Election bannerElection banner
Published:Updated:

`120 வாட்ஸ்... 13 நிமிடத்தில் ஃபுல் சார்ஜ்' - ஃபாஸ்ட் சார்ஜிங்கை அறிமுகப்படுத்தும் விவோ

மொபைலுக்கு சார்ஜ் ஏற்றும் நேரம் என்பது நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. இப்போது அனைத்து மொபைல் நிறுவனங்களுமே ஃபாஸ்ட் சார்ஜிங் என்ற விஷயத்தை அவசியமான ஒன்றாகப் பார்க்கின்றன. அதைப் போன்களில் இருக்கும் முக்கியமான வசதியாகவும் குறிப்பிடவும் செய்கின்றன. இப்போது மொபைல்களில் குறைந்தபட்சம் 4000 mAh பேட்டரி கொடுக்கப்படுகிறது. சாதாரண சார்ஜரை வைத்து சார்ஜ் ஏற்றும்போது ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆகும். ஃபாஸ்ட் சார்ஜிங் மூலமாக அந்த நேரத்தை வெகுவாக குறைக்க முடிகிறது. கடந்த மார்ச் மாதம் ஷியோமி 100W சூப்பர் சார்ஜ் டர்போ என்ற தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்திருந்தது.

`120 வாட்ஸ்... 13 நிமிடத்தில் ஃபுல் சார்ஜ்' - ஃபாஸ்ட் சார்ஜிங்கை அறிமுகப்படுத்தும் விவோ

அதன் மூலமாக ஒரு மொபைலை வெறும் 17 நிமிடங்களில் முழுவதுமாக சார்ஜ் செய்துகொள்ள முடியும் எனத் தெரிவித்திருந்தது. தற்போது விவோ நிறுவனம் அதை மிஞ்சியிருக்கிறது. 120W சூப்பர் ஃபிளாஷ் ஃபாஸ்ட் சார்ஜிங் என்ற தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறது. இதன் மூலமாக 4000 mAh பேட்டரியை வெறும் 13 நிமிடத்தில் ஃபுல் சார்ஜ் செய்துகொள்ள முடியும். வரும் 26-ம் தேதி விவோ நிறுவனம் 5G போனை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது. அப்போது இந்த தொழில்நுட்பமும் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Vikatan
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு