Published:Updated:

ஏ சீரிஸில் புதிய ஸ்மார்ட்போனை வெளியிடும் ஷியோமி - என்ன ஸ்பெஷல்?

மு.ராஜேஷ்
ஏ சீரிஸில் புதிய ஸ்மார்ட்போனை வெளியிடும் ஷியோமி - என்ன ஸ்பெஷல்?
ஏ சீரிஸில் புதிய ஸ்மார்ட்போனை வெளியிடும் ஷியோமி - என்ன ஸ்பெஷல்?
ஏ சீரிஸில் புதிய ஸ்மார்ட்போனை வெளியிடும் ஷியோமி - என்ன ஸ்பெஷல்?

பட்ஜெட் செக்மென்ட்டில் அடுத்ததாக ஒரு புதிய ஸ்மார்ட்போனை வெளியிட முடிவு செய்துள்ளது ஷியோமி நிறுவனம். தற்போது Redmi 6A என்ற ஸ்மார்ட்போன் 5,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறைவான விலையில் சிறந்த வசதிகளைத் தருவதால் ரெட்மியின் 'A' சீரிஸ் மொபைல்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றன. இதுவரை வெளியான ரெட்மி 4A, 5A, மற்றும் 6A என மூன்று சீரிஸிலும் சேர்த்து மொத்தம் 23.6 மில்லியன் மொபைல்கள் விற்பனையாகியிருக்கின்றன. இது ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையைவிடவும் அதிகமானது என அண்மையில் தெரிவித்திருந்தார் ஷியோமி இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மனு குமார் ஜெயின்.

ஏ சீரிஸில் புதிய ஸ்மார்ட்போனை வெளியிடும் ஷியோமி - என்ன ஸ்பெஷல்?

இப்போது அந்த சீரிஸில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது ஷியோமி. Redmi 7A எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் வரும் 4-ம் தேதி வெளியாகவுள்ளது. ஏறகெனவே சீனாவில் கடந்த மாதம் வெளியான இந்த மொபைல் இந்தியாவில் வெளியாகும்போது கூடுதல் அப்டேட்களுடன் வெளியாகும் எனவும் மனு குமார் ஜெயின் தெரிவித்திருந்தார். மேலும் ரூபாய் 20,000 கீழ் எந்த மொபைலும் தர முடியாத ஒரு வசதி Redmi 7A ஸ்மார்ட்போனில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.