Published:Updated:

’தடா’ வாங்கிய கேட்ஜெட்ஸ்

 ’தடா’ வாங்கிய கேட்ஜெட்ஸ்
’தடா’ வாங்கிய கேட்ஜெட்ஸ்

’தடா’ வாங்கிய கேட்ஜெட்ஸ்

ன்செப்ஷன், இன்டெர்ஸ்டெலார் படங்களின் நிஜ ஹீரோ இயக்குநர் நோலனிடம் மொபைல் ஃபோன், டேப்லட் போன்றதனங்களும் கிடையாது. இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், சனிக்கிழமை காலை வேளைகளில் தன் குழந்தைகள் கேட்ஜெட்ஸ் பயன்படுத்த தடை செய்து இருக்கிறார். இவையெல்லாம் தனி மனித தடைகள். ஒரு நாடே ஒரு சில கேட்ஜெட்களை தடை செய்த வரலாறு எல்லாம் இருக்கிறது.

 ’தடா’ வாங்கிய கேட்ஜெட்ஸ்

இங்கிலாந்தில் கூட்ட தடை

ஐரோப்பாவில் இருக்கும் ஒழுங்குமுறை ஆணையம், மின் நுகர்வு விழிப்புணர்வில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வரும் ஒன்று.1600 வாட் கிளீனருக்கு 8 யூரோக்கள் தான் ஆகின்றது, ஆனால் 2200 வாட் வாக்கம் கிளீனர்களுக்கு ஒரு ஆண்டிற்கு 27 யூரோ வரை மின்சாரம் செலவாகுமாம். அதனால், அதிக வாட்டில் இருக்கும் வாக்கம் கிளீனர்களை தடை செய்தது யுனைட்டட் கிங்டம். அதே போல், அதிக மின்சாரத்தை உறிஞ்சும் பிளாஸ்மா டிவிகளுக்கும் அங்கு தடா தான்

இஸ்ரேலும் ஐபேடும்

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிடம் ஐபேடை அலேக்காக கவ்வியது இஸ்ரேல் அரசு. ஹார்ட்லி டேவிட்சனைக் கண்ட சைக்கிள் ஓனர் இஸ்ரேல் மிரண்டதற்கு காரணம் இருக்கிறது. அதில் இருக்கும் ஒயர்லெஸ் சிக்னல்ஸ், வேறு கேட்ஜெட்ஸை பாதிக்கும் என அஞ்சியது நிஸ்ரேல் அரசு. இந்த அபூர்வ தடையைக் கடந்த ஏப்ரல் 2010-ம் ஆண்டு தளர்த்தியது அரசு.

 ’தடா’ வாங்கிய கேட்ஜெட்ஸ்

தொட்டுதொடரும் பிளாக்பெரி தடை

அதிக நாடுகளில் அடிக்கடி தடை செய்யப்படும் ஒரு கேட்ஜெட் என்றால் அது பிளாக்பெர்ரி மொபைல்கள் தான். பாதுகாப்பு விஷயங்களில் தன் வாடிக்கையாளர்களுக்கு காட்டும் பிளாக்பெர்ரி நிறுவனம், அது சார்ந்த அரசுகளுக்கு வழங்குவதில்லை. அவர்களிடம் எந்தக் கேள்விகளைக் கேட்டாலும், பிளாக்பெர்ரி நிறுவத்தின் பதில் , “ பார்க்கலாம், பார்க்கலாம் “ என்பது தான். பல நாடுகளில் இன்ஸ்டால்மென்ட்டில் தடை வாங்கும் பிளாக்பெர்ரி, இந்தியாவும் தடை செய்வேன் என பல ஆண்டுகளாக மிரட்டி வருகிறது .

புரட்சி சார், கூல்

க்யூபாவின் தலைவரான ஃபிடல் கேஸ்ட்ரோ அதிரடியாக மொபைல்களுக்கு தடை விதித்தார். அமெரிக்கா மாதிரியான தேசத்தில் இருந்து வரும் மொபைல்களை எல்லாம் விற்க வேண்டியதில்லை என்பது அவரது எண்னம்(சைனா மாடலாவது யூஸ் பண்ணலாமே பாஸ்) பின்னர் அவரது சகோதரர் ஆட்சிக்கு வர , தடையை தளர்த்தினார்

 ’தடா’ வாங்கிய கேட்ஜெட்ஸ்

லேஸர் பாய்ஸ் அட்ராசிட்டீஸ்

உலகம் முழுவதிலும் இருக்கும் விமான ஓட்டிகளின் முதல் எதிரி தீவிரவாத தாக்குதல், இரண்டாவது எதிரி லேசர் பாய்ஸ். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில், தற்போதெல்லாம் லேசர்கள் வேற லெவலில் வெளிவருகிறது. விமானங்கள் பறக்கும் போது, இவர்கள் லேசர் லைட்டை வைத்து விமானங்களை அட்டாக் செய்ய, பதறிப்போய் விமானங்களை தரை இறக்க ஆரம்பித்துவிடுகிறார்கள் ஓட்டிகள். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அரசு, லேஸர் பாயின்டர்கள் வைக்க தடை என்றும், மீறி வைத்து இருந்தாலும் அபாரதம் எனவும் அறிவித்தது. இருந்து லேஸர் பாய்ஸின் அட்ராசிட்டிகள் குறையவில்லை.

 ’தடா’ வாங்கிய கேட்ஜெட்ஸ்

இந்தியாவும் ஐ.எம்.இ.ஐ நம்பரும்

மேட் இன் சைனா மொபைல்கள் ஒரு காலத்தில் இந்தியாவிற்குள் கொட்டியது. அவற்றிற்கு முறையான ஐ.எம்.இ.ஐ  நம்பர் கூட இல்லாமல் இருந்தது. பொறுத்துப்பார்த்த மத்திய அரசு 45 நாட்கள் அவகாசம் தருகிறோம், எல்லா மொபைல்களுக்கும் ஐ.எம்.இ.ஐ நம்பர் வாங்குங்கள், இல்லையெனில் தடை செய்யப்படும் என அதிரடியாக அறிவித்தது.

அடுத்த கட்டுரைக்கு