Published:Updated:

ஒன்பிளஸ் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் விலை வெறும் 99 ரூபாய் மட்டுமே!

ஒன்பிளஸ் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் விலை வெறும் 99 ரூபாய் மட்டுமே!
ஒன்பிளஸ் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் விலை வெறும் 99 ரூபாய் மட்டுமே!

OnePlus நிறுவனத்தின் 2-வது ஸ்மார்ட்ஃபோன் OnePlus2 ஜூலை 27-ம் தேதி விற்பனைக்கு இருக்கிறது. இந்த ஃபோனின் அறிமுக விழா முற்றிலும் விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் நிகழ இருக்கிறது. எனவே, ஒன்பிளஸ் விர்ச்சுவல் ரியாலிட்டி கார்ட்போர்டு ஹெட்செட் மூலம் நாமும்

OnePlus2 ஸ்மார்ட்ஃபோன் அறிமுக விழாவை நேரில் இருப்பதுபோலவே கண்டு ரசிக்கலாம்.

ஒன்பிளஸ் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் விலை வெறும் 99 ரூபாய் மட்டுமே!

இந்த பிரத்யேக கார்ட்போர்டு ஹெட்செட் வெறும் 99 ரூபாய்க்கு(ஷிப்பிங் கட்டணம் சேர்க்காமல்) அமேசான் இந்தியா வலைதளத்தில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. பார்ப்பதற்கு கூகுள் கார்ட்போர்டு மாதிரியே இருந்தாலும், அதைவிட 20 சதவிகிதம் குறைவான சைஸ் கொண்டிருக்கிறது. 6 இன்ச் அளவு ஃபோன்களில் இந்த கார்ட்போர்டு ஹெட்செட் பொருந்தும்.

OnePlus2 ஸ்மார்ட்ஃபோனில் யுஎஸ்பி டைப்-சி கனெக்டிவிட்டி இருக்கும். மேலும் Qualcomm Snapdragon 810 பிராசஸர் கொண்டிருக்கும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!

ர. ராஜா ராமமூர்த்தி