
ஷியோமி நிறுவனம் மொபைல்களுக்கு மட்டுமல்ல; அனைத்துவிதமான கேட்ஜெட்களுக்கும் பெயர்பெற்றது. ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் பல்பு என வரிசையாகப் பல பொருள்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்திய ஷியோமி இப்போது தந்திருப்பது ட்ரிம்மர்கள்.
பொதுவாக, ஆன்லைனில் வாங்கப்படும் ட்ரிம்மர்கள் பெரும்பாலானோருக்கு திருப்தியைத் தருவதில்லை. மற்ற எந்தப் பொருளையும்விட ட்ரிம்மர்கள் பற்றித்தான் அதிக அதிருப்தி தெரிவித்திருப்பார்கள் வாடிக்கையாளர்கள். பிலிப்ஸ் போன்ற வெகு சில பிராண்டுகளே இந்த ஏரியாவில் நற்பெயர் பெற்றிருக்கின்றன. இப்போது ஷியோமி அதற்காகக் களம் கண்டிருக்கிறது.
1199 ரூபாய் விலைகொண்ட இந்த Mi Beard Trimmer நாளை முதல் ஷாப்பிங் தளங்களில் விற்பனைக்கு வருகிறது. இன்றே ஷியோமி தளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம். பேட்டரிதான் இந்த ட்ரிம்மரின் ட்ரம்ப் கார்டு. 5 நிமிடம் சார்ஜ் செய்தால் 10 நிமிடம் பயன்படுத்தலாம். முழு சார்ஜ் ஏறினால் 90 நிமிடங்கள் வரை இந்த ட்ரிம்மரைப் பயன்படுத்தலாம். ஹைலைட் ஆன விஷயம் என்னவென்றால் இந்த ட்ரிம்மரை பவர் பேங்க் மூலமாகவும் சார்ஜ் செய்துகொள்ளலாம். அதனால், பயணம் செய்பவர்கள் பவர் பாயின்ட்டைத் தேடி ஓட வேண்டிய அவசியமில்லை.
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ப்ளேடுகள் கொண்ட இந்த ட்ரிம்மரில் 40 விதமான நீளங்களில் ட்ரிம் செய்ய செட் செய்துகொள்ளலாம். கையிலிருந்து எளிதில் நழுவிடாத க்ரிப்பும் இதிலுண்டு.IPX7 சான்றிதழ் பெற்றிருப்பதால் இதை நீரில் அப்படியே கழுவிடலாம். எந்தப் பிரச்னையும் வராது என்கிறது ஷியோமி.
மொபைலுக்குத் தந்த வரவேற்பை இதற்கும் இந்திய வாடிக்கையாளர்கள் கொடுப்பார்களா என்பது போகப் போகத்தான் தெரியும். ஷியோமி தயாரிப்புகள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கமென்ட் பாக்ஸீல் சொல்லுங்கள்.