Published:Updated:

எல்லா ஐபிஎல் டீமுக்கும் பிடித்த டாப் 5 கேட்ஜெட்ஸ் ஸ்டார்ஸ்!

எல்லா ஐபிஎல் டீமுக்கும் பிடித்த டாப் 5 கேட்ஜெட்ஸ் ஸ்டார்ஸ்!
எல்லா ஐபிஎல் டீமுக்கும் பிடித்த டாப் 5 கேட்ஜெட்ஸ் ஸ்டார்ஸ்!

எல்லா ஐபிஎல் டீமுக்கும் பிடித்த டாப் 5 கேட்ஜெட்ஸ் ஸ்டார்ஸ்!

பிடித்த வீரர், பிடித்த அணி, பிடித்த சியர் கேர்ள் (அவ்வ்...) என்பதை எல்லாம் கடந்து, டெக்னிக்கலாக ஏதாவது ஒரு வகையில் ஐபிஎல் ஒவ்வொரு முறையும் நம்மை ஆச்சர்யப்படுத்தும். அப்படி நம்மை ‘வாவ்’ போட வைத்த டாப் 5 டெக்னிக்கல் விஷயங்கள் இங்கே...

அம்பயர் கார்டு

எல்லா ஐபிஎல் டீமுக்கும் பிடித்த டாப் 5 கேட்ஜெட்ஸ் ஸ்டார்ஸ்!

இந்த ஐபிஎல்லில் வீரர்கள் நுழைவுக்குப் பின் பலரும் பார்ப்பது ஆஸ்திரேலிய அம்பயர் ப்ரூஸ் ஆக்சன் ஃபோர்டைதான். தனது இடது கையில் ப்ரூஸ் வைத்து இருக்கும் கண்ணாடி தடுப்புதான் இந்த ஆண்டு டாப் வைரல். கண்ணாடியால் செய்யப்பட்ட டென்னிஸ் பேட் போல் இருக்கும் இதை, ப்ரூஸ் மட்டும்தான் பயன்படுத்தி வருகிறார். டி20 உலக கோப்பையின் போது, ப்ரூஸ் இதை பயன்படுத்தினார்.  பவுலர்கள், பேட்ஸ்மென் போன்றவர்களின் பாதுகாப்பில் கவனமாய் இருக்கும் ஐசிசி, அம்பயர்கள் பற்றி பெரிதும் கண்டுகொள்வதில்லை. ப்ரூஸின் இந்த ஐடியாவை எல்லா அம்பயர்களும் பின்பற்றவேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள்.

ஸ்பைடர் கேம்

எல்லா ஐபிஎல் டீமுக்கும் பிடித்த டாப் 5 கேட்ஜெட்ஸ் ஸ்டார்ஸ்!

“என்னை ஃபீல்டிங் செய்ய விடாமல் அடிக்கடி குறுக்கே வருகிறது” என ஒருமுறை புகார் செய்தார் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர். அவர் திட்டியது சகவீரரை அல்ல, மைதானத்தில் சுற்றிக்கொண்டிருந்த ஸ்பைடர் கேமராவைத்தான். மைதானத்தின் நான்கு மூலைகளிலும் இருக்கும் கயிற்றைக்கொண்டு இந்த கேமராவை இணைத்திருக்கிறார்கள். வலையின் நடுவே இருக்கும் சிலந்தி போல், அட்டகாசமாய் அமர்ந்து இருக்கிறது இந்த கேமரா. ஜூம், டில்ட், பேன், ஃபோக்கஸ் என பலவற்றையும் ஒரு மனிதர், ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு  பயன்படுத்தலாம். நிஜ ஆல்ரவுண்டர் இந்த ஸ்பைடர் கேம் தான்.

அம்பயர் கேம்

எல்லா ஐபிஎல் டீமுக்கும் பிடித்த டாப் 5 கேட்ஜெட்ஸ் ஸ்டார்ஸ்!

’ தொப்பி தொப்பி தொப்பி ‘ என்பது போல், அம்பயர் தொப்பியிலும் கடந்த ஆண்டிலிருந்து கேமரா வைத்துவிட்டார்கள். தொப்பியில் இருக்கும் சிறு கேமரா, அதற்கு சார்ஜ் ஏற்ற பின் தலையில் இருக்கும் சிறு பேட்டரி, அவ்வளவுதான் மொத்த செட்டப். திரையில் பார்க்கும் நமக்கு,  பந்து பவுலர் கையில் இருந்து வெளியேறி, பந்து செல்வது போல் தெரியும். ஆனால், பேட்ஸ்மென் அம்பயர் நோக்கி அடிக்கும் ஷாட்கள் தான் தெறி லெவல். கிரிக்கெட்டை ஆக்‌ஷன் படமாகவும், சில சமயம் பேய் படமாகவும் மாற்றுகிறது அம்பயர் கேம்.

ஜிங் விக்கெட் சிஸ்டம்

எல்லா ஐபிஎல் டீமுக்கும் பிடித்த டாப் 5 கேட்ஜெட்ஸ் ஸ்டார்ஸ்!

இதுக்கா இந்த பேரு?ன்னு நீங்க யோசிக்கலாம். ஃப்ளாஷ் லைட் வச்ச ஸ்டம்புக்களுக்குதான் இந்தப் பெயர் வைத்து இருக்கிறார்கள். ஸ்டம்பிங், ரன் அவுட் சமயங்களில் எல்லாம்  அம்பயர்களுக்கு தெய்வமாய் வந்து இருக்கிறது இந்த ஃப்ளாஷ் லைட் ஸ்டம்புகள்.  தோனி ஒருமுறை ஜெயித்தவுடன், ஸ்டம்புகளை எடுக்க செல்ல, பதறியடித்துக் கொண்டு வந்துவிட்டனர். ஒரு போட்டிக்கு தேவைப்படும் பைல்களுக்கும், ஸ்டம்புகளுக்கு மட்டும் 25 லட்ச ரூபாய் ஆகிறதாம். ஸ்டம்ப்பை உடைப்பதில் தென்னாப்பிரிக்காவின் லான்ஸ் க்ளூஸனர் புகழ்பெற்றவர். அவர் காலத்தில் ஜிங் விக்கெட் சிஸ்டம் இல்லாதது நல்லதுதான்.

பிளேயர் கமென்ட்ரி

ஹர்ஷே போக்லேவின் இனிய  குரலையும், நவ்ஜத்  சித்துவின் அலறல்களையும் மட்டுமே வர்ணனையாக கேட்டுக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு வீரர்களே பேசுவது புதுசுதான். லாங்க்-ஆன் ஃபீல்டிங்ல் இருக்கும் வீரர்கள், ஸ்லிப்பில் இருப்பவர்கள் போன்றவர்களிடம் ஹெட்-மைக் ஒன்றை வைத்து போட்டியின் போது பேச வைத்தார்கள். கடந்த ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் ஆல் ஸ்டார்ஸில், பேட்டிங் செய்யும் வீரர்களையும் வர்ணனை செய்ய சொல்ல, இந்தியாவின் முன்னாள் வீரர் சேவக் , பாட்டு பாடிக்கொண்டே சிக்ஸ் அடித்தது வைரல்.

அடுத்த கட்டுரைக்கு