?

Published:Updated:

இந்தியாவில் `செல்ஃப்' எடுக்காத கூகுள் பிக்ஸல் மொபைல்கள்... என்ன காரணம்?

நல்ல ஸ்மார்ட்போனில் ஒருவர் எதிர்பார்ப்பது என்ன? நல்ல மென்பொருள், தரமான கேமரா, நல்ல பர்ஃபார்மென்ஸ். இவை இருந்தும் கூகுள் பிக்ஸல் மொபைல்கள் எதிர்பார்த்த அளவில் விற்காதது ஏன்?

இந்தியாவில் `செல்ஃப்' எடுக்காத கூகுள் பிக்ஸல் மொபைல்கள்... என்ன காரணம்?

ப்போது ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சியைப் பற்றிப் பேசவேண்டுமென்றால் ஆண்ட்ராய்டைப் பற்றிப் பேசாமல் இருக்கமுடியாது. இத்தனை ஆண்டுகள் ஸ்மார்ட்போன் புரட்சியை ஓர் இயங்குதளமாக முன்னெடுத்து நடத்திவருகிறது கூகுள். ஸ்மார்ட்போன் சந்தையிலிருக்கும் முன்னணி நிறுவனங்கள் பெரும்பாலானவை ஆண்ட்ராய்டைப் பயன்படுத்தினாலும் கூகுளால் அதுமுடியாமல் இருந்தது. சரியான ஹார்டுவேர் பிரிவு இல்லாததால் ஆண்ட்ராய்டு எதை நோக்கிச் செல்கிறது, அதன் வருங்காலம் என்ன என்பதை `டெமோ' காட்டக்கூட கூகுளிடம் ஒரு சொந்தத் தயாரிப்பு இல்லை. ஸ்மார்ட்போன்கள் உற்பத்தி செய்யும் சாம்சங், ஒன்ப்ளஸ் போன்ற OEM நிறுவனங்கள் பலவும் ஆண்ட்ராய்டை அடிப்படையாகக் கொண்டு அதற்குமேல் தங்களது இயங்குதளங்களைக் கட்டமைத்து கொண்டன. ஆனால் கூகுள் `ப்யூர் ஆண்ட்ராய்டு 'அனுபவம் என்னவென்பதை மக்களுக்குக் காட்டவிரும்பியது. LG, சாம்சங், HTC போன்ற OEM-களுடன் இணைந்து நெக்சஸ் சீரிஸ் மொபைல்களை 2010-களில் வெளியிட்டது கூகுள். 

இந்தியாவில் `செல்ஃப்' எடுக்காத கூகுள் பிக்ஸல் மொபைல்கள்... என்ன காரணம்?

ஆண்ட்ராய்டு மொபைல்கள் இப்படிதான் இருக்கவேண்டும் என்று எடுத்துக்காட்டாக இந்த மொபைல்களை முன்வைத்தது கூகுள். இருப்பினும் ஒவ்வொரு மாடலிலும் அதைத் தயாரித்த OEM-களின் `டச்' இருக்கவே செய்தது. ஆனாலும் மிட்-ரேஞ்ச் விலையில் பல வாடிக்கையாளர்களைக் கவர்ந்தது `நெக்சஸ்'. அப்போதுதான் 2016-ல் ஸ்மார்ட்போன் குறித்து இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது கூகுள். ஒன்று இனி நெக்சஸ் போன்கள் வெளிவராது என்பது. இன்னொன்று பிக்ஸல் போனின் அறிமுகம். இரண்டுக்குமே கூகுள் ஹார்டுவேர் மீது காட்டக் கூடிய கவனம்தான் காரணம். `பிக்ஸல்' மொபைல்களில் 'made by google' என்ற வாக்கியத்தைச் சேர்த்து ஸ்மார்ட்போன் சந்தைக்கு வருவதை உரக்கச்சொல்லியது. மோட்டோரோலாவின் முன்னாள் தலைவரான ரிக் ஒஸ்டர்லோவின் தலைமையில் கூகுளின் புதிய ஹார்டுவேர் பிரிவு தொடங்கப்பட்டிருந்தது. இருப்பினும் தன்னிச்சையாகச் செயல்படும் அளவுக்கு அது முழு வளர்ச்சிபெறவில்லை. எனவே, HTC டிசைன் குழுவுடன் இணைந்து முதல் பிக்ஸல் போனை வெளியிட்டது. கடந்த வருடம் இந்தக் குழுவை மொத்தமாக வாங்கியது கூகுள்.

