
ஷியோமி நிறுவனம் அதன் பிரபலமான ரெட்மி நோட் சீரிஸ் போலச் சற்று அதிகமான விலையில் Mi Note என்ற சீரிஸில் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வந்தது. அதைத் தவிரப் பெரிய டிஸ்ப்ளே மற்றும் பெரிய பேட்டரி தேவைப்படுபவர்களுக்கு Mi Max என்ற சீரிஸிலும் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வந்தது. இவை இரண்டுமே ஓரளவுக்கு விற்பனையாகி வந்தன. Mi Max மற்றும் Mi Note 3 ஆகியவையே இறுதியாக வெளியாகியிருந்தன. இந்த வருடம் அதன் தொடர்ச்சியாக மொபைல்கள் வெளியாவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படாமல் இருந்தது. எனவே அவற்றை ஷியோமி நிறுவனம் நிறுத்தப் போவதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அது தற்போது ஷியோமியின் இணை நிறுவனர் லீ ஜுன் கொடுத்த தகவலால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சீன சமூக வலைதள நிறுவனமான வெய்போவில் அதை அவர் தெரிவித்திருக்கிறார். இந்த வருடம் அந்த இரண்டு சீரிஸ்களிலும் மொபைல்களை வெளியிடும் திட்டம் எதுவும் இல்லை என்பதைத் தெரிவித்திருக்கிறார். மேலும் இனிமேல் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ள மொபைல்கள் பட்டியலில் ``Mi Note மற்றும் Mi Max ஆகியவை இடம்பெறவில்லை. எனவே அந்த சீரிஸ்களில் இனி போன்கள் வெளியாகாது என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலாக வேறு சீரிஸ்களில் ஷியோமி நிறுவனம் கவனம் செலுத்தவுள்ளது.