Published:Updated:

'லைவ் வீடியோ’ செய்ய ஒரு ஸ்பெஷல் கண்ணாடி... ஃபேஸ்புக்கே மிரள்கிறதா? #SnapchatSpectacles

'லைவ் வீடியோ’ செய்ய ஒரு ஸ்பெஷல் கண்ணாடி... ஃபேஸ்புக்கே மிரள்கிறதா? #SnapchatSpectacles
'லைவ் வீடியோ’ செய்ய ஒரு ஸ்பெஷல் கண்ணாடி... ஃபேஸ்புக்கே மிரள்கிறதா? #SnapchatSpectacles

'லைவ் வீடியோ’ செய்ய ஒரு ஸ்பெஷல் கண்ணாடி... ஃபேஸ்புக்கே மிரள்கிறதா? #SnapchatSpectacles

'லைவ் வீடியோ’ செய்ய ஒரு ஸ்பெஷல் கண்ணாடி... ஃபேஸ்புக்கே மிரள்கிறதா? #SnapchatSpectacles

ஸ்னாப்சாட்... ஃபேஸ்புக்கிற்கு எதிர்காலத்தில் செம டஃப் பைட் கொடுக்க போகும், கொடுத்துக்கொண்டிருக்கும் முக்கியமான சோஷியல் மீடியா. இன்று சராசரியாக ஒரு நாளைக்கு ஸ்னாப்சாட்டில் இரண்டு பில்லியன் விடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. 2016-ம் ஆண்டு ஐரோப்பாவில் மட்டும் ஒரு கோடி பயன்பாட்டாளர்களை பெற்றது. தனது குறுகியகால வளர்ச்சியால் 2013-ம் ஆண்டின் சிறந்த மொபைல் அப்ளிகேஷனுக்கான கிரான்சீஸ் விருது உட்பட ஸ்னாப்சாட் பல விருதுகளைத் தட்டிச்சென்றுள்ளது. 2016 செப்டம்பர் மாதம் ஸ்னாப்சாட் இங்க் ஸ்னாப் இங்க் எனப்பெயர்மாற்றம் செய்யப்பட்டது. குழந்தைகளைக் கவர 2013-ம் ஆண்டு ஸ்னாப்கிட்ஸ் என்னும் குழந்தைகளின் டிஜிட்டல் புகைப்படங்களை ஓவியமாக வரையும் அப்ளிகேஷனை உருவாக்கினர். தற்போது தங்கள் நிறுவனத்தை வளர்க்கவும் பேஸ்புக், டுவிட்டர், வாட்சாப் உள்ளிட்ட போட்டி நிறுவனங்களின் தொழில் போட்டியை சமாளிக்கவும் தங்கள் சாஃப்ட்வேர் சர்விஸ்களுக்கு இணையாக ஹார்டுவேர் ஹயாரிப்பிலும் மும்முரம் காட்டிவருகிறது ஸ்னாப்சாட்.

சமீபத்தில் ஃபேஸ்புக், பேஸ்புக்லைவ் சேவையை அறிமுகப்படுத்தி, அதன் பயனாளர்களை நேரலையில் பேசவைத்து மகிழ்வித்தது. தற்போது போட்டி நிறுவனமான ஸ்னாப்சாட், அதற்கு இணையாகக் களமிறக்கியுள்ள வீடியோசேவை 'ஸ்னாப்சாட் ஸ்பெக்டகிள்ஸ்'. பேஸ்புக்லைவ் வீடியோ போலவே இருக்கும் இந்த வீடியோ சேவையில், ஸ்னாப்சாட்  பயனாளர்கள், வீடியோ பதிவுசெய்ய தங்களது ஸ்மார்ட்போன் ஃபிரண்ட்கேமராவைப் பயன்படுத்த வேண்டியதில்லை. வீடியோ எடுப்பதற்கென பிரத்தேயேகமாக ஒரு ஹார்டுவேர் டிவைஸைக் கண்டுபிடித்துள்ளது ஸ்னாப்சாட். ஸ்னாப்சாட் சமூக வலைத்தளம், தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஹார்டுவேர் டிவைஸ்களை அறிமுகப்படுத்தப் போவதாக நீண்டநாட்களாக பேச்சுஅடிபட்டுக் கொண்டிருந்தது.

'லைவ் வீடியோ’ செய்ய ஒரு ஸ்பெஷல் கண்ணாடி... ஃபேஸ்புக்கே மிரள்கிறதா? #SnapchatSpectacles

'ஸ்னாப்சாட் ஸ்பெக்டகிள்ஸ்' என்பது செல்பி வீடியோ பதிவுசெய்யும் கூலர்ஸ் கண்ணாடி. இந்தக் கண்ணாடி, மூன்று நிற ஃபிரேம்களில்  கிடைக்கிறது. ஸ்னாப்சாட் ஆன்லைன் சந்தையில் விற்கப்படுகிறது. இந்தக் கண்ணாடியை சாதாரண கூலர்ஸ் அணிவதுபோல அணிந்துகொள்ளலாம். இதன் இருபுறமும் வட்டவடிவான மினிகேமரா பொருத்தப்பட்டிருக்கும்.  இந்த வசதி மூலமாக, 360 டிகிரியில் எந்த கோணத்தில் வேண்டுமானாலும் வீடியோ பதிவு செய்யலாம். கண்ணாடிக்குள் உள்ள இந்தக் கேமராவை இயக்க, ஆன், ஆஃப் பட்டன்கள் அமைந்திருக்கும். கேமராவை ஆன் செய்ததும் இந்தக்கண்ணாடி வழியாகப்பார்க்கும் காட்சிகள், அதே கோணத்தில் கேமராவில் பதிவாகத்தொடங்கும். இந்த வீடியோ பதிவுசெய்யப்படும்போது, ஸ்மார்ட்போன் மொபைல்டேட்டா ஆன் செய்யப்பட்டு, அதில் ஸ்னாப்சாட் அப்ளிகேஷன் ஓபன் செய்யப்பட்டிருக்க வேண்டும். கண்ணாடி மற்றும் ஸ்மார்ட்போனை, வைஃபை தொடர்ப்பு எல்லைக்குட்பட்ட தூரத்துக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