இந்தியாவில் `செல்ஃப்' எடுக்காத கூகுள் பிக்ஸல் மொபைல்கள்... என்ன காரணம்?

ஆப்பிளின் ஐபோனுக்கு மாற்றாகக் கருதியே வெளியிட்டதால் பிக்ஸலின் விலையும் அப்படியே இருந்தது. முதல் போன் என்பதால் சில இடங்களில் சறுக்கவே செய்தது பிக்ஸல். டிசைன் பலருக்கும் பிடிக்கவில்லை. ஆனால் அடுத்த பிக்ஸல் 2-வும் டிசைனில் வெகுசில மெருகேற்றல்கள் செய்யப்பட்டு வெளிவந்தது. சமீபத்திய பிக்ஸல் 3a வரை டிசைன் அவுட்லைன் அதுதான். இதிலிருந்து ஒரே ஒரு விஷயம் மட்டும் தெளிவாகப் புரிகிறது. அது கூகுள் `பிக்ஸல்' தனி பிராண்டாக நிலைநிறுத்துவதில் குறியாக இருப்பது. `பிக்ஸல்' என்று சொன்னாலே கற்பனையில் அதன் உருவம் வந்துவிடவேண்டும் என்பதுதான் அது. பிக்ஸல் மொபைல்களின் முக்கிய ஈர்ப்பு அதன் கேமராதான். கேமரா மென்பொருளில் கூகுள்தான் கில்லி. இந்தப் பிரிவில் தனிக்காட்டு ராஜாவாக இருந்த ஆப்பிளின் மகுடத்தை  சந்தையில் நுழைந்த சில வருடங்களிலேயே கைப்பற்றியது கூகுள். குறைவான ஒளியில் தெளிவான படங்கள் எடுக்க உதவும் `Nightsight' மோடும் கூகுளின் மென்பொருள் திறனைப் பறைசாற்றும். ஸ்மூத்தான இயங்குதளம் மற்றும் மென்பொருள் அனுபவத்திலும் நல்ல மார்க் பெற அமெரிக்காவில் கொஞ்சம் கொஞ்சமாக வளரத்தொடங்கியது. ஆண்ட்ராய்டு அப்டேட்களும் இவற்றுக்குத்தான் முதலில் வரும். இருப்பினும் விலை கொஞ்சம் அதிகம்தான் என்ற குற்றச்சாட்டுகள் இருக்கவே செய்தன. 

இந்தியாவில் `செல்ஃப்' எடுக்காத கூகுள் பிக்ஸல் மொபைல்கள்... என்ன காரணம்?

அப்போதுதான் மிட்-ரேஞ்ச் பிக்ஸல் ஒன்று வெளியாகப்போவதாக வதந்திகள் பரவின. அவற்றை உறுதிப்படுத்தும்வண்ணம் பிக்ஸல் 3a-வை கடந்த மாதம் வெளியிட்டது கூகுள். உயர்ரக பிக்ஸலின் அதே கேமரா, மற்ற சில விஷயங்கள் மட்டும் சில மாற்றங்கள், பாதி விலை என்பதுதான் பிக்ஸல் 3a-ன் சாராம்சம். சற்றே பிந்தைய புராசஸர், பிளாஸ்டிக் ஃபினிஷ் (Polycarbonate) எனப் பல இடங்களில் விட்டுக்கொடுக்கவேண்டுமென்றாலும் கூகுளின் சிறந்த கேமராவிற்காகவும், மென்பொருள் அனுபவத்திற்காகவும் அமெரிக்காவில் இதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. சொல்லப்போனால் மிட்-ரேஞ்ச் சந்தையில் யாரும் முயற்சிசெய்யாத ஃபார்முலாவில் களமிறங்கியிருக்கிறது கூகுள். இதன் வருகை அமெரிக்காவில் பிக்ஸல் விற்பனையை நன்றாக அதிகரிக்கும் என நம்பலாம். ஆனால் அதையே இங்கே இந்தியாவில் சொல்லமுடியாது.

