Published:Updated:

'வாட்ஸ்அப், ஃபேஸ்புக் செயல்படாவிட்டால் பணத்தை திருப்பித் தருவோம்'...வாவேவின் ஸ்பெஷல் ஆஃபர்

'வாட்ஸ்அப், ஃபேஸ்புக் செயல்படாவிட்டால் பணத்தை திருப்பித் தருவோம்'...வாவேவின் ஸ்பெஷல் ஆஃபர்
News

அமெரிக்காவின் நடவடிக்கையால், சீனாவைச் சேர்ந்த வாவே நிறுவனம் பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. நிலைமையைச் சமாளிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. ஆண்ட்ராய்டு இயங்குதளம் மட்டுமின்றி ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் எனப் பல்வேறு பிரபல ஆப்களும் அமெரிக்க நிறுவனங்களின் கையில்தான் இருக்கின்றன. எனவே, இந்த ஆப்கள் கூடிய விரைவில் வாவே போன்களில் செயல்படாமல் போகலாம் என்ற தகவல் பரவிவருகிறது. இதுபோன்ற காரணங்களால், அந்நிறுவனத்தின் மொபைல்களை வாங்குவதற்குப் பலரும் தயக்கம்காட்டிவருகின்றனர். எனவே, வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க தன்னால் முடிந்த அளவுக்கு முயற்சிசெய்துவருகிறது வாவே நிறுவனம். அதன் ஒரு பகுதியாக, பிலிப்பைன்ஸில் ஸ்பெஷல் வாரன்டி திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

'வாட்ஸ்அப், ஃபேஸ்புக் செயல்படாவிட்டால் பணத்தை திருப்பித் தருவோம்'...வாவேவின் ஸ்பெஷல் ஆஃபர்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அங்கே இருக்கும் 30-க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள், இந்தத் திட்டத்தின் கீழ் மொபைல்களை விற்பனைசெய்ய முடிவு செய்திருக்கிறார்கள். இதன் மூலமாக, வாவே ஸ்மார்ட்போன்களை வாங்குபவர்களுக்கு கூகுளின் சேவைகள் மட்டுமின்றி ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆப்கள் செயல்படாமல் போனால், மொபைலுக்கான முழுப் பணமும் திருப்பிக் கொடுக்கப்படும். இதன் மூலமாக வாடிக்கையாளர்களுக்குத் தனது தயாரிப்புகளின்மீது நம்பிக்கை ஏற்படுத்த முடியும் என நினைக்கிறது வாவே. இந்தத் திட்டத்துக்கு வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில், மற்ற நாடுகளிலும் இதைச் செயல்படுத்த அந்நிறுவனம் முயற்சி செய்யலாம்