'லைவ் வீடியோ’ செய்ய ஒரு ஸ்பெஷல் கண்ணாடி... ஃபேஸ்புக்கே மிரள்கிறதா? #SnapchatSpectacles

கண்ணாடியின் கேமரா வழியாகப் பதிவேற்றப்படும் காட்சிகள், வீடியோ நிறைவு பெற்றவுடன் ஸ்னாப்சாட்டில் தானாகப்  பதிவேற்றம் செய்யப்படும். அதிகபட்சமாக 30 வினாடிகள் வரை ஸ்னாப்சாட் ஸ்பெக்டகிள்ஸ் மூலமாக வீடியோ பதிவு செய்யலாம். வீடியோ பதிவு நிறைவடைந்ததை, பயனாளருக்குத் தெரிவிக்க, கண்ணாடியின் உள்ளே பொருத்தப்பட்டிருக்கும் எல்ஈடி, வெள்ளை வெளிச்சப்புள்ளியை உண்டாக்கும். அதற்கு இடையில், விடியோவை பதிவாவதை எந்நேரமும் நிறுத்த, ஸ்னாப்சாட் ஸ்பெக்டகிள்ஸில் உள்ள ஆஃப் பட்டனை அழுத்தவேண்டும். அந்த வீடியோ பதிவு, வீடியோ பைலாக ஸ்மார்போனில் சேவ் ஆகிவிடும். ஸ்னாப்சாட் ஸ்பெக்டகிள்ஸ் கேமரா, வட்டவடிவில் இருப்பதால் ஸ்மார்ட்போனில் இந்த வீடியோவை பிளே செய்யும்போது லாண்ட்ஸ்கேப், போர்ட்ரைட் ஆகிய இரு கோணங்களில் எப்படிப் பார்த்தாலும் ஒரேபோல்தான் காட்சியளிக்கும். ஸ்மார்ட்போன் ஸ்க்ரீன் திருப்பப்படும் கோணத்துக்கேற்ப, வீடியோ தானாக ஆட்டோரொட்டேட் செய்துகொள்வது இந்த விடீயோக்களின் பிரத்யேக அம்சம்.

'லைவ் வீடியோ’ செய்ய ஒரு ஸ்பெஷல் கண்ணாடி... ஃபேஸ்புக்கே மிரள்கிறதா? #SnapchatSpectacles

ஸ்னாப்சாட் ஸ்பெக்டகிள்ஸ் வீடியோ கேமராவை எளிதில் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். இந்த ஸ்னாப்சாட் ஸ்பெக்டகிள்ஸுடன் கொடுக்கப்படும் ஸ்பெக்டகிள்ஸ் கேசில், இந்த ஸ்பெக்டகிள்ஸ் மடக்கிவைத்ததும் அதன் உட்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் பின்னில் இணைந்து சார்ஜ் ஏறத்தொடங்கிவிடும். செல்ஃபி விடியோக்களின் அடுத்தகட்ட பரிணாமவளர்ச்சியாக ஸ்னாப்சாட் ஸ்பெக்டகிள்ஸ் வீடியோக்கள் கருதப்படுகிறன. இந்த விடியோக்களது கோணம், திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் ஸ்டடிகேம்கள் புட்டேஜ்கள் போலவே இருக்கும். ஸ்டடிகேம்கள் 'வியூவர்ஸ் பாய்ண்ட் ஆப் வியூ' எனப்படும் கதாப்பாத்திரத்தின்  கோணத்தில் காட்சியை நகர்த்த திரைப்படங்களில் பயன்படுத்தப்படுகின்றனது.  அந்த அம்சம் இந்த விடீயோக்களில் உள்ளது. இதுவே ஸ்னாப்சாட் ஸ்பெக்டகிள்ஸ் விடியோக்கள்,  பிறசெல்பி விடீயோக்களிலிருந்து தனித்தன்மை பெறக் காரணமாகிறது.

'லைவ் வீடியோ’ செய்ய ஒரு ஸ்பெஷல் கண்ணாடி... ஃபேஸ்புக்கே மிரள்கிறதா? #SnapchatSpectacles

இனி ஸ்னாப்சாட் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும் விடியோக்கள், பெரும்பாலும் ஸ்னாப்சாட் ஸ்பெக்டகிள்ஸ் விடீயோக்களாகத்தான் இருக்கும். தற்போது பேஸ்புக் பயனாளர்கள் செல்பி விடீயோக்களில் கருத்துக்களை பதிவுசெய்து, ஸ்மார்ட்போன் பேக்கேமரா வழியாக வாழ்க்கை சம்பவங்களைப் படம்பிடித்து, பதிவேற்றம் செய்துகொண்டிருக்க,  ஸ்னாப்சாட் பயனாளர்கள் ஸ்பெக்டக்கிள்ஸ் வீடியோ உதவியுடன் வேறுதளத்தை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றனர்.இதற்குப் போட்டியாக பேஸ்புக் அடுத்து என்ன ஹார்டுவேர் டிவைஸை வெளியிடும் என இணையப் பயனாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். நாமும் காத்திருப்போம்.
 

- வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்

அடுத்த கட்டுரைக்கு