இந்தியாவில் `செல்ஃப்' எடுக்காத கூகுள் பிக்ஸல் மொபைல்கள்... என்ன காரணம்?

உலகின் முக்கிய ஸ்மார்ட்போன் சந்தையாகப் பார்க்கப்படுவது இந்தியா. அமெரிக்காவில் இருக்கும் ஸ்மார்ட்போன் சந்தைக்கும் இந்தியாவில் இருக்கும் சந்தைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. அங்கு நம்பகமான பிராண்டா இல்லையா என்பது பெரும் பங்கு வகிக்கும். கூகுள் ஏற்கெனவே புகழ்பெற்ற கம்பெனி என்பதால் அங்கு சிக்கல்கள் குறைவு. இங்கு விலைதான் எல்லாம். குறைந்த விலையில் அதிக வசதிகள் கொடுக்கும் ஸ்மார்ட்போன்களே இங்கு விற்கும். பிராண்ட் இரண்டாம்பட்சம்தான். இதனால்தான் ஒன்ப்ளஸ் அமெரிக்காவைவிட இந்தியாவில் அதிகம் விற்கிறது. ஆனால் 'வேணும்னா வாங்கு, இல்லைனா வேணாம்' என்கிற அளவில்தான் கூகுள் இந்தியாவில் தனது விற்பனை முயற்சிகளை எடுத்துவருகின்றன. ஒப்பிட்டுப் பார்த்தால் அமெரிக்காவில் 399 டாலர்கள் என்பது பிக்ஸல் 3a-விற்கு நியாயமான விலைதான். ஆனால் இந்தியாவில் 39,999 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது பிக்ஸல் 3a. அதாவது 574 டாலர்கள். இது கிட்டத்தட்ட 43 சதவிகிதம் அதிகம். அதுதான் மிகப்பெரிய பிரச்னை. இந்திய கேட்ஜெட் விமர்கசர்கள் மொபைலைப் பாராட்டினாலும் `வாங்குங்கள்' எனப் பரிந்துரைக்க முடியாமல் போனதுக்கு இதுவே காரணம். நமது சந்தையில் ஏற்கெனவே போட்டி அதிகம். இதே விலையில் ஒன்ப்ளஸ் 7 ஒன்றும், புல்லெட்ஸ் 2.0 வயர்லெஸ் இயர்போன்ஸ் ஒன்றும் வாங்கிவிட்டுப் போய்விடலாம். 

மொத்த மொபைலையுமே இறக்குமதி செய்வதுதான் இதற்குக் காரணம். ஆனால், மொபைல் வாங்குபவர்கள் காரணங்களை கேட்கப்போவதில்லை. கொடுக்கும் விலைக்கு மொபைல் worth-தா? என்றுதான் யோசிப்பார்கள். அமேசானின் குளோபல் தளத்தில் நீங்களே ஆர்டர் செய்து இறக்குமதி செய்தால் போக்குவரத்து தொகை மற்றும் இறக்குமதி வரியுடன் சுமார் 45,000 ரூபாய் வரும். மொத்தமாக இறக்குமதி செய்வதால் இதைவிட சற்றே குறைவான விலையில் இங்கு விற்கப்படுகிறது அவ்வளவே.

இந்தியாவில் `செல்ஃப்' எடுக்காத கூகுள் பிக்ஸல் மொபைல்கள்... என்ன காரணம்?

இப்படிதான் 71,000 ரூபாயில் வெளிவந்தது முந்தைய பிக்ஸல் 3. பெரிய விற்பனை இல்லை என்பதால் அப்படியே படிப்படியாகக் குறைந்து இப்போது சலுகையுடன் 52,499 ரூபாயில் விற்பனையாகிக்கொண்டிருக்கிறது. உண்மையில் உலக ஸ்மார்ட்போன் சந்தையைப் பிடிக்க கூகுளுக்கு ஆர்வம் இருந்தால் அதற்கு இந்தியாதான் முக்கியக் களம். விலைதான் இந்தியச் சந்தையைத் தீர்மானிக்கிறது என்பதை கூகுள் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.