Published:Updated:

விலை 1.65 லட்சம்.. விற்றுத்தீர ஆனது இத்தனை நிமிடங்கள்தான்.. `கேலக்ஸி ஃபோல்ட்' மாஸ் என்ட்ரி!

Samsung Galaxy Fold

முதல்முறை விமர்சகர்களுக்கு அனுப்பும்போது வடிவமைப்பில் சில கோளாறுகள் இருந்ததால் அவற்றை சரிசெய்து தாமதமாகவே இதற்கான முன்பதிவுகளை தொடங்கியிருக்கிறது சாம்சங்!

Published:Updated:

விலை 1.65 லட்சம்.. விற்றுத்தீர ஆனது இத்தனை நிமிடங்கள்தான்.. `கேலக்ஸி ஃபோல்ட்' மாஸ் என்ட்ரி!

முதல்முறை விமர்சகர்களுக்கு அனுப்பும்போது வடிவமைப்பில் சில கோளாறுகள் இருந்ததால் அவற்றை சரிசெய்து தாமதமாகவே இதற்கான முன்பதிவுகளை தொடங்கியிருக்கிறது சாம்சங்!

Samsung Galaxy Fold

சாம்சங்கின் புதிய முயற்சியாக முதல் மடங்கும் போனை அறிமுகப்படுத்தியிருந்தது. அதுதான் கேலக்ஸி ஃபோல்ட். இந்த மொபைல் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. அக்டோபர் 4-ம் தேதி, சாம்சங்கின் இணையதளத்தில் இதற்கான முதல்கட்ட முன்பதிவுகள் தொடங்கின. இந்த மொபைலை வாங்கப் பலரும் காத்திருக்கின்றனர் போல, தொடங்கி 30 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்திருக்கிறது இந்த போன்.

கேலக்ஸி ஃபோல்ட்
கேலக்ஸி ஃபோல்ட்

1,600 போன்கள்தான் முன்பதிவுக்கு வந்தன என்றாலும் இப்படி விற்றுவிடும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. காரணம் இதன் விலை. ஆம், கேலக்ஸி ஃபோல்ட்டின் விலை ரூபாய் 1.65 லட்சம்! இந்த மொபைல் வரும் 20-ம் தேதி முன்பதிவு செய்தவர்களின் கைகளுக்கு வந்துசேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் இந்தப் புதிய போனின் வாடிக்கையாளர்களுக்குப் பல சிறப்புச் சேவைகளையும் வழங்கவிருக்கிறது. ஒரு வருடத்துக்கு ‘ஆக்சிடென்டல் டேமேஜ் புரொடெக்ஷன்’(Accidental Damage Protection) அளிக்கிறது. இதில் ஒரு தடவை போனின் டிஸ்ப்ளேவை இலவசமாக மாற்றிக்கொள்ளலாம். இந்தச் சலுகை இந்தியாவில் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதெல்லாம் போக வாடிக்கையாளர்களுக்கு 24 மணி நேரமும் சிறந்த வாடிக்கையாளர் சேவை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங்கின் இந்தப் புதிய முயற்சி எந்த அளவுக்குச் சிறப்பாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதன் அடுத்தகட்ட முன்பதிவு அக்டோபர் 11 தொடங்கும்.