Published:Updated:

அசத்தும் ஐந்து ஃபிட்னஸ் கேட்ஜெட்ஸ்! #Gadgets

அசத்தும் ஐந்து ஃபிட்னஸ் கேட்ஜெட்ஸ்! #Gadgets
அசத்தும் ஐந்து ஃபிட்னஸ் கேட்ஜெட்ஸ்! #Gadgets

அசத்தும் ஐந்து ஃபிட்னஸ் கேட்ஜெட்ஸ்! #Gadgets

1. பயணத்தின் போது குமட்டலைத் தவிர்க்க

யணம் போகும்போது, குமட்டலோ, வாமிட்டிங்கோ வரும் என்று பயம் உள்ளவரா நீங்கள்? இதோ.. உங்களுக்கானதுதான் இந்த Relief Band. உடன் இருக்கும் ‘ஜெல்’லைத் லைட்டாக கை மணிக்கட்டு நரம்பில் தடவிக்கொண்டு அதன் மேல் இந்த வாட்ச் போன்ற Relief Bandஐ மாட்டிக் கொள்ள வேண்டும். உடலின் மாற்றத்தை, நரம்புகளின் இரத்த ஓட்டத்தை வைத்து கவனித்துக் கொண்டே வந்து குமட்டல் வராமல் இரத்த ஓட்டத்தைத் தூண்டி சீராக்குகிறது இந்த ஸ்மார்ட் கேட்ஜெட்.

2. அடடே ஸ்மார்ட் பாண்ட்

இது, இப்போது பலரும் உபயோகிக்கத் தொடங்கியிருக்கும் ஆக்டிவிடி ட்ராக்கர்தான். உங்கள் நடை, ஓட்டம் உறக்கம் எல்லாவற்றையும் பதிவு செய்து கொள்ளும் இந்தக் குறிப்பிட்ட Misfit நிறுவனத்தின் தயாரிப்பின், இரண்டு ஸ்பெஷாலிட்டிகள் என்ன வென்றால், ஒன்று. இது தண்ணீருக்குள்ளும் செயல்படும். இரண்டு... கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் வரை சார்ஜ் நிற்குமாம். அடடே!

3. 'நண்பேன்டா' ரோபோ 

ஆல்ஃபா 2. மனித உருக்கொண்ட ரோபோ. உங்கள் குட்டீஸ்க்கு கதை சொல்லும், லைட் அணைக்கும். ‘இந்த ஆப் வேணுமே’ என்றால் உங்கள் ஃபோனில் டவுன்லோட் செய்து தரும். மெய்ல் படிக்கும், என்னை ஃபோட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் போடு என்பது வரை எதையும் செய்யும் இந்த ரோபோ. இதன் ஸ்பெஷாலிட்டியே உங்களுக்கு யோகா சொல்லித் தரும், குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரை சாப்பிட ஞாபகப்படுத்தும் போன்று உடல்நிலையைப் பார்த்துக் கொள்வதுதான்.

4. 'வாவ்' வாட்டர் பாட்டில்!

அடிக்கற வெயிலுக்கு தண்ணி குடிக்கவே மறக்கிற ஆளா நீங்கள்? இந்த ஜீனோ கப் (Gyenno உப்) நிச்சயம் வேண்டும் உங்களுக்கு. என்ன தட்பவெப்ப நிலையில் தண்ணீர் இருக்கிறது.. அடுத்து எப்போது நீங்கள் குடிக்க வேண்டும் என்று டிஸ்ப்ளே சொல்லிக் கொண்டே இருப்பதால் நிச்சயம் மறக்க மாட்டீர்கள்.

5 'ஆல் இன் ஆல்' அழகுராஜா!

எத்தனைய வாங்கறது என்று சங்கடப்படுவீர்களானால், இதோ, Under Armour வழங்கும் UA ஹெல்த் பாக்ஸ்தான் உங்கள் சாய்ஸ். ஸ்மார்ட் பாண்ட், ஹார்ட் ரேட் மானிட்டர், வயர்லெஸ் ஹெட் ஃபோன், ஓடும் போது எத்தனை அடி இடைவெளியில் ஓடுகிறீர்கள் என்பதெல்லாம் கணிக்க ஷூ, எடை பார்க்கும் ஸ்கேல் உட்பட பலதும் அடங்கியது இது. இதை வாங்கி, அந்த ஆப்-பையும் இன்ஸ்டால் செய்து கொண்டீர்களானால் நாயர் கடை வடையில் கை வைத்தால்,  ‘மதியம் கொஞ்சம் அதிக கலோரி சாப்டுட்ட கண்ணா.. வடையைத் தொட்ட.. அடிவிழும்’ என்று உங்கள் உணவுப் பழக்கத்தையும் அது கண்காணித்து அறிவுறுத்தும்.

- ’பரிசல்’ கிருஷ்ணா

அடுத்த கட்டுரைக்கு