Published:Updated:

888 ரூபாய்க்கு Docoss X1 - நம்பலாமா வேண்டாமா?

888 ரூபாய்க்கு Docoss X1 - நம்பலாமா வேண்டாமா?
888 ரூபாய்க்கு Docoss X1 - நம்பலாமா வேண்டாமா?

888 ரூபாய்க்கு Docoss X1 - நம்பலாமா வேண்டாமா?

888 ரூபாய்க்கு Docoss X1 - நம்பலாமா வேண்டாமா?
சில வாரங்களுக்கு முன்  '251 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன்' என்ற அறிவிப்பால் பற்றிய நெருப்பு தணிந்திருக்கும் வேளையில், தற்போது '888 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன்' என்ற அறிவிப்பை வெளியிட்டு புதுசாக குபீர் கிளப்பியிருக்கிறது Docoss என்ற நிறுவனம்.
அப்படியென்ன இருக்கிறது அந்த மொபைலில்? இந்த விலைக்கு ஸ்மார்ட்போன் சாத்தியமா என டெக் நிபுணர்கள் ஒரு பக்கம் மண்டை காய்ந்து வரும் அதே வேளையில், சந்திரமுகி வடிவேலு பாணியில்,  'அப்படி ஒரு போன் இருக்கா...? பாத்துருக்காய்ங்களா...பாக்கலையா?' என குழம்பி வருகிறான் ஆன்லைன் தமிழன். அந்த குழப்பத்தில் லைட்டாய் லைட்டடித்து தெளிய வைக்கவே இந்தக் கட்டுரை...
என்ன இருக்கிறது அந்த ஸ்மார்ட்போனில்?
இந்த X1 ஸ்மார்ட்போனில் 4 இன்ச் டிஸ்பிளே, ஒரு ஜி.பி ரேம், டூயல் கோர் பிராசஸர், ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட் ஓ.எஸ், 4 ஜி.பி இன்டர்னல் மெமரி, 2 மெகாபிக்சல் பின்கேமரா, 0.3 மெகாபிக்சல் முன்கேமரா, 1300 mAh பேட்டரி - இதுதான் அந்த மொபைல் ஸ்பெஷிபிகேஷன்ஸ். விலை 888 ரூபாய். அதுபோக டெலிவரி கட்டணம் தனி. இந்த மொபைலை நீங்கள் அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில்லோ அல்லது குறிப்பிட்ட எண்ணுக்கு உங்கள் விவரங்களை அனுப்பியோ ஆர்டர் செய்யலாம் என அறிவித்தது அந்த நிறுவனம். இந்த அறிவிப்பை தொடர்ந்து ஆர்டர்கள் குவிய, தற்போது புக்கிங் முடிந்துவிட்டதாக அறிவித்திருக்கிறது.
ஏன் சந்தேகம்?
* டெக் உலகில் இதுவரை கேள்விப்பட்டிராத பெயர் Docoss. ஜெய்ப்பூரைச் சேர்ந்த நிறுவனம், இதுதான் அவர்களின் முதல் ஸ்மார்ட்போன் மாடல் என்பதைத் தவிர்த்து வேறு எந்த விவரங்களும் அந்த தளத்தில் இல்லை. அந்த நிறுவனத்தின் கஸ்டமர் கேர் எண்ணும் எப்போதும் பிஸியாகவே இருக்கிறது. இதுதான் வாடிக்கையாளர்களின் சந்தேகத்திற்கான முதல் காரணம். 
* சில நாட்களுக்கு முன் Freedom 251 அறிவிப்பு வந்தபோது அந்த விலையில் ஸ்மார்ட்போன் வழங்க சாத்தியமே இல்லை என அடித்துச் சொன்னது இந்திய செல்லுலார் அசோஷியேசன் (ICA). எல்லா பொருட்களுக்கும் BoM(Bill of Materials) என்ற அளவீடு உண்டு. ஒரு பொருளை தயாரிக்க ஆகும் செலவுதான் இந்த BoM. மூலப்பொருட்களின் விலை, ஸ்மார்ட்போனோடு தரப்படும் அக்சஸரீஸ், விளம்பரச் செலவு, வரி ஆகிய அனைத்தும் சேர்ந்ததுதான் இந்த அளவீடு. இதன்படி ஒரு ஸ்மார்ட்போன் தயாரிக்க ஆகும் குறைந்தபட்ச செலவு 2600 ரூபாய். எல்லாமே மேட் இன் இந்தியா என்றாலுமே அதற்கு குறைந்து ஸ்மார்ட்போன் தயாரிக்க வாய்ப்பே இல்லை, எனவே இதுபோன்ற அறிவிப்புகளை நம்பாதீர்கள் என்பது ஐ.சி.ஏவின் வாதம்.
888 ரூபாய்க்கு Docoss X1 - நம்பலாமா வேண்டாமா?
* இந்த போனின் தரம் எந்த அளவிற்கு இருக்கும் என்பது சொல்வதற்கில்லை. அந்த நிறுவனம் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரே ஒரு டெமோ வீடியோவை வெளியிட்டதோடு சரி. வாரண்டி விவரங்கள், சர்வீஸ் சென்டர்கள் குறித்த விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தையே கடந்த மாதம்தான் தொடங்கியிருக்கிறார்கள். அவர்களிடம் நாடு தழுவிய சர்வீஸ் சென்டர்களை எதிர்ப்பார்ப்பது நியாயமில்லைதான். ஆக, கொடுக்கும் காசிற்கு தரமான பொருள் கிடைக்குமா என்பது சந்தேகமே.
* 888 ரூபாய்க்கு அந்த நிறுவனம் சொல்லும் ஸ்பெஷிபிகேஷன்ஸ் போதுமானதாக தோன்றினாலும் அவை எல்லாம் கொஞ்சம் அவுட்டேட்டட். மார்ஷ்மெல்லோ வந்துவிட்ட நேரத்தில் இன்னும் கிட்கேட் ஓ.எஸ் அளிப்பதாக சொல்கிறது அந்த நிறுவனம். வி.ஜி.ஏ கேமரா எல்லாம் வழக்கத்தை விட்டு ஒழியும் நிலையில் இருக்கும்போது, அந்த கேமராவை அளிப்பதாக சொல்கிறது. வாங்கிய பின், இதற்கெல்லாம் அப்டேட் அளிப்பார்களா என்பதும் சந்தேகமே.
* பிரபல ஆன்லைன் தளங்களில் புக் செய்த பின் இந்த தேதியில் இருந்து இந்தத் தேதிக்குள் டெலிவரி என தகவல் வரும். ஆனால் இந்த நிறுவனம் மே 2-ல் இருந்து டெலிவரி செய்யப்படும் என அறிவித்தாலும் குறிப்பிட்ட ஆர்டருக்கு என்று டெலிவரி செய்யப்படும் என்ற தகவல் அனுப்புவதில்லை. இதனால், இன்று வரும் நாளை வரும் என நீங்கள் காத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான். பாதி பேருக்கு புக் செய்த தகவல் கூட வரவில்லையாம். அந்த நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் புலம்பித் தள்ளியிருக்கிறார்கள்.
இத்தனை விஷயங்களையும் தாண்டி இளைஞர்கள் புக் செய்வது 'கேஷ் ஆன் டெலிவரி' ஆப்ஷன் இருப்பதால்தான். 'போன் வரட்டும்னு காத்திருக்கோம்' என்கிறார்கள் அவர்கள். நாங்களும்தான்...! 
- நித்திஷ்
அடுத்த கட்டுரைக்